வொர்க் ஃப்ரம் ஹோம்!

சச்சின் ஆபீஸ் செட்டப் புகைப்படம்
சச்சின் ஆபீஸ் செட்டப் புகைப்படம்

என் பேரன் சச்சின் எப்போதும் நாங்கள் செய்யும் வேலைகளை அவனும் செய்வான். நான் சமைப்பதைப் பார்த்து சின்ன சின்ன பாத்திரங்களை எடுத்து வந்து அவனும் சமைப்பதாக பாவனை செய்வான்.

ஒரு நாள் ''நான் அம்மா மாதிரி ஆபீஸ் வேலை செய்யப்போகிறேன்'' என்று டீப்பாயை டேபிளாக்கி ஒரு பலகையை அதன்மேல் நிமிர்த்தி நிற்க வைத்தான். அதுதான் கம்ப்யூட்டராம்! ஒரு  பழைய கீ போர்டை அதன் முன்னாடி வைத்து ரூபீஸ் க்யூபை மௌஸ் ஆக்கினான். பக்கத்தில் ஒரு நோட் பேட் வைத்து ஒரு குட்டி சேர் போட்டு உட்கார்ந்து கொண்டான்.   மௌஸ் கீபோர்ட் இரண்டையும் ஆபரேட் செய்து அவ்வப்போது நோட்பேடையும் பார்த்துக்கொண்டான்.

இதில் ஹைலைட் என்ன தெரியுமா? ''சச்சின்..நீ  என்ன செய்கிறாய்?"  என்று நான் கேட்டதற்கு பதில் சொன்னதோடு நிற்கவில்லை.. ''பார் பாட்டி.. உன்கிட்ட பேசறதுக்குள்ள நாலு மெயில் வந்துடுத்து!" என்றானே பார்க்கலாம்.. அவன் சுட்டித்தனத்தில் அகமகிழ்ந்து போனேன்.

-ஹேமலதா ஸ்ரீனிவாசன், சென்னை.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com