online@kalkiweekly.com

spot_img

கொஞ்சம் சிரிங்க பாஸ்!

வாசகர் ஜோக்ஸ்
ஓவியம் : ரஜினி

1. “தலைவர் கைலாச யாத்திரைக்குப் புறப்பட்டுப் போனார் என்று தவறுத லாகப் பிரசுரித்ததற்கு வருந்துகிறோம். தலைவர் கைலாஷ் தீவு யாத்திரைக் குப் புறப்பட்டுப் போனார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.” -எல். மகாதேவன், கோவை

 

2. “என் அப்பா ஒரு கட்சியின் கொறடா.” “அப்புறம் உனக்கு என்ன கொறைடா?” -எஸ்.மோகன், கோவில்பட்டி.

 

3. “பக்தா, உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்?” “எனக்குச் சீக்கிரம் கல்யாணம் ஆகவேண்டும் சாமி.” “என்ன பக்தா, வரம் கேட்கச் சொன்னால் சாபம் கேட்கிறாயே?” -ஆர் சுந்தரரராஜன், சிதம்பரம்

 

4. “பொண்ணு சீரியல் நடிகையோ?” “ஏன் அப்படிக் கேட்கிறே?” “இவனா உன் காதலன்? அவன் என்ன ஆனான்? என்றால் இனிமேல் அவனுக்குப் பதில் இவன் என்கிறாள்.” -எஸ்.மோகன், கோவில்பட்டி

 

5. “தீபாவளி பலகாரம் செய்த நான் தீபவாளி லேகியம் செய்ய மறந்துட்டேனுங்க.” “அதுக்கென்ன நீ. செய்த பலகாரமே தீபாவனி லேகியம் மாதிரிதானே இருக்கும் மாலா.” சி.கே.ஹரிஹரன், கேரளா

6. “மனைவியைக் காணாமப் போய் ஒரு வாரம் கழிச்சு புகார் கொடுக்க வந்திருக்கீங்களே ஏன்?” “தீபாவளி ஷாப்பிங்குக்குப் போறதா சொல்லிட்டுப் போனா இன்ஸ் பெக்டர் அதான் வெயிட் பண்ணிப் பார்த்தேன்.” -சி.கே.ஹரிஹரன், கேரளா

Related Articles

Stay Connected

264,228FansLike
1,875FollowersFollow
1,500SubscribersSubscribe
spot_img

To Advertise Contact :

Related Articles

வானமும் வசப்படும்

0
பயணம் ஹர்ஷா விண்வெளிப் பயணம் செய்ய கடுமையான தேர்வுகளுக்குப் பின் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்ட பின்னர்தான் வீரர்கள் அனுப்பப்படுவார்கள். கடந்த சில ஆண்டுகளாகப் பொது மக்களை விண்வெளிக்குச் சுற்றுலா அழைத்துச் செல்லும் வர்த்தகரீதியான பயணத்தைத் தொடங்க ரிச்சர்ட்...

உள்ளாட்சித் தேர்தல்களும் உடையும் கூட்டணிகளும்

0
கவர் ஸ்டோரி ஆதித்யா தேர்தல்கள் அறிவிக்கப்பட்டால் அரசியல் கட்சிகள் இடம் மாறி புதிய கூட்டணிகள் உருவாவது தமிழக அரசியலில் வாடிக்கை. ஆனால் இம்முறை கூட்டணியிலிருந்து வெளியேறிய கட்சிகள் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கின்றன. தமிழகத்தில் விடுபட்ட ஒன்பது...

மென்பேனாவில் எழுதுங்கள்…

0
புதிய படைப்புகளைப் படைக்கலாம். கல்கி, ‘மென்பேனா’ மூலம் உங்கள் படைப்புகளை உடனுக்குடன் கல்கி ஆன்லைன் மின்னிதழில் பதிவு செய்யலாம். www.kalkionline.com இணையதளத்தில் மென்பேனா பகுதியில் உங்கள் படைப்புகளைப் பதிவேற்ற : 1. www.kalkionline.com இணையதளத்தில் Sign in...

இனியொரு விதி செய்வோம்

0
தலையங்கம் ஒவ்வொரு ஆண்டும் புதிதாகப் பெரிய தொழிற்சாலைகள் தமிழ் நாட்டுக்கு வரவேண்டும். அதன்மூலம் தொழில் வளர்ச்சி, வரி வருவாய், புதிய வேலை வாய்ப்புகள் உயரும் என்ற எண்ணத்துடன் தமிழக அரசு பெரும் முயற்சிகளை எடுத்து...

அருள்வாக்கு

0
பாலாபிஷேகம் அல்ல; பாலபிஷேகம் ஜகத்குரு காஞ்சி மகா சுவாமிகள் ஒன்று கவனிக்க வேண்டும். ‘சந்தனாபிஷேகம்’ ‘க்ஷீராபிஷேகம்’ என்கிற மாதிரியே பல பேர் ‘பாலாபிஷேகம்’ என்கிறார்கள். அது தப்பு. ‘பாலபிஷேகம்’ என்று ‘ல’வைக் குறிலாகவே சொல்ல வேண்டும்....
spot_img

To Advertise Contact :