0,00 INR

No products in the cart.

அரசு யோசிக்க வேண்டும்

உங்கள் குரல்

விரைவில் `கல்கி` மின் இதழ் அறிமுகப்படுத்தப் போகும் சந்தா முறையை வரவேற்கும் லட்சக்கணக்கான பேர்களில் நானும் ஒருவன் என்பதில் பெருமை கொள்கிறேன். (ஆயுட்) சந்தா விவரங் களுக்காகக் காத்திருக்கிறோம். கல்கியோடு இணைந்திருப்பதில் பெருமை + திருப்தி அடைவதோடு தெளிவு கொள்கிறேன். சந்தா விவரத்தை விரைவில் அறிவிக்க வேண்டுகிறோம். – நெல்லை குரலோன், பாப்பான்குளம்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் பிரிட்டனின் 18 வயதே ஆன எம்மா ரடுகானு பட்டம் வென்றது மகிழ்ச்சியான செய்தி. உலக டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் 150வது இடத்தில் இருக்கும் அவர், அனைத்து சுற்று களிலும் நேர் செட்களில் வென்றிருப்பது மிகச் சிறப்பு. – ஸ்ரீகாந்த், திருச்சி.

மென்பேனா வழியாகப் படைப்புகளை அனுப்பும்போது அதற் குரிய படங்களையும் நாமே அனுப்பவேண்டும் என்ற நிபந் தனைக் கடினமாக இருக்கிறது.- பாமதி நாராயணன், பெங்களூரு.

‘லாபம்’ திரைப்படம் எப்படி? என்ற ஒரு வாசகரின் கேள்விக்கு நஷ்டக்கணக்கில் தொடங்கி இருக்கிறது என்ற தராசுவின் பதில் ‘நச் சென்று இருந்தாலும் வேதனையுடன் ‘உச்’கொட்ட வைத்தது. –நந்தினி கிருஷ்ணன், மதுரை.

சோம வள்ளியப்பன் எழுதிய ‘வியாபார தர்மம்’ சிறுகதையைப் படித்ததும் மனம் நெகிழ்ந்தது. உண்மைதான். ஏழையாக இருந்தாலும் தன்னுடைய வியாபாரத்தில் ஒரு தர்மம் காக்கும் அந்தப் பெண்மணி பெரிய தொழிலதிபராக மனக்கண் முன்னால் நின்றாள். ரசிக்க வைத்த மனநிறைவு தந்த சிறுகதை. – பிரகதா நவநீதன், மதுரை.

‘உள்ளாட்சித் தோ்தலும் உடையும் கூட்டணியும்’ கவர் ஸ்டோரி மிக மிக அருமை. உடைந்து வெளியே வரும் நிலையில் பா.ம.க., அது ஒரு கனாக் காலம் என்பது போல கடந்து போன நிகழ்வுகள், ஆஹா என்ன ஒரு அா்த்தம் செறிந்த அட்டைப்படம். அதில் முதல்வா் ஸ்டாலின் மற்றும் பா.ம.க. தலைவா் ராமதாஸ் இருவரின் பார்வையும் அப்பப்பா பேஷ் பேஷ். – ஆர்.நாகராஜன் செம்பனார் கோயில்.

‘அண்ணலின் புதிய பார்வை’ என்ற பகுதியில் அண்ணல் காந்தி பற்றி படித்ததும் மனம் நிறைவாக இருந்தது. காந்திஜி அரை ஆடைக்கு மாறிய நிகழ்வு ஏற்பட்டு நூறாண்டுகள் அடைந்துவிட் டாலும் நாம் காந்தியை மறக்காமல் இருப்பதற்குக் காரணமே அவரு டைய எளிமையான உடை மற்றும் சுபாவம் மட்டும்தான் என்று புரிந்தது. ‘சொல்லுக்கும் செயலுக்கும் வேறுபாடு இல்லையானால் ஆடை ஒரு தடை அல்ல’ என்பதை காந்தி வாழ்ந்து நிரூபித்தார். இதுதான் காந்தியின் ‘மேக் இன் இந்தியா’ என்ற வரிகள் நெஞ்சைத் தொட்ட அருமையான வரிகள். – ராதிகா

புத்தக வடிவத்தில் `கல்கி`யை சந்தாதாரர்களுக்கு வாரம்தோறும் அனுப்பினால் பேரானந்தம் பெறுவோம். சந்தா எவ்வளவு என்பது பொருட்டல்ல. மேலும் கல்கி வாசகர்களை ஒருங்கிணைத்து அறப் பணிகளில் அர்ப்பணிக்க தாங்கள் செயல் திட்டத்தில் ஈடுபட்டால் மகிழ்ச்சியாக இருக்கும். இதற்காக வருட நன்கொடை அளிக்கவும் சம்மதிக்கிறேன். – மாடக்கண்ணு, பாப்பான்குளம்.

‘தலையங்கத்’தைப் படித்ததும் அதிர்ச்சியாக இருந்தது. உண்மைதான் ‘இனி ஒரு விதி செய்வோம்’ என்று எண்ண வைத்த அருமையான தலையங்கம். 25 ஆண்டுகளாக நடந்துவந்த ஒரு தொழிற்சாலை மூடப்பட்டால் அதில் வேலை செய்பவர்களின் பொருளாதாரம் என்னவாகும் என்று யோசிக்க வேண்டும். உண்மையிலேயே மனம் வேதனை அடைய வைத்த தலையங்கம். இதற்கு தமிழக அரசு உடனே தலையிட்டு ஊழியர்களுக்கு ஒரு வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும் என்று குரல் கொடுத்த தலையங்கத்திற்கு ஒரு ராயல் சல்யூட். – உஷா முத்துராமன், மதுரை.

 

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

வானில் ஒலித்த பாரதியின் பாடல்கள்

0
பாரதி நினைவு நாள் நூற்றாண்டு சாந்தி ஜெகத்ரட்சகன் செப்டெம்பர் 18, காலை 5 மணி. பரபரப்பாக இயங்கத் தொடங்கிய சென்னை விமான நிலையத்தின் புறப்பாடு மையம் திடும் மென்று குழந்தைகளின் குரலில் பாரதியார் பாடல்கள் ஒலித்தன....

400 ஆண்டுகால வியாபாரம்

0
வாசகர் கேள்வியும் வல்லுநர் பதிலும் சோம.வள்ளியப்பன் பங்குச்சந்தை ஒரு வகை சூதாட்டம் தானே! பத்திரிகைகள் பணம் பெற்றுக்கொண்டு பரிந்துரைகள் எழுதுவதாகவும் அறிகிறேன். பங்கு சந்தை கள் ஏன், எப்படி, எங்கு. என்று தோன்றின?   - திருவரங்க வெங்கடேசன்,...

ஷங்கரிடமிருந்து நான் கற்றுக்கொண்டது

0
ஸ்டார்ட்...கேமரா...ஆனந்த்-15 எஸ்.சந்திரமௌலி "டைரக்டர் ஷங்கர் ரொம்பவும் அதிர்ஷ்டசாலி. அவருக்கு மக்களைக் கவரும் வகையில் பாடல் காட்சிகளையும், சண்டைக் காட்சிகளையும் எடுக்கத் தெரிந்திருக்கிறது. எல்லாவற்றையும் மிகப் பிரம்மாண்டமாகக் காட்டி அவர் மக்களை மிரட்டிவிடுகிறார். அதனால் அவரது படங்கள்...

அஞ்சலி

0
ஓவியம் : ராஜன்

கொலுவில் ‘அப்பூச்சி’

0
கடைசிப் பக்கம் சுஜாதா தேசிகன் கல்கி கடைசிப் பக்கம் படிப்பவரா? நீங்கள் எந்த ராசியாக இருந்தாலும் இந்த வாரம் உங்கள் ராசி பலனைக் கணிப்பது சுலபம். இந்தப் பக்கத்தைப் படித்துக்கொண்டு இருக்கும் ராசிக்காரர்களே! நீங்கள் உங்கள்...