குழந்தையும் தெய்வமும் ஒன்று!

குழந்தையும் தெய்வமும் ஒன்று!

எங்கள் வீட்டு சுட்டி சாத்விக். இவர் செய்யும் அலப்பறைகளுக்கு அளவே இல்லை உண்மையைத்தான்  பேசுவார். அது நல்ல பழக்கம் என்றுதானே சொல்கிறீர்கள் . ஆனால், அது சில சமயங்களில் பெரியவர்களான எங்களுக்கு சிக்கலை வரவழைத்து விடும்.

எங்கள் அப்பாவின் நண்பர் ஒருவர் வந்தால் லேசில் போக மாட்டார். அப்பா இருக்கும்போது ஒ.கே .ஆனால் அவர் இல்லாத நேரங்களில் அவர் அறுவையை யார் தாங்குவது ?ஒருமுறை எங்கள் அப்பா இல்லாத நேரத்தில் வந்த போது ''சார் கேட்டால் அம்மா தூங்குவதாக சொல்'' என்று எங்களிடம் கூறியதை கவனமாக கேட்ட சுட்டி, அப்படியே அவரிடம் ஒப்பித்து விட்டான்.. '' நீங்கள் வந்தால் எங்கள் பாட்டி தூங்குவதாக உங்களிடம் சொல்ல சொன்னார்கள்'' என்று  போட்டு கொடுத்து விட்டான். நாங்கள் திடுக்கிட்டு அசடு வழிந்து சமாளிக்க, அவரும் என்ன சொல்வதென்று தெரியாமல் விழிக்க.. ஒரே அமர்க்களம்! அவர் கிளம்பிப் போகும்வரை நாங்கள் சிரிப்பை அடக்க முடியாமல் தவித்தோம்.

குழந்தையும் தெய்வமும் ஒன்று அவர்களுக்கு பொய் சொல்ல கற்றுக்கொடுப்பதே பெரியவர்கள்தான் என்று எங்கள் தவறை உணர்ந்து திருந்தினோம்.

– B.Nivyaarun, Chennai.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com