online@kalkiweekly.com

spot_img

அன்புவட்டம்

– அனுஷா நடராஜன்

மறைந்த கவிஞர் புலமைப்பித்தன் பாடல்களில் அனு ரசித்தவை?
– வாணி வெங்கடேஷ், சென்னை
அவர் நிறையவே எழுதியிருக்கிறாரு… சாம்பிளுக்கு ஜஸ்ட் ஃபைவ்!
* ‘நான் யார்… நான் யார்… நீ யார்…?’ (எளிய வார்த்தைகளில் எவ்ளோ பெரிய தத்துவம்?!)
* ‘உச்சி வகுந்தெடுந்து, பிச்சிப்பூ வெச்ச கிளி’ (‘கிளி மேயுமா?’ இந்த ஒரு வார்த்தையில் மனைவியின் நடத்தை பற்றிய பாடல் என தெரிந்து விடுகிறது… சிச்சுவேஷன் உருக்கம்.)
* ‘ஆயிரம் நிலவே வா…’ (ஜெய்ப்பூர் அரண்மனை, ஜெயலலிதா- எம்.ஜி.ஆர். என்ன ஒரு ரசனையான காதல் மெலடி? ‘நள்ளிரவு துணையிருக்க… நாமிருவர் தனியிருக்க…’)
* ‘வீணைக்கு வீணைக் குஞ்சு நாதத்தின் நாதப் பிஞ்சு’ (கர்ப்பவதியான மனைவிக்குக் கணவன் பாடும் பாட்டு… முதல் வரியே நல்ல கற்பனை!
* ‘ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ?’ (அடடா! இளையராஜாவின் அபூர்வ இசைக்கு ஏற்ற சொகுசான கவிச்சந்தம்+ சொக்க வைக்கும் உவமைகள்.)
* ‘கல்யாணத் தேன் நிலா… காய்ச்சாத பால் நிலா…’ (என்ன… அஞ்சே அஞ்சுன்னு சொல்லிட்டு, ஆறு எழுதிட்டாங்களேன்னு நினைக்கிறீங்களா? கை தானா எழுதிடுச்சு… ஹி… ஹி!)

பேரம் பேசுவது கலையா?
– வாசுதேவன், பெங்களூரு
நிச்சயம் இல்லை… யார்கிட்ட நாம்ப பேரம் பேசறோம்? ஏழை, எளியவங்ககிட்டதானே? அவங்களுக்கும் எப்படியாவது விற்று காசாக்கினாதான், அன்றைய சோற்றுக்கு வழி! அதனால, அரைகுரை மனசோட, நம்ப பேரத்துக்கு ஒத்துக்கிறாங்க!
ஆனா, ஹோட்டல்ல, நகைக்கடையில, வாயைத் திறக்கிறோமா? பெரிய ஸ்டோர்கள்ல, மால்கள்ல பில் போடும்போது ஒரு இரண்டு ரூபாய் குறைஞ்சாலும், அடுத்த ‘பில்’லுக்குப் போகாமல் வெயிட் செய்வாங்க. எப்பவாவது, மொத்தமாய் டஜன் கணக்கில் வாங்கும்போது, பேரம் பேசுவது நல்லதுதான். கடைக்காரரும், ‘குட்வில்’லுக்காக விட்டுக் கொடுப்பார்.
ஆனால், என் பாலிஸி… ஓவர் ரேட்டாக இருந்தால் நகர்ந்து விடுவேனே தவிர, நோ பேரம்! நோ எனர்ஜி விரயம்!
பை தி பை, மிஸ்டர் வாசுதேவன்…. நீங்க சென்னை பக்கம் வந்து பேரம் பேசியதில்லை போல!
’ஐயே…! ஆப்பிளு வாங்குற மூஞ்சப் பாரு… சாவு கிராக்கி… வந்துட்டாளுங்க பைய தூக்கிகினு…” என்று கலாய்த்து அனுப்பி விடுவார்கள். மானம் மெட்ரோ ரயில் ஏறும். ஸோ, பேரம் பேசுவது கலை அல்ல; கவலை!

‘அண்ணாத்த’ மோஷன் போஸ்டர் பார்த்தீங்களா?
– சுகந்தி ராஜ், ஈரோடு
முன்னெல்லாம் ஒரு சினிமா வந்தால், போஸ்டர் ஒட்டுவாங்க. பெரிய நட்சத்திரம் என்றால், கட் அவுட் வைப்பாங்க… சிலோன் ரேடியோ, எஃப். எம்.ல பாடல்கள் ஒலிபரப்புவாங்க. கேஸட் கேட்போம். படத்துல சரக்கு இருந்தா படம் தானா ஓடும்!
இப்ப, ஃபஸ்ட் லுக்காம், அப்டேட்டாம், ப்ரோமோ ஸ்டில்லாம், டீஸர் பிட்டாம், மோஷன் பிக்சராம், ஃபஸ்ட் சாங் ரிலீஸாம்… என்னா பில்ட் அப்பு? ‘அண்ணாத்த’ ஸ்டில்லில் பாவம், ரஜினியை பைக்ல பொம்மை மாதிரி உட்கார வெச்சுருக்காங்க! கையில அருவாள் எதுக்குத் தலைவா? சாணை பிடிக்கவா? என்னத்த நடிச்சு…? என்னத்த பார்த்து…?

தமிழகக் கோயில்களில் இலவச மொட்டையாமே?
– எஸ்.கெஜலட்சுமி ராஜேந்திரன், லால்குடி
திருப்பதியில் கூடத்தான் மொட்டை இலவசம்! ஆனா, அங்க போய் உட்கார்ந்ததும், ‘பிளேடுக்குக் காசு’ (அதுவும் அரை பிளேடு!) என்று சொல்லி ‘பணம் வை’ என்று தெலுங்கில் சொல்லிக்கொண்டே சிக்னல் காட்டுவார்கள். ’’இலவசம்தானே?” என்று தெரியாமல் கேட்டுவிட்டால், ’’அக்கட வெள்ளூ!” என்று திருப்பி அனுப்பிவிடுவார்கள். பழக்கப்பட்டவர் கள், தாமாகவே பணம் வைத்துவிட்டு, தலையைக் குனிந்து காட்டுவார்கள். மொட்டை, சுத்தமாக வழிக்கப்படும். ’யாதும் ஊரே… யாவரும் கேளிர்… டிப்ஸே எங்கள் உலகத் தத்துவம்!’

அனு மேடம், பிள்ளையார் சதுர்த்தியை எப்படிக் கொண்டாடினீர்கள்?
– ஆ.பூங்கோதை, செங்கல்பட்டு
இதோ இப்படி! ஒரு முதியோர் இல்லத்தில்… பிள்ளையாருடன்! மீண்டும் சிறு பிள்ளையாக மாறி விட்டவர்களுடன்…

ஆப்கானிஸ்தான்…?
– சி.கார்த்திகேயன், சாத்தூர்
ஏம்பா… எனக்கு உள்ளூர் அரசியல் நிலவரமே இன்னும் சரியா புரியலை. இதுல ஆப்கானிஸ்தானா?
ஆனா, அங்க ஏதோ பெரிய பிரச்னைன்னு புரியுது! நாட்டோட பேரையே ‘இஸ்லாமிக் எமிரேட் ஆஃப் ஆஃப்கானிஸ்தான்’னு மாத்துற அளவுக்கு தீவிரவாத நாடா ஆயிட்டிருக்குன்னு சொல்லிக்கிறாங்க. அங்க இருக்குற அடிப்படை நெருக்கடிய சமாளிக்கணும்னா 4,442 கோடி பணம் தேவைப்படும்னு ஐ.நா. சபை தெரிவிச்சுருக்காம்!
பழைமை வாத சட்டங்கள், பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறை, சவுக்கடி, துப்பாக்கிச் சூடுன்னு அந்த நாடே கற்காலத்துக்குத் தள்ளப்பட்டிருக்காமே!
சபிக்கப்பட்ட அந்த பூமியில் வாழும் மக்கள், குறிப்பாகப் பெண்கள், அப்பாவிக் குழந்தைகளை நினைச்சாலே மனசு வலிக்குதுங்க!

Related Articles

Stay Connected

264,228FansLike
1,876FollowersFollow
1,500SubscribersSubscribe
spot_img

To Advertise Contact :

Related Articles

அன்பு வட்டம்!

ஹார்லிக்ஸ் விளம்பரத்தில் வரும் பெண் குழந்தையின் ஸ்டைல் நடையை ரசித்தீர்களா அனுஷா மேம்? - ச.சிவசங்கரி சரவணன், செம்பனார்கோவில் நடையை விடுங்க... 'ஹார்லிக்ஸ்?'னு அம்மா ஆச்சரியத்துடன் கேட்டதும், ‘நயி... பாலக் பனீர்’ (தமிழ்ல கீரைப் பொரியல்)னு...

அன்பு வட்டம்

0
- அனுஷா நடராஜன் மங்கையர் மலர் புதிய வடிவில் உருவாகி உள்ளதால் வாசகியரின் வரவேற்பு எப்படி உள்ளது? - சரஸ்வதி, நெசப்பாக்கம் வாரா வாரம் ஆரவாரம்! நாங்கள் எதிர்பார்த்ததை விட சிறப்போ சிறப்பு! எனக்கும் ரொம்ப சந்தோஷம்,...

மனதை திசை திருப்பு!

0
எழுத்து : லேzy ஒரு கப் zen - 10 காவிரிக் கரையோரம் ஆரவாரமில்லாத ஒரு குக்கிராமம். ஆள் நடமாட்ட மில்லா ஆயிரம் ஆண்டு சிவாலயம். பழுதடைந்த கோபுரம், செடிகள் முளைத்த மண்டபம். காடாகிக் கிடந்த பூந்தோட்டம், கவனிப்பாரின்றி வளர்ந்து நிற்கும் தென்னந்தோப்பு. ஆழ்ந்த நித்திரையில்...

விநாயகர் சதுர்த்தியும் காக்கைகளும் !

0
- மங்கை ஜெய்குமார் எங்கள் குடியிருப்பில் இரண்டாம் தளத்தில் வசிக்கும் பெண்மணி தினமும் மொட்டை மாடியில் காக்கைகளுக்கு சாதம் வைப்பது வழக்கம். நானும் என் கணவரும் காலையில் மொட்டை மாடிக்கு நடை பயிற்சிக்காகச் செல்லும்...

தாலிபான் தலையீடு – தவிடுபொடியாகும் மகளிர் விளையாட்டு!

0
-ஜி.எஸ்.எஸ். ’கிரிக்கெட் விளையாட்டு பெண்களுக்கு ஏற்றதல்ல. அப்படி ஆடும்போது அவர்களின் முகமும், உடலின் சில பகுதிகளும் முழுமையாக உடையால் மறைக்கப்படாமல் போகலாம். இஸ்லாமிய நெறிகள் இதை ஒருபோதும் அனுமதிக்காது’ - இப்படிக் கூறியிருக்கிறார் ஆப்கானிஸ்தானைக்...
spot_img

To Advertise Contact :