online@kalkiweekly.com

spot_img

சிவகங்கை டு சீனா: கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து சீன பல்கலைக் கழகத்தில் பாடம்!

தமிழகத்தின் கீழடி அகழ்வாராய்ச்சி குறித்தும் அதன் மூலம் வெளியாகியுள்ள தமிழர்களின் வரலாற்று பெருமைகள் குறித்தும் சீன பல்கலைக் கழகத்தில் சீன மாணவர்களுக்கு பாடம் போதிக்கப்படும் தகவல் வைரலாகியுள்ளது.

தமிழகம் சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெறும் 7ம் கட்ட அகழாய்வின் மூலம் 2600 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் நாகரீகத்தின் கல்வி, கலை, நீர் மேலாண்மை போன்றவை குறித்த தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. கீழடி 7ம் கட்ட அகழாய்வு கீழடி, அகரம், கொந்தகை ஆகிய 3 தளங்களிலும் நடந்து வருகிறது. இதில் அகரத்தில் இதுவரை 8 குழிகள் தோண்டப்பட்டு ஏராளமான பானைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பண்டைய காலத்தில் வைகை ஆறு, கீழடி, அகரம் வழியாக சென்றிருக்கக்கூடும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அங்கு கண்டெடுக்கப்பட்ட பிராமிய எழுத்துக்கள், உறைகிணறு, ஆபரணங்கள் உள்ளிட்ட 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொல்லியல் ஆதாரங்கள் அனைத்து தரப்பினரும் அறியும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ் நாகரீகத்தை விளக்கும் கீழடியின் பெருமை தற்போது சீனா வரை சென்றுள்ளது. அங்குள்ள யுனன் மின்சூ பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை மாணவர்களுக்கு கீழடி ஆழ்வில் தமிழர்களின் வரலாற்று பெருமைகள் குறித்து தமிழ் ஆசிரியை நிறைமதி கிகி ஜாங் பாடம் எடுத்ததை தனது முகநூலில் பெருமையுடன் பதிவிட்டுள்ளார்.

இவர் சில ஆண்டுகளுக்கு முன் கீழடியில் கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் பொருட்களை நேரில் பார்வையிட்டு சென்றார். இந்த நிலையில் தன்னுடைய பல்கலைக்கழக மாணவர்களுக்கு கீழடி பெருமை குறித்து பாடம் எடுத்ததாக மிக பெருமையுடன் தனது முகநூல் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். சிவகங்கை டு சீனா என்ற கமெண்டுகளுடன் கீழடி குறித்து சீனாவில் ஆசிரியர் பதிவிடும் படங்களை தொடற்சியாக பல்வேறு தரப்பினரும் பகிர்ந்து வருகின்றனர்.

Related Articles

Stay Connected

264,228FansLike
1,876FollowersFollow
1,500SubscribersSubscribe
spot_img

To Advertise Contact :

Related Articles

10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: சென்னை வானிலை ஆய்வுமையம்!

0
தமிழகத்தில் அடுத்த 48 மணிநேரத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வுமையம் அறிக்கையில் தெரிவித்ததாவது: வளிமண்டல மேலடுக்குசுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக,...

டி23 புலிக்கு மைசூரு உயிரியல் பூங்காவில் சிகிச்சை!

0
நீலகிரி மாவட்டம் முதுமலை வனப்பகுதியில் மனிதர்கள் மற்றும் கால்நடைகளைத் தொடர்ந்து தாக்கிக் கொன்ற டி23 புலியை நேற்று வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்திப் பிடித்தனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறீயதாவது:   கடந்த 22 நாட்களாக தேடுதல்...

உலகில் கொரோனா உயிரிழப்பு குறைகிறது: உலக சுகாதார அமைப்பு!

0
உலகில் கொரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை கடந்த ஓராண்டில் இல்லாத அளவுக்கு கடந்த வாரத்தில் குறைந்துள்ளது என, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியாசிஸ் தெரிவித்ததாவது: உலக...

அமெரிக்க முன்னாள் அதிபர் கிளிண்டன்: உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி!

0
அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது. அமெரிக்காவில், 1993 முதல் 2001-ம் ஆண்டு வரை அதிபராகப் பதவி வகித்தவர் பில் கிளிண்டன். அமெரிக்காவின்...

கபடி விளையாடி சர்ச்சையில் சிக்கிய பாஜக பெண் எம்.பி!

0
மகாராஷ்டிராவின் மாலேகான் என்ற இடத்தில், கடந்த 2008-ம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பில் 6 பேர் பலியாகி, 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த வழக்கில் பாஜக பெண் பிரமுகர் பிரக்யா தாக்குர் (51)...
spot_img

To Advertise Contact :