online@kalkiweekly.com

உள்ளாட்சித் தேர்தல் ரிசல்ட் எப்படி இருக்கும்?

தராசு பதில்கள் / நீங்கள் கேட்டவை

பாரதியார் நூற்றாண்டில் ஜதி பல்லக்கில் பாரதியின் சிலையை வைத்து தூக்கி ஊர்வலம் வருவதாகப் படித்தேன். ஜதி பல்லக்கு என்றால் என்ன?

– திருவரங்க‌ வெங்கடேசன், பெங்களூரு

பாரதியார் எட்டயபுரத்தில் கவிதைகளால் வேள்வி நடத்திய காலத் தில் அவர் புகழ் பரவத் தொடங்கியது. அப்போது எட்டயபுரத்து மன்னன் பாரதியை அரசவைக்கு நேரில் வந்து கவிதை பாட வேண்டுமென்று அழைப்பு விடுத்தார். அதற்குப் பொன்னாடையும், பொற்கிழியும் கொடுத்தனுப்பி ஜதி பல்லக்கில் தூக்கி வந்தால் மட்டுமே அரசவைக்கு வரமுடியும் என்று சொல்லி இருக்கிறார் பாரதி ஆனால் அவரது அசை நிறைவேற வில்லை. அதை இப்போது ஆண்டுதோறும் அவரது பிறந்த நாளில் சென்னை திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதி கோவிலிலிருந்து அவர் வாழ்ந்த வீட்டிற்கு ஜதி பல்லக்கில் அழைத்து வரப்படுகிறார். பிரபலங்கள் இந்தப் பல்லக்கைச் சுமப்பதை கெளரவமாகக் கருதி பங்கேற்கின்றனர். கடந்த பல வருடங்களாக இந்த விழாவை நடத்துகிறது வானவில் பண்பாட்டு மையம் என்ற அமைப்பு.

இப்போது எல்லோரும் பல பொருட்களின் விலைகளை 199, 499 என்றெல்லாம் நிர்ணயம் செய்கிறார்களே? எண் 99க்கு அப்படியென்ன சிறப்பு?

– லட்சுமி, திருச்சி

முதலில் சொல்லப்பட்டிருக்கும் ரூபாய் அதிக விலை இல்லை என்ற மனோநிலையை உருவாக்கும் என்ற எண்ணத்தில் பாட்டா ஷூ நிறுவனம் தொடங்கிய வழக்கம் இது. ஆனால் இன்றைய வணிகச் சூழலில் இதெல்லாம் ஏமாற்றும் வணிக தந்திரம் என்பதைக் குழந்தைகூட அறிந்திருக்கிறது

மீதி உள்ளாட்சித் தேர்தல் ரிசல்ட் எப்படி இருக்கும்? -சண்முகசுந்தரம் ஏர்வாடி

தமிழக அரசியலில் ஒவ்வொரு பொதுத் தேர்தலுக்குப் பின் வரும் உள்ளாட்சித் தேர்தல்களில் ஆளும் கட்சியினர் அதிக இடங்கள் வருவது தான் வாடிக்கை. இம்முறை இந்த நிலை மாறும் என அரசியல் கட்சிகள் கணிக்கின்றன. அதனால் ஆளும், எதிர்க்கட்சிகள் தீவரமாகப் பணியாற்றத் தொடங்கியிருக்கின்றனர்.

சப்ஸ்கிரைப் என்றதும் தராசாருக்கு என்ன எண்ணம் வரும்? -கண்ணகி, திண்டுக்கல்

விரைவில் கல்கி மின் இதழ் அறிமுகப்படுத்தப் போகும் சந்தா முறையில் எத்தனை ஆயிரம் பேர் சேர்வார்கள் என்ற எண்ணம்தான்.

சினிமா நடிகர்களை எதற்கு `ரோல் மாடலாக` எடுத்துக்கொள்ளலாம்? தராசாரே? -வாசக நண்பன், சென்னை

திரையில் நடிப்பதைத் தாண்டி அவர்களது சமூகப் பணிகளுக்காக எடுத்துக்கொள்ளலாம். அண்மையில் நடிகர் சூர்யா? `நீட்` தேர்வு எழுதிய மாணவிகள் சிலர் பயத்தால் தற்கொலை செய்துள்ள நிலையில் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அதில் நானும் பல தேர்வுகளில் தோல்வி அடைந்திருக்கிறேன். மோசமான மதிப்பெண்கள் வாங்கி இருக்கிறேன். தேர்வு மட்டுமே வாழ்க்கை அல்ல. மனஅழுத்தம் எதிர்கொள்ளும் மாணவர்கள் யாரிடமாவது மனம்விட்டுப் பேசுங்கள் என்றும் என்று சொல்லியிருப்பது ஒரு நல்ல உதாரணம்.

அரசுப் பணிகளில் பெண்களுக்காக இடஒதுக்கீடு 40 சதவிகிதமாக உயர்த் தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது பற்றி? – ஆ. மாடக்கண்ணு, பாப்பான்குளம்.

இது அவசியமற்றது. இந்த ஒதுக்கீடு அதிகரிப்பு முன்னரே பல அரசு அலுவலகங்களில் மகளிர் 50%க்கு மேல் பணியிலிருக்கிறார்கள். அரசுப் பணிகளுக்குத் தேவை ஆற்றலே தவிர பாலினப் பாகுபாடுடன் கூடிய ஒதுக்கீடு மட்டும் இல்லை.

`லாபம்` படம் எப்படி? -நெல்லைக் குரலோன்

நஷ்டக்கணக்கில் தொடங்கியிருக்கிறது என்கிறார்கள் திரை அரங்க உரிமையாளர்கள்.

நீட் தேர்வு முடிந்த மறுநாள் சட்டமன்றத்தில் அதற்கு எதிரான தீர்மானம் ஏன்? – சா.சொக்கலிங்க ஆதித்தன்

தேர்வு நாள் தேர்வை நடத்தும் ஆணையத்தாலும், சட்டமன்றக் கூட்ட நாட்கள் சபாநாயகராலும் வெவ்வேறு காலகட்டத்தில் தீர்மானிக்கப் பட்டவை. தேர்வுக்கு மறுநாள் தீர்மானம் என்பது தற்செயல். தீர்மானம் அவசியமா? அது சாதிக்கப் போவது என்ன என்பதுதான் கேள்வி.

மகளிர் சுயஉதவிக் குழு கடன்களுக்கு வட்டி வீதம் குறைக்கப்பட் டிருக்கிறதே?- ஜி.ஆனந்தமுருகன், சென்னை

தமிழ்நாட்டில் உள்ள மகளிர் சுயஉதவிக் குழுக்கள் வாங்கும் ரூ. 3 லட்சம் வரையிலான கடன்களுக்கான வட்டி வீதத்தை 12%-லிருந்து 7%ஆகக் குறைக்கத் தமிழ்நாடு அரசு முடிவெடுத்திருப்பது வரவேற்புக் குரியது. இந்த வட்டி குறைப்பால் 3,63,881 குழுக்களைச் சேர்ந்த 43,39,780 பெண்கள் பயனடைவார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் அனைத்து மகளிர் சுயஉதவிக் குழுக்களுமே கூட்டுறவுக் கடன் நிறுவனங்களுடன் இணைக்கப்படவில்லை என்பதும், பெரும்பாலான குழுக்கள் தேசிய வங்கிகள், நிதி நிறுவனங்களுடன்தான் இணைந்துள்ளன என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய உண்மை. அனைத்து சுயஉதவிக் குழுக்களும் கூட்டுறவு கடன் நிறுவனங்களுடன் இணைக்கப்பட வேண்டும். அல்லது தேசிய வங்கிகளின் கடன் வட்டி வீதங்கள் இந்த அளவுக்குக் குறைக்கப்பட வேண்டும்.

மோடி அரசு விளம்பரத்திற்காக அதிகம் தொகை செலவிடுகிறது என்ற குற்றச்சாட்டு உண்மையா? – வண்ணை கணேசன், சென்னை

2014-ம் ஆண்டு மே மாதத்தில் நரேந்திர மோதி அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஜனவரி 2021 வரை இதுவரை ஒட்டுமொத்தமாக ரூபாய் 5,749 கோடி ரூபாயை விளம்பரங்களுக்காக மட்டுமே செலவிட்டுள்ளது இந்திய அரசு என்கிறது இந்திய அரசின் விளம்பரங்கள் தொடர்பான விவகாரங்களை கையாளும் பீரோ ஆப் அவுட்ரீச் அண்ட் கம்யூனிகேஷன்

கொரோனா சிகிச்சை, மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை செய்துகொள்வது, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் வரும் என்று இந்திய அரசு ஏப்ரல்

2020-ல் அறிவித்தது. இந்தத் திட்டத்தின் கீழ் பணம் இல்லாமல் மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்வதுடன், ஒரு குடும்பம் ஒன்றுக்கு அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் வரை காப்பீட்டின் கீழ் பலன்களைப் பெற்றுக்கொள்ள முடியும் .ஆனால் இந்த ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டை பிரபலமாக்க மொத்த விளம்பரச் செலவில் 0.01% மட்டுமே. இந்த இந்திய அரசின் மிகப் பெரிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தைப் பிரபலப்படுத்துவதை விட சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, போராட்டங்களைத் தூண்டிய வேளாண் திருத்தச் சட்டங்கள் ஆகியவற்றைப் பிரபலப்படுத்துவதற்காக இந்திய அரசு அதிகமான பணத்தைச் செலவிட்டுள்ளது என்ற விவரம் இந்த அறிக்கையின் மூலம் அறியமுடிகிறது.

விற்பனையகப் பணியாளர்கள் பணி நேரத்தில் அமர்வதற்கான வசதிகள் கண்டிப்பாகச் செய்துதரப்பட வேண்டும் என்று சட்டமியற்றப்பட்டிருக் கிறதே? – அயன்புரம் சத்தியநாராயணன், சென்னை

கேரளத்தையடுத்து தமிழ்நாடு அரசும் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளது பாராட்டுக்குரியது. தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் 1947-ல் கொண்டுவரப்பட்டுள்ள சட்டத் திருத்தமானது தொழிலாளர் உரிமைகளுக்கான நீண்ட நெடிய போராட்ட வரலாற்றில் நிச்சயம் ஒரு மைல்கல். ஆனால் அவ்வாறு வசதிகளைச் செய்து தராத கடை உரிமை யாளர்களுக்கு இச்சட்டத் திருத்தம் எவ்வகையான தண்டனையையும் விதிக்கவில்லை. கடை உரிமையாளர்களுக்கான பொது அறிவுறுத்த லாகவே இந்தச் சட்டத் திருத்தம் அமைந்துள்ளது. தொழிலாளர் சட்டங்கள் முறையாகப் பின்பற்றப்படாத நிலையில், அறிவுறுத்தலை நடைமுறைப் படுத்துவது என்பது விற்பனையக உரிமையாளர்களின் விருப்பத் தேர் வாகவே அறிவித்திருப்பதுதான் சோகம்.

அண்ணா பல்கலைக்கழக செனட் உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளாரே? இது எதைக் காட்டுகிறது? -நா. சரவண நாகராஜன், செம்பனார்கோவில்

இளவரசரை முன்னிலைப்படுத்தும் அவசரத்தைக் காட்டுகிறது. எம்.எல்.ஏ.க்களுக்கான பிரதிநிதித்துவப் பிரிவின்கீழ், அண்ணா பல்கலை சிண்டிகேட் உறுப்பினராக உதயநிதி தேர்வாகி உள்ளார். ஒவ்வொரு பல்கலையிலும் சிண்டிகேட் கமிட்டியில், ஒன்று அல்லது இரண்டு எம்.எல்.ஏ.க்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவர். .சிண்டிகேட் பிரதிநிதியாக விரும்பும் எம்.எல்.ஏ.க்கள், சபாநாயகரிடம் விண்ணப்பம் அளித்தால், அதில் யாருக்குப் பதவி என்பதைத் தேர்வு செய்து சபாநாயகர் அறிவிப்பார். சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கும் முன்னாள் ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள் இப்படி நியமிக்கப்படுவது வழக்கம். இம்முறை முதல் முறை யாகச் சட்டமன்றத்துக்குள் நுழைந்த உதயநிதி பல்கலைக் கழகத்துக்குள்ளும் நுழைகிறார்.

Related Articles

Stay Connected

264,228FansLike
1,876FollowersFollow
1,500SubscribersSubscribe
spot_img

To Advertise Contact :

Related Articles

பிக்பாஸ், பாஸா… ஃபெயிலா ?

0
நீங்கள் கேட்டவை / தராசு பதில்கள் ? கோயில்களுக்குப் பக்தர்கள் வழங்கிய தங்க நகைகள் உருக்கி, வங்கியில் முதலீடு செய்யப்பட உள்ளதாமே? - ஆ. மாடக்கண்ணு, பாப்பான்குளம் ! இது இன்றைய தி.மு.க. அரசு கொண்டு வந்த...

ஊழலும் ஹைடெக்காகிவிட்டது

2
நீங்கள் கேட்டவை / தராசு பதில்கள்   ? இந்த ஹை டெக்னாலஜி யுகத்திலும் ஊழலுக்கு குறைவில்லையே? - நெல்லை குரலோன், பொட்டல்புதூர் ! ஊழலும் ஹை டெக்காக ஆகிக்கொன்டிருக்கிறதே.  இந்த இதழ் கவர் ஸ்டோரி பார்த்துவிட்டீர்களா? ?  முதல்வர்...

தராசு பதில்கள்

0
முதல்வர் ஸ்டாலினின் சமீபத்திய செயல்பாடுகளில் மிகவும் பிடித்தது? - நெல்லை குரலோன், பொட்டல்புதூர் அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பொறியியல் கல்லூரிகளில் 7.5 % ஒதுக்கீடு முறை மூலம் இடங்களை வழங்கும் விழாவிற்குச் செல்லும் முன் அப்படி ...

அதிர்ச்சி வைத்தியம் தேவை

0
தராசு பதில்கள் / நீங்கள் கேட்டவை உச்ச நீதிமன்ற மின் அஞ்சல்களில் இடம் பெற்றிருக்கும் பிரதமர் படத்தை நீக்க தலைமை நீதிபதி உத்தரவிட்டிருக்கிறாரே? - நந்தினி திருவனந்தபுரம். விளம்பர விரும்பியான நமது பிரதமரை திருப்திப்படுத்த பா.ஜ.க....

வானமும் வசப்படும்

0
பயணம் ஹர்ஷா விண்வெளிப் பயணம் செய்ய கடுமையான தேர்வுகளுக்குப் பின் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்ட பின்னர்தான் வீரர்கள் அனுப்பப்படுவார்கள். கடந்த சில ஆண்டுகளாகப் பொது மக்களை விண்வெளிக்குச் சுற்றுலா அழைத்துச் செல்லும் வர்த்தகரீதியான பயணத்தைத் தொடங்க ரிச்சர்ட்...
spot_img

To Advertise Contact :