0,00 INR

No products in the cart.

கொள்ளு கார உருண்டை

தேவையானவை:

1. கொள்ளு – 1/4 கிலோ

2. வர மிளகாய்-5

3. கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி- சிறிது

4. உப்பு – தேவையான அளவு

5. கொண்டை கடலை- 100 கிராம்

6. பெருங்காயம்- சிறிது

7. மஞ்சள் தூள்- சிறிது

8. தாளிக்க- எண்ணெய்,கடுகு,மற்றும் உளுந்து தேவையான அளவு

9. தேங்காய் துருவல்- 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

கொள்ளை லேசாக வாசனை வரும்வரை வறுத்து, தோல் நீக்கி ஊறவிடவும். அத்துடன் கொண்டை கடலையையும் சேர்த்து ஊறவிட்டு கரகரப்பாக வரமிளகாய் சேர்த்து அரைத்து எடுக்கவும் வாணலியில் கடுகு மற்றும் உளுந்து தாளித்து அரைத்த கலவையில் சேர்க்கவும். தேங்காய் துருவல், கறிவேப்பிலை, பெருங்காயம், கொத்த மல்லி சேர்க்கவும், சிறு சிறு உருண்டைகளாக (சீடை அளவில்) உருட்டி ஆவியில் வேகவிட்டு ருசிக்கவும், மாலையில் எளிய முறையில் செய்யக்கூடிய சிற்றுண்டி. வயதானவர்கள் மற்றும் டயட்டில் இருப்பவர்கள் சாப்பிடலாம். சிறார்களுக்கு வேகவிட்ட உருண்டைகளை எண்ணெயில் பொறித்துக் கொடுக்கலாம், மிகவும் ருசியாக இருக்கும்.

வி.ஸ்ரீவித்யா பிரசாத், நங்கநல்லூர்.

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

தொப்பை சட்னி

0
தேவை: சிவப்பு பூசணி(தோலுடன் கூடிய சதைப் பகுதி ,பிஞ்சு புடலங்காய் சதையுடன் கூடியவிதை ப்பகுதி,பீர்க்கங்காய் தோலுடன் கூடிய சதைப்பகுதி,சேனைக்கிழங்கின் தோல் நீக்கிய சதைப்பகுதி-எல்லாம் சேர்த்து-2 கப், கடலைப்பருப்பு-3டீஸ்பூன், உளுத்தம் பருப்பு, தனியா-தலா இரண்டு டீஸ்பூன், காய்ந்த மிளகாய்-5, புளி,உப்பு, கறிவேப்பிலை-தேவைக்கு....

தாமரைத் தண்டு சட்னி

0
தேவை: தாமரைத் த ண் டு - ஒரு ஜாண் அளவு . உளுந்து – 2 டீஸ்பூன். நறுக்கி ய தக்காளி - 1/4 கப் , மிளகாய் வற்றல்- 3 மிளகு தூள் - 1//4 டீஸ்பூன் தனியா=...

கோஸ் சட்னி

0
தேவை: கோஸ் - 100 கி வெஙகாயம் 1 மிளகு - 6 பச்சை மிளகாய் – 2 தேங்காய் துருவல் - 2 ஸ்பூன் உப்பு – தேவைக்கேற்ப எண்ணெய் – தேவைக்கேற்ப கடுகு, கருவேப்பிலை- சிறிது செய்முறை : வெங்காயத்தை பொடியாக...

கதம்ப சட்னி

0
தேவை: ஆப்பிள்_ 1 பச்சை திராட்சை, நறுக்கிய கொய்யா - ஒரு கப் கேரட், கோஸ், முள்ளங்கி, மாங்காய், புடலை துருவல்கள் – ஒரு கப் உளுத்தம் பருப்பு 1 ஸ்பூன் மிளகாய் – 4. தேங்காய்துருவல்- ஒரு கப் உப்பு, எண்ணெய்...