
மங்கல விழாக்கள் அனைத்திலும் நாதஸ்வரம் ஒலிக்கும் -
குறிப்பாக நம் தமிழகத்தில்! திருவாவடுதுறை ராஜரத்
தினம் பிள்ளை, காருக்குறிச்சி அருணா சலம்... என்று,
நாதஸ்வரம் இசைப்பதில் புகழ் பெற்ற மேதைகள் பலர்.
ஆனால், கல் நாதஸ்வரம் பற்றித் தெரியுமா? ஆழ்வார்த்
திருநகரியில் உள்ள ஆதிநாதர் ஆலயத்தில் இருக்கிறது
இந்தக் கல் நாதஸ்வரம். வாசிப்பதற்கு ஏற்றவாறு இதில்
துளைகளும் அமைந்துள்ளன.
-
எஸ்.தணிகைவேல்,


இனிப்பு என்று சொன்னால், நமக்கு கரும்பு, வெல்லம்,
சர்க்கரை, அல்லது பலகாரங்கள்தாம் நினைவுக்கு வரும்.
ஆனால், பராகுவே நாட்டில் உள்ள ஒரு செடியை ‘இனிக்கும்
தாவரம்’ என்கிறார்கள். ஸ்டீவியா ரெபாடியானா (Stevia
rebaudiana) என்ற பெயர் கொண்ட இந்தத் தாவரத்தில்
இருந்து எடுக்கப்படும் இனிப்புச் சுவை, சர்க்கரையைவிட
300 மடங்கு அதிகம் என்கிறார்கள். எனவே, சர்க்கரைக்கு
மாற்றாகவும் இது பயன்படுத்தப்படுகிறது.
இப்போது
உலகின் பல்வேறு நாடுகளிலும் பயன்படுத் தப்படுகிறது
ஸ்டீரியா. இதன் இனிப்புத் திறனை முதன் முதலில்
ஆராய்ந்து கண்டறிந்தவர் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த
பெட்ரோ ஜெய்ம் ஸ்டீவ் (Pedro Jaime Esteve). அவருடைய
பெயரைக் கொண்டே, இந்தத் தாவரத்துக்கு ‘ஸ்டீவியா’ என்று
பெயரிடப்பட்டது.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பே
பராகுவே, பொலிவியா மற்றும் பிரேஸிலில் வாழ்ந்த
பழங்குடியினர் இதன் பயனை அறிந்திருந்தனர். உடலின்
அதிகப் பருமனைக் குறைக்கவும், உயர் ரத்த அழுத்தத்தைக்
குறைக்கவும், இன்றைய மருத்து வத்தில் ஸ்டீவியா
பயன்படுத்தப்படுகிறது.
சூரிய காந்தி
குடும்பத்தைச் சேர்ந்தது இந்த மருத்துவப் பயிர்.
இதிலிருந்து எடுக்கப்படும் ‘ஸ்டீவியோ சைட்’ மற்றும்
‘ரிபோடிசைட்’ சர்க்கரைக்கு மாற்றாக உணவில்
பயன்படுத்தப்படுகிறது. மிகக் குறைந்த சர்க்கரை மற்றும்
மாவுச் சத்து கொண்ட இந்தப் பொருட்கள், நீரிழிவு,
கொழுப்புச் சத்து தொடர்பான நோயுள்ளவர் களுக்கும் -
உணவுக் கட்டுப்பாட்டிலும் பயன்படுத்தப்படு கின்றன.
ஜப்பான், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, பிரேஸில்,
பிரான்ஸ், கனடா, சுவிட்சர்லாந்து, அமெரிக்கா உள்பட
உலகின் பல நாடுகள், இந்த ஸ்டீவியாவை பயன்பாட்டில்
கொண்டிருக்கின்றன. அதே சமயம், பிரான்ஸைத் தவிர மற்ற
ஐரோப்பிய நாடுகள், சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் ஆசிய
நாடுகள் இந்த ஸ்டீவியாவைப் பயன்படுத்தத் தடை
விதித்துள்ளன. என்றாலும், உலக சுகாதார நிறுவனம் (World
Health Organisation) ஒரு நபர் தன் எடையில் ஒரு
கிலோவுக்கு 4 கிராம் வீதம், ஸ்டீவியா கிளைகோசைட் (Stevia
Glycoside) சாப்பிடலாம் என்று அறிவித்துள்ளது.
சரி; இந்தியாவில் இதன் பெயர் என்ன தெரியுமா?
வடமொழியில் மதுபத்ரம், மராத்தியில் மதுபரணி,
தெலுங்கில் மதுபத்ரி. தமிழில்... சீனி துளசி!

தமிழ்ப் பாடவேளை. என் வகுப்புத் தோழன் ஒருவன்
மிகவும் குறும்புக்காரன். தமிழ்ப்பாடம் என்று
எழுதுவதற்குப் பதிலாக, ‘தமிழ்ப்படம்’ என்று போர்டில்
எழுதிவிட்டான்! வகுப்புக்குள் நுழைந்த ஆசிரியை அதைக்
கவனித்தார். அவன் தான் செய்திருப்பான் என்று புரிந்து
என்னடா, எழுதும்போது காலை விட் டுட்டே. உன் காலை அங்க
சேர்த் திடலாமா?" என்று கேலியாகக் கேட் டார். அசடு
வழிய எழுந்த அவன், உடனே போய் வேகவேகமாக தமிழ்ப் பாடம்
என்று திருத்தினான். அதன்பின், பாடம் எடுக்க ஆரம்பித்த
ஆசிரியை, நேற்று இலக்கண வகுப்பில் என்ன பாடம்
நடத்தினேன்?" என்று கேட்டார். உடனே அவன் மீண்டும்
உயிரெடுத் தீங்க மிஸ்!" என்றான் படக்கென்று. ஆசிரியை
உட்பட அனைவரும் சிரித்து விட்டோம். உயிரெழுத்து
என்பதைத் தான் ‘உயிர்’ என்று அவன் சொன்னான் என்றாலும்,
சொன்ன வேகம் சிரிப்பை பரவச் செய்தது நிஜம்.
- அதிபன் அன்புமணி,


சில பூச்சிகளின் தலையில் மெல் லிய கொம்புகள் போன்ற
அமைப்பு காணப்படும். இவை எதற்குப் பயன் படுகின்றன?
ஆங்கிலத்தில் இக்கொம்பு களை ‘ஆன்டெனா’ என்று
அழைப்பதுண்டு. இவை வாச னையை நுகர்வதற்காக அமைந்தவை.
இருப் பினும், அவற்றின் மூலம் தொடுமொழி யில் பூச்சிகள்
பல செய்திகளைப் பரி மாறிக் கொள்கின்றன. இரண்டு தேனீக்
களோ, அல்லது இரண்டு எறும்புகளோ தமது முன் கொம்புகளால்
நீண்ட நேரம் தொட்டுக்கொண்டிருப்பதை நாம் பார்த்
திருக்கிறோம். அந்தச் சமயத்தில் அவை தங்களுக்குள்
தகவல்களைக் கொடுத்து வாங்கிக் கொள்கின்றன என்று
பொருள். சில பூச்சிகள் இவற்றின் உதவியால் தங்கள்
சுற்றுப்புற ஒலிகளைக் கேட்டறிய வும் செய்கின்றன.
அதாவது, அவை காதுகளாகவும் செயல் படுகின்றன.
- சு. அபிஷேக்,

தசைகளோடு இணைந்துள்ள எலும்புகள், உடலின்
வடிவத்துக்கும் இயக்கத்துக்கும் உதவுகின்றன.
எலும்பினுள் உள்ள எலும்பு மஜ்ஜை, ரத்த அணுக்களை
உற்பத்தி செய்து புதிய ரத்தம் உருவாக உதவுகிறது. உடல்
வளர்ச்சிக்குத் தேவையான புதிய செல்களை உருவாக்குவதும்,
பழைய செல்களை அழிப்பதும் எலும்பின் வேலை தான்.
குறிப்பாக, வளரும் பருவத்தில் உள்ள குழந்தை களுக்குப்
புதிய செல்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்படி
பார்த்துக் கொள்பவை எலும்புகளே.
எலும்புகள்
திடமாக வளர வேண்டுமானால் கொலாஜன், கால்ஷியம் மற்றும்
பாஸ்பரஸ் சத்துகள் அவசியம். வயதுக்கு ஏற்ப, வெவ்வேறு
அளவுகளில் இவை தேவைப்படும். சிறுவர்களுக்குத் தினமும்
சராசரியாக 1200 மி.கி. கால் ஷியம்சத்து
தேவைப்படுகிறது. இதை ஒரு வேளை உணவில் 400 மி.கி.
அளவில் எடுத்துக்கொள்ளலாம்.
200 மி.லி. பாலில்
300 கிராம் கால்ஷியம் உள்ளது. காலை, மாலை, இரவு என
மூன்று வேளை பால் சாப்பிட்டாலே தேவையான அளவு கால்ஷியம்
கிடைத்துவிடும். பால் சாப்பிடப் பிடிக்காதவர்கள் மோர்,
தயிர், பாலாடை,, பால்கோவா, வெண்ணெய் என்று பாலில்
தயாரிக்கப்பட்ட எந்த உணவையும் சாப்பிட்டுக் கொள்ளலாம்.
அசைவப்பிரியர்கள் கெலுத்தி, நெத்திலி, வஞ்சரம், மத்தி
போன்ற மீன்களைச் சாப்பிடலாம். மீன் உணவு எலும்புக்கு
மட்டுமல்ல; இதயத்துக்கும் நல்லது.
கீரைகளில்
முள்ளங்கிக்கீரை, பசலைக் கீரை, புதினா, கறிவேப்பிலை,
கொத்த மல்லி போன்றவற்றில் கால்ஷியம் சத்து அதிகம்.
வாரம் இருமுறை கீரை, மற்ற நாட்களில் புதினா சட்னி,
கொத்த மல்லி சட்னி என்று விதவிதமாகச் சாப்பிட்டால்
உணவு போரடிக்காது. பாலில் வேகவைத்த ஓட்ஸ் கஞ்சி
கால்ஷியம் நிறைந்தது. அவ்வப்போது காலை உணவில் அதைச்
சேர்த்துக் கொள்ளலாம்.