online@kalkiweekly.com

spot_img

ஒரு வார்த்தை!

-அனுஷா நடராஜன்

அவர் ஒரு, ‘ஜென்’துறவி! ‘ஜென்’என்பது வேறொன்றுமில்லை. நம்ப ஊரு, ‘தியான்’(தியானம்) தான் ஜப்பானிய, ‘ஜென்’ஆகிவிட்டது. அந்தத்துறவி, தான் எங்க போனாலும், சின்ன முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றை எடுத்துக்கிட்டுப் போவாராம். இதைப் பார்க்குற அவரோட சிஷ்யர்கள், தங்களுக்குள்ளே பேசிச் சிரிச்சுக்குவங்களாம்.

நம்ம குருநாதருக்குப் பெரிய அழகன்னு நெனப்புடா! எப்பப்பாரு கண்ணாடியில தன் மூஞ்சியவே பார்த்து ரசிச்சுக்கிட்டு இருக்காரு. “சிஷ்யர்கள் கிண்டலடிப்பது குருநாதருக்குத் தெரியும். ஆனால், அவர் தன்னோட பழக்கத்தை மட்டும் மாத்திக்கவேயில்லை.

ஒருநாள் அந்தத் துறவியைப் பார்க்க, பெரியவர் ஒருத்தர் வந்திருந்தார். அவர் ஆசிரமத்துக்குள் நுழையும்போது, துறவி வழக்கம்போல கண்ணாடியைப் பார்த்துக்கிட்டு இருந்தார்.

ஐயா, நீங்க எல்லாம் துறந்த சாமியார். ஆனா, இப்படி அடிக்கடி கண்ணாடியில முகத்தை பார்க்குற ஆசையை மட்டும் தவிர்க்க முடியலையா?”ன்னு நேராவே கேட்டுட்டாரு. துறவி சிரித்தார்.

பெரியவரே, எனக்கு ஏதாவது பிரச்னை வந்தா, அந்தப் பிரச்னைக்கு யார் காரணம்னு தெரிஞ்சுக்க, இந்தக் கண்ணாடியைப் பார்ப்பேன். அங்கே தோணுற என் உருவம்தான் என்னுடைய பிரச்னைக்கு முழு முதல் காரணம்னு புரிஞ்சுப்பேன்.

அப்புறம் அந்தப் பிரச்னைக்குத் தீர்வுகாண வேணாமா? அதைச் செய்யறதுக்குப் பொருத்தமான நபர் யார்னு தேடுவேன். மறுபடியும் கண்ணாடியைப் பார்ப்பேன். அங்கே தெரியுற உருவம்தான் இந்தப் பிரச்னையைத் தீர்க்கக் கூடியவர்னு புரிஞ்சுப்பேன்.

எப்போதும் இந்தக்கண்ணாடி என்கிட்ட இருக்கிறதனால, என்னோட நல்லது, கெட்டதுக்கு யார் காரணங்கிற உணர்வை நான் மறக்கறதில்லை”ன்னாராம்!

எனவே, நமக்கு ஏதாவது பிரச்னை வந்தா, அதை யாராவது வந்து தீர்ப்பாங்கன்னு காத்துக்கிட்டு இருக்காம, நாமேதான் நம்ப பிரச்னையைத் தீர்த்துக்கணும்னு புரிஞ்சுக்கிட்டு, முயற்சி செஞ்சாலே துன்பம் பல ஓடி விடும்! வாழ்வும் அழகாய்ச் சுடர்விடும்! கதை பிடிச்சிருக்கா டியர்ஸ்?

Related Articles

Stay Connected

264,228FansLike
1,876FollowersFollow
1,500SubscribersSubscribe
spot_img

To Advertise Contact :

Related Articles

விநாயகச்சதுர்த்தி விதவிதமான கொழுக்கட்டைகள்

0
-வாசகர் ஜமாய்க்கிறாங்க கோன் கொழுக்கட்டை தேவையானவை : பச்சரிசி மாவு-3 கப், கனிந்த செவ்வாழைப்பழம் - 1, தேங்காய் துருவல் - 2 கப், ஏலக்காய் தூள்-அரை ஸ்பூன், வெல்லம்-3 கப், வாழையிலை-தேவைக்கேற்ப. செய்முறை : முதலில்...

உதடுகள் பராமரிப்பு

0
வாரத்தில் இரு நாட்கள் உதடுகளில் வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த தண்ணீரால் ஒத்தடம் கொடுத்து வந்தால் உதடுகள் ரோஜா பூ போல் மென்மையாகும். முட்டையின் வெள்ளைக் கருவோடு தேன் கலந்து உதடுகளில் பூசிவந்தால், உதடுகள்...

கார்ட்டூன்களுக்கும் உண்டு தடை

0
-ஜி.எஸ்.எஸ். கார்ட்டூன் திரைப்படங்களும் கார்ட்டூன் தொடர்களும் யாருக்கானவை? ‘இதில் என்ன சந்தேகம்? குழந்தைகளுக்கானவை’என்று பதில் சொல்வதற்கு முன் கொஞ்சம் யோசியுங்கள். இளைஞர்களும் வயதானவர்களும்கூட ஒருசேர கார்ட்டூன்களை/காமிக்ஸ்களை ரசிப்பதுதான் உண்மை. நோயாளிகளின் மன இறுக்கத்தைப் போக்க...

கர்ப்பிணிப் பெண்களுக்கு கோவிட் தடுப்பூசி

0
தொகுப்பு : பத்மினி பட்டாபிராமன் கடந்த ஒன்றரை வருடங்களாக உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கோவிட் தொற்றுநோய் குறித்து எத்தனையோ சந்தேகங்கள், கேள்விகள் இன்றும் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன.இந்த நிலையில், ‘கர்ப்பிணிப் பெண்களுக்குத் தடுப்பூசி எப்போது போட...

பெண்களைப் புரிந்துகொள்வோம்

0
-வாசகர் ஜமாய்க்கிறாங்க ஆர்.கெஜலட்சுமி, லால்குடி பெண் - ஆணை விட இருபது சதவீதம் எடை குறைவு. ஆணைப்போல வேகமாக ஓடவோ, தாவவோ முடியாது. கால்களில் பலம் குறைச்சல். இதயமும், சுவாசப்பையும் அவளுக்குக் கொஞ்சம் சின்னது. வியர்வை...
spot_img

To Advertise Contact :