பச்சை வெண்டைக்காய் மனதுக்கு உற்சாகம்!

பச்சை வெண்டைக்காய் மனதுக்கு உற்சாகம்!

உடல் ஆரோக்கியம், உள்ள ஆரோக்கியம் இரண்டிற்குமே நம்முடைய மன நிலைதான் காரணம் ஆகும். பச்சை காய்கறிகளை பார்த்தவுடன் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருக்கும். சில நேரங்களில் பச்சையாகவே கூட சாப்பிட்டு விடுவேன். அது உடலுக்கு நல்லது என்பதால் பிடிக்கும்.அதுவும்  பச்சை பசேல் வெண்டைக்காயைப் பார்த்தால், அப்போதே சமைத்து சாப்பிடவேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டு எனக்கு உடலும் உள்ளமும் உற்சாகம் அடைகிறது.

மன ஆரோக்கியம் நம்முடைய கையில் தான் இருக்கிறது.. கவிதைகள் எழுதும் போது, இயற்கையை ரசிக்கும்போது.. என பல சமயங்களில் உற்சாகடைந்து  மன ஆரோக்கியமும் கிடைப்பதை நான் உணர்கிறேன்

-உஷா முத்துராமன், திருநகர்

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com