online@kalkiweekly.com

“எங்களுக்கு பல் வளரல” பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய சிறுவர்கள்!

அசாம் மாநிலத்தை சேர்ந்த 2 சிறுவர்கள் தங்களின் பற்கள் வளர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மாநில முதலமைச்சருக்கும் பிரதமர் மோடிக்கும் கடிதம் எழுதியுள்ளது கலகலப்பை உண்டாக்கியுள்ளது.

அசாமை சேர்ந்த ரிஸ்வான் (6) மற்றும் ஆரியன் (5) சகோதரர்களுக்கு முன்பற்கள் வளராததால் உணவை மென்று சுவைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இப்பிரச்சினையை மாநில முதல்வருக்கும் பிரதமர் மோடியின் கவனத்துக்கும் கொண்டு செல்ல முடிவெடுத்தனர் இச்சிறுவர்கள். இதையடுத்து அசாம் மாநில முதல்வர் ஹிமந்தாவுக்கு ரிஸ்வான் எழுதிய கடிதத்தில் தெரிவித்ததவது:

அன்புள்ள ஹிமந்தா அங்கிள், எனக்கு 5 பற்கள் வளரவில்லை. இதனால் எனக்கு பிடித்த உணவுகளை உண்பதில் சிரமம் ஏற்படுகிறது. தயவுசெய்து தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் ஹிமந்தா அங்கிள்.

இவ்வாறு ரிஸ்வான் எழுத, தம்பி ஆரியன் ஒருபடி மேலே போய் பிரதமர் மோடிக்கே கடிதம் எழுதியுள்ளார். அதில் அன்புள்ள மோடி ஜி, எனக்கு 3 பற்கள் வளரவில்லை. இதனால் பிடித்தமான உணவுகளை மெல்லும்போது சிரமப்படுகிறேன். இதற்கான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மோடி ஜிஎன எழுதியுள்ளார்.

இந்த கடிதங்களை அச்சிறுவர்களின் மாமா தன் முகநூலில் பதிவிட்டுள்ளார். இது நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.இதற்கு பலரும் கலகலப்பான கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.

Related Articles

Stay Connected

264,228FansLike
1,875FollowersFollow
1,500SubscribersSubscribe
spot_img

To Advertise Contact :

Related Articles

சர்வதேச வான்வெளி விளையாட்டு விழா: கடலில் விழுந்த 3 பெண்கள்! அதிர்ச்சி வீடியோ!

0
துருக்கியில் பாராகிளைடிங் செய்த மூன்று பெண்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டு கடலில் விழும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியது. துருக்கியின் தென்மேற்கு கடலோரப் பகுதியில் Oludeniz என்ற நகரம் அமைந்துள்ளது. இங்கு சர்வதேச வான்வெளி விளையாட்டு...

கிளிமஞ்சாரோ மலையில் பிரபல நடிகை: வைரல் போட்டோஸ்!

0
நடிகை நிவேதா தாமஸ் உயரமான கிளிமஞ்சாரோ மலையில் ஏறி அந்த புகைப் படத்தை தனது சமூக வலைப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.அது வைராலாகியுள்ளது. மலையாள நடிகை நிவேதா தாமஸ், தமிழில், ஜில்லா படத்தில் நடிகர் விஜயின்...

பிக்பாஸ்-ல கலந்துக்க வந்த செலவுகூட சம்பளமா கிடைக்கலை: மலேசிய மாடல் நாடியா சாங்!

0
பிரபல டிவி சேனல் ஒன்றில் நடந்துவரும் பிக் பாஸ் சீசன் – 5 தொடரை கமல்ஹாசன் நடத்தி வருகிறார். இதில் பங்கேற்ற உறுப்பினர்களில் மலேசியாவிலிருந்து வந்த மாடலான நாடியா சாங் போட்டியிலிருந்து முதல்...

பெட்ரோல் தேவையில்லை: பேட்டரியில் இயங்கும் ஆட்டோ!

0
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் டவுன் பகுதியைச் சேர்ந்த ஜோசப் ஆலிவர் என்பவர் பேட்டரியில் இயங்கும் ஆட்டோவை  ஓட்டி வருவது அப்பகுதியில் புதுமையாக காணப்படுகிறது. இதுகுறித்து ஜோசப் கூறியதாவது,   வெளியூரில் டிரைவராக பணிபுரிந்த நான்,  கடந்த...

4 நொடி பிரகாசம்: வியாழனில் ஒளிர்ந்ததை பதிவுசெய்த வானியலாளர்கள்!

0
கடந்த வெள்ளிக்கிழமையன்று (அக்டோபர் 15) வியாழன் கோளில் சுமார் நான்கு நிமிடங்கள் மட்டும் பிரகாசமான ஒளி தோன்றியதாக வானியலாளர்கள் பதிவு செய்துள்ளனர். நமது விண்வெளியில் வாயுக்கோள் என்று அழைக்கப்படும் வியாழனில் புவியீர்ப்பு விசை அதிகமாக...
spot_img

To Advertise Contact :