ஓபிஎஸ் பெயரை பயன்படுத்தி 47 லட்சம் மோசடி: கேரள இளைஞர் போலீஸில் புகார்!

ஓபிஎஸ் பெயரை பயன்படுத்தி 47 லட்சம் மோசடி: கேரள இளைஞர் போலீஸில் புகார்!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்தவர் பிரவீன் என்பவர் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் பெயரைச் சொல்லி, தன்னிடம் 47 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக போலீஸில் புகாரளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மதுரை எஸ்.பியிடம் அவர் அளிதத புகார் மனுவில் தெரிவித்ததாவது:

கடந்த 2019-ல் இடுக்கியில் ஏலக்காய் ஸ்டேட் வாங்க பிரவீன் முயற்சி செய்தபோது, தென்காசியை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ மகன் என்று கூறி முருகேசன் என்பவர் குறைந்த வட்டியில் ரூ.10 கோடி ரூபாய் பணம் பெற்று தருவதாக பிரவீனிடம் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து மதுரை சேடப்பட்டி சேர்ந்த ராஜேந்திரன் என்பவரை அறிமுகம் செய்து வைத்துள்ளார். அவர் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்சின் நெருங்கிய உறவினர் என்றும், சேடப்பட்டி கூட்டுறவு வங்கி தலைவர் என்றும் பிரவினிடம் அறிமுகம் செய்துள்ளார்.

இதனை அடுத்து, அவர் பிரவீனிடம் ஆவண செலவு மற்றும் ரொக்கம் கமிஷனாக 47 லட்சம் ரூபாய் பணத்தை முத்திரைத் தாளில் கையெழுத்திட்டு வாங்கியுள்ளார். ஆனால் பிரவீனை பணம் பெற்று தரவில்லை.

இவ்வாறு பிரவீன் குறிப்பிட்டுள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பிரவீன், தன்னை ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் குடும்பத்துடன் வந்து மனு அளித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com