0,00 INR

No products in the cart.

கருப்பு அரிசி ரொட்டி!

– கோவிந்தராஜன், கோடம்பாக்கம்

வாசகர் ஜமாய்க்கிறாங்க

கருப்பு அரிசியை இந்தியர்கள், ’கவுனி அரிசி’ என்கிற பெயரால் அழைக்கின்றனர். ’கவுனி’ என்ற சொல்லுக்கு, ’கோட்டை வாசல்’ என்று பொருளாகும். மேலும், கருப்பு அரிசி இதய நோய், ரத்தக்கொதிப்பு, மாரடைப்பு, சிறுநீரகப் பாதிப்பு, புற்றுநோய், சர்க்கரை நோய் போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்கிறது. கருப்பு அரிசியைக் கொண்டு, ஆரோக்கியமான ரொட்டி செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள் :

கருப்பு அரிசி மாவு – 2 கப்

பச்சை மிளகாய் – 3 (பொடியாக நறுக்கியது)

இஞ்சி விழுது – 2 டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு (நறுக்கியது)

எண்ணெய், உப்பு, தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை :

முதலில் கருப்பு அரிசியை ஐந்து மணி நேரம் ஊற வைத்து, பின் நிழலில் காய வைத்து அரைத்துக்கொள்ள வேண்டும். பிறகு அடுப்பில் தேவையான அளவு தண்ணீரை சூடாக்கி, தேவையான அளவு உப்பு, எண்ணெய், பச்சை மிளகாய், இஞ்சி விழுது, கறிவேப்பிலை மற்றும் கருப்பு அரிசி மாவை சேர்த்துக் கிளறவும்.

பின்னர் தோசைக்கல்லை அடுப்பில் வைத்துச் சூடாக்கி, சிறிது எண்ணெய் விட்டு மாவை சிறு உருண்டையாக எடுத்து, வட்டமாகத் தட்டி, தோசைக்கல்லில் போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு, இருபுறமும் வேக வைத்து எடுத்தால் ஆரோக்கியம் நிறைந்த கருப்பு அரிசி ரொட்டி தயார்!

Stay Connected

261,311FansLike
1,909FollowersFollow
8,370SubscribersSubscribe

Other Articles

சுதந்திர இந்திய வளர்ச்சிக்கு விதைகள்! தாமஸ் மன்றோ – 2

0
- அ.பூங்கோதை பிற பிரிட்டிஷ் அதிகாரிகளைப் போலன்றி, மக்களுக்கு நெருக்கமானவராக இருந்தார் மன்றோ. அதற்காகவே தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளைக் கற்றுக்கொண்டார். ஒடுக்கப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கெல்லாம் தனது குதிரையில் பயணம் செய்து...

அன்புவட்டம்

0
- அனுஷா நடராஜன் குற்றால அருவி, கும்பக்கரை அருவி, திற்பரப்பு அருவி, ஒகேனக்கல் அருவி... இதில் எந்த அருவியில் தங்களுக்குக் குளித்து மகிழ ஆசை? - எஸ்.கெஜலட்சுமி ராஜேந்திரன், லால்குடி கு, கும், திற், ஒ... எல்லா...

`நமக்கு நாமே` – முதியோர் மந்திரம்

0
சந்திப்பு : பத்மினி பட்டாபிராமன் அக்டோபர் முதல் தேதி, உலக முதியோர் தினமாக அனுசரிக்கப்படுவதையொட்டி சென்னை, இந்திரா நகரில் இயங்கிவரும் இந்தியாவின் முதல் `முதியோர் நல மல்டி ஸ்பெஷாலிடி மருத்துவமனை’ ஜெரி கேர் (Geri...

துர்கா தேவி சரணம்!

0
- ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி * ’துர்க்கம்’ என்றால் அகழி எனப் பொருள். அடியார்களுக்கு அகழி போல் அரனாக இருந்து பாதுகாப்பவள் துர்கை எனப்பட்டாள். துர்க்கமன் என்ற அரக்கனை அழித்ததால், அம்பிகை துர்கை எனப்பட்டதாகவும் கூறுவர்....

எடைக் கட்டுப்பாடு!

0
- இந்திராணி தங்கவேல், மாடம்பாக்கம் உடல் எடை பற்றி ஆராய்ச்சி செய்தவர்கள், ஓர் அபூர்வமான உண்மையை கண்டுபிடித்துள்ளனர். அதாவது, காலையில் லேட்டாக எழுந்து கண்ணைக் கூசும் சூரிய வெளிச்சத்தைப் பார்ப்பவர்களை விட, அதிகாலையில் இருள்...