கர்நாடகாவில் வாலிபால் விளையாடிய மத்திய அமைச்சர்: வைரல் வீடியோ!

கர்நாடகாவில் வாலிபால் விளையாடிய மத்திய அமைச்சர்:  வைரல் வீடியோ!

மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் கர்நாடகாவிலுள்ள விளையாட்டு மைதானம் ஒன்றை பார்வையிட்டபோது, அம்மாநில பிஜேபி எம்.பி-யான தேஜஸ்வி சூர்யாவுடன் வாலிபால் விளையாடிய காட்சி, வைரலாகியுள்ளது. இது தொடர்பான வீடியோவை அமைச்சர் அனுராக் தாகூர் பதிவிட, அது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் சமீபத்தில், ஃபிட் இந்தியா செயலியை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில், தனது ஸ்கிப்பிங் திறமையை வெளிப்படுத்தினார். இந்த நிகழ்வின் வீடியோவையும் அவர் ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். இவரது இந்த வீடியோக்கள் நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்தது என்பது குஇப்பிடத் தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com