0,00 INR

No products in the cart.

அன்புவட்டம்

– அனுஷா நடராஜன்

குற்றால அருவி, கும்பக்கரை அருவி, திற்பரப்பு அருவி, ஒகேனக்கல் அருவி… இதில் எந்த அருவியில் தங்களுக்குக் குளித்து மகிழ ஆசை?

– எஸ்.கெஜலட்சுமி ராஜேந்திரன், லால்குடி

கு, கும், திற், ஒ… எல்லா அருவிகளுமே பேஷ் பேஷ்தான்! ஆனால், குற்றால அருவி சம்திங் ஸ்பெஷல்! அதுக்குக் காரணம், எங்க தமிழாசிரியர் குப்புசாமி அய்யா!

’குற்றாலக் குறவஞ்சி’ பாடம் எடுக்கும்போது, குற்றால மலையின் கம்பீரம், காட்டு வளம், மூலிகைச் சிறப்பு, நீர்விழ்ச்சியின் அழகு என எல்லாவற்றையும் அப்படியே வர்ணித்துப் பாடுவார்.

`வானரங்கள் கனிகொடுத்து

மந்தியொடு கொஞ்சும்…’ என்ற பாடல் இன்றைக்கும் எனக்கு மனப்பாடம்!

`தேன் அருவித் திரை எழும்பி

வானின் வழி ஒழுகும்!

……செங்கதிரோன்

பரிக்காலும் தேர்க்காலும்

வழுகும்!’

அர்த்தம் என்னன்னா, தேனருவி அலை அப்படியே மேலே எழுந்து வானத்திலிருந்து கொட்டும். அப்போது சூரியனின் தேர் (ஏழு குதிரை பூட்டப்பட்ட பெரிய தேர்) வழுக்கி, `டூ மச் ஹைட் யா விடுறா சாமி` என்று சொல்லிக்கொண்டு, இடம் பெயர்ந்து செல்லுமாம்! எவ்வளவு அழகான கற்பனை! எவ்ளோ கிண்டல்?

அப்புறம், தமிழய்யா இன்னொரு கதை சொல்வார். குற்றாலத்தில் மூளைக் கலங்கியவர் களுக்கு சிகிச்சை அளிக்கவென்றே நிறைய வைத்தியசாலைகள் இருக்கின்றனவாம்!

(`கோடை வந்தால் ஊட்டிக்குப் போவேன்…

பைத்தியம் பிடிச்சா குற்றாலம் வருவேன்!’ – பூவா தலையா?)

அங்கே உள்ள நோயாளிகளை தினமும் குற்றால அருவியில் குளிக்கவைத்து, குற்றாலீஸ்வரரை தரிசிக்க வைப்பார்களாம். அப்போது தலைமை வைத்தியர், `குற்றால நாதருக்கு` என்று கூறியதும், `அரோகரா` என்று யார் சொல்றாங்களோ, அவங்களுக்குப் பைத்தியம் தெளிந்துவிட்டது என்று அர்த்தமாம். இதைச் சொல்லிவிட்டு, `குற்றால நாதருக்கு` என்பார். உடனே மாணவர்கள் நாங்கள் அனைவரும், `அரோகரா!` என்று கோரஸாகச் சொன்னதும், தமிழ் வகுப்பே கலகலப்பாகி விடும்!

இப்படியெல்லாம் நகைச்சுவையும் நயமும் கலந்து தமிழை ஊட்டும் ஆசிரியர்கள் இப்போது(ம்) இருக்கிறார்களா?

தமக்கு வந்த பரிசுப் பொருட்களை ஏலத்தில் வாங்க வருமாறு பொதுமக்களுக்கு மோடி அழைப்பு விடுத்துள்ளாரே?!

– வரலக்ஷ்மி சந்தானம், கோவை

விக்கிறது, ஏலம் விடுறது தவிர, வேற எதுவுமே உங்களுக்குத் தெரியாதா மோடி ஜி! அப்புறம்… அதுக்கும் ஜி.எஸ்.டி வரி ஏதும் உண்டா?

அக்கவுண்ட்டுல அந்த 15 லட்சத்தைப் போட்டு விட்டீங்கன்னா, ஷேர் ஆட்டோ பிடிச்சாவது வந்துடறோம் பி.எம்!

சமீபத்தில் ரசித்த கவிதை?

– சுகந்தி ராஜ், ஈரோடு

செல்போன்

மனிதனை

ஃபோட்டோகிராஃபராக்கியது…

போராளி ஆக்கியது…

பாடகர் ஆக்கியது…

நடிகர் ஆக்கியது…

மீண்டும் எப்போது

மனிதராக்கும்?!

அடுத்த கிரிக்கெட் பயிற்சியாளர் பதவிக்கு கும்ப்ளே, வி.வி.எஸ்.லக்ஷ்மணன் பெயர்கள் வலம் வருகின்றனவே! அப்படியென்றால் எதிர்பார்க்கப்பட்ட ராகுல் டிராவிட்?

– வாசுதேவன், பெங்களூரு

ராகுல் பெயர் அடிபட்டாலும், அவர் அவ்வளவா ஆர்வம் காட்டலையாமே… பை தி பை மிஸ்டர் வாசுதேவன், நாம்ப பார்க்கிறது வெறும் மைதானம், பந்து, மட்டை சமாச்சாரங்கள் மட்டும்தான்! உள்ளுக்குள்ளே உரசல், கட்டம் கட்டுதல், நண்டுபிடி, ‘அடித்த இலைக்கு ஜாங்கிரி’ அப்படின்னு ஏகப்பட்ட உள்குத்து இருக்கும். கிரிக்கெட் விளையாட்டுல இதெல்லாம் சாதாரணமப்பா…

ஆனால். அனில் கும்ப்ளே நல்ல தகுதியானவர்தான். நூறு டெஸ்ட் போட்டிகளுக்கு மேல விளையாடிய அனுபவம், பயிற்சியாளர் அனுபவம்னு டேலண்ட் ஆசாமிதான்!

அணிலோ, ஆடோ, இலையோ… ஜெயிக்க வெச்சா ஈ…ஈதானே?

`தலைவி’ எப்படி?

– உஷாராணி, சென்னை

`பயோ பிக்’ என்று சொல்லப்பட்ட படம். ஆனால், ‘கற்பனைப் படைப்பு’ என்று துவக்கத் திலேயே தெரிவித்து விடுவதால், ஜெயலலிதாவின் சாதனைகளை மட்டுமே சொல்கிறது. நிஜ வாழ்க்கையில். ‘ஜெ’ யார்?’ என்று காட்டவில்லை. நடிப்பு, காஸ்ட்யூம், ஒளிப்பதிவு என தொழில்நுட்ப சங்கதிகளால் பிரமாதப்படுத்தியுள்ளனர். ஆனால், `தலைவி’ நாம் அறிய ஆசைப்பட்ட பெண் இல்லை! சமரஸத் தலைவி!

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

சுதந்திர இந்திய வளர்ச்சிக்கு விதைகள்! தாமஸ் மன்றோ – 2

0
- அ.பூங்கோதை பிற பிரிட்டிஷ் அதிகாரிகளைப் போலன்றி, மக்களுக்கு நெருக்கமானவராக இருந்தார் மன்றோ. அதற்காகவே தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளைக் கற்றுக்கொண்டார். ஒடுக்கப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கெல்லாம் தனது குதிரையில் பயணம் செய்து...

`நமக்கு நாமே` – முதியோர் மந்திரம்

0
சந்திப்பு : பத்மினி பட்டாபிராமன் அக்டோபர் முதல் தேதி, உலக முதியோர் தினமாக அனுசரிக்கப்படுவதையொட்டி சென்னை, இந்திரா நகரில் இயங்கிவரும் இந்தியாவின் முதல் `முதியோர் நல மல்டி ஸ்பெஷாலிடி மருத்துவமனை’ ஜெரி கேர் (Geri...

துர்கா தேவி சரணம்!

0
- ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி * ’துர்க்கம்’ என்றால் அகழி எனப் பொருள். அடியார்களுக்கு அகழி போல் அரனாக இருந்து பாதுகாப்பவள் துர்கை எனப்பட்டாள். துர்க்கமன் என்ற அரக்கனை அழித்ததால், அம்பிகை துர்கை எனப்பட்டதாகவும் கூறுவர்....

எடைக் கட்டுப்பாடு!

0
- இந்திராணி தங்கவேல், மாடம்பாக்கம் உடல் எடை பற்றி ஆராய்ச்சி செய்தவர்கள், ஓர் அபூர்வமான உண்மையை கண்டுபிடித்துள்ளனர். அதாவது, காலையில் லேட்டாக எழுந்து கண்ணைக் கூசும் சூரிய வெளிச்சத்தைப் பார்ப்பவர்களை விட, அதிகாலையில் இருள்...

தள்ளு வண்டியில் தட்டு வடை!

0
நேர்காணல் : சேலம் சுபா பரத்துக்கு செம பசி. என்னதான் சம உரிமை என்றாலும் சசி சமையல்கட்டு பக்கம் வராத வாரத்தின் மூன்று நாட்கள் அவனுக்கு எப்போதுமே கண்டம் தான். நல்லா வயிறு முட்ட...