online@kalkiweekly.com

spot_img

சொல்ல விரும்புகிறோம்

இந்த வார மங்கையர் மலரில், `எடைக் கட்டுப்பாடு’ என்ற தலைப்பில் வந்த கட்டுரை அருமை. பயனுள்ள இக்கட்டுரையை அனைவரும் படித்துக் கடைபிடிக்க வேண்டும்.
– ஆர்.வித்யா சதீஷ்குமார், பள்ளிக்கரணை

நவராத்திரி நேரத்தில் ஒன்பது வகையான சுண்டல்களை வெளியிட்டு அசத்திவிட்டீர்கள் போங்கள்! ஒவ்வொரு சுண்டலும் ஒவ்வொரு சுவையைத் தரும் வகையிலும், அதோடு உடலுக்கு நன்மை பயக்கும் வகையிலும் அமைந்திருந்தது சூப்பர்.
– எஸ்.கெஜலட்சுமி ராஜேந்திரன், லால்குடி

`நமக்கு நாமே – முதியோர் மந்திரம்’ கட்டுரையைப் படித்ததும் உண்மைதான் என்று தோன்றியது. வயதில் முதிர்ந்தவர்கள், தனிமை உணர்ச்சியை போக்கிக்கொள்ள நிறைய பேசுவது மிகவும் முக்கியம். அப்படிப் பேச முடியாவிட்டால் பாட்டு பாடலாம். புத்தகங்களைப் படிக்கலாம் என்று எத்தனையோ வழிமுறைகளைச் சொன்னது அருமை.
– உஷா முத்துராமன், திருநகர்

படித்ததில் பிடித்தது என்ற பகுதியில், `இறுதிவரை….` படித்ததும் மனம் நெகிழ்ந்தது. தன்னை ஈன்றெடுத்த பெற்றோரை விட, தன் வாழ்க்கை முழுவதும் தனக்காக வாழ்பவர் தன் மனைவி என்பதை கணவர் உணர்ந்து விட்டாலே, அந்த இல்வாழ்க்கை இன்பகரமாக இருக்கும் என்பதைப் புரிய வைத்தது. இதைப் படிக்கும் அனைத்து கணவன்மார்களும் தங்கள் மனைவியைப் புரிந்துகொள்ள அருமையான விஷயத்தைப் பிரசுரித்த மங்கையர் மலரை அனைத்துப் பெண்கள் சார்பாகவும் வாழ்த்தி வணங்குகிறேன்.
– நந்தினி கிருஷ்ணன், மதுரை

`பொத்தானைத் தட்டினால் இட்லி சட்னி தட்டில் வந்து விழும்` என்ற என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் பாட்டினை மனதில் ஓட வைத்தது `ஒரு வார்த்தை.` அதை விட, `உங்கள் கணவர் சமைத்ததை சாப்பிட்டுக்கிட்டு இருங்க` என்று சொல்லி, எங்களைக் காத்திருக்கச் சொன்ன அனுஷாவுக்காக நாங்கள் எப்போதுமே காத்திருப்போம்?
– லக்ஷ்மி ஹேமமாலினி, சென்னை

`தலைவி` (திரைப்படம்) எப்படி என்ற கேள்விக்கு அனுஷாவின் பதில் நடுநிலை மாறாமல் இருந்தது.
– பிரகதா நவநீதன், மதுரை

`மனமாற்றம்` என்ற சிறுகதை உண்மையின் உரைகல் .`உண்மையாகவே நீ மாறினால் ஆண்டவன்கிட்டே மண்டியிட்டு மன்னிப்பு கேளு. அந்த மன்னிப்பை அவர் ஏற்றுக் கொண்டால் நீ நினைத்தது உடனே நடக்கும் ” என்று மன்னிப்புக்கான பாதையை அழகாகச் சொன்ன செல்லம்மா, உண்மையிலேயே மேதைதான். சிறுகதையில் வரும் இந்த வார்த்தைகள் நம் அனைவரின் வாழ்க்கைக்கும் பொருந்தும். மிக அருமையான, யதார்த்தமான சிறுகதை. பாராட்டுக்கள்.
– வெ.முத்துராமகிருஷ்ணன், மதுரை

`எடைக் கட்டுப்பாடு’ என்ற செய்தித் தொகுப்பு நல்ல `வெயிட்`டாகவே இருந்தது. தூங்கும் நேரம் வீணடிக்கும் நேரம் அல்ல என்பதும், அறையின் வர்ணங்களுக்கும் எடைக்கும் தொடர்பு உண்டு என்பதும் அறிந்திராத செய்தி.
– க.மோகனசுந்தரம், திருநெல்வேலி

`ப்ளக் அண்ட் ப்ளே` எப்ப வரும் என்று காத்திருக்கிறோம்.
– எஸ்.ராஜம், ஸ்ரீரங்கம்

மங்கையர் மலரை பார்ப்பதில் கிடைக்கும் இன்பத்திற்காகவே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு kalki onlineஐ பார்த்து விட்டுத்தான் தூங்குவேன். 20ஆம் தேதி திங்கட்கிழமை மங்கையர் மலர் எனக்கு ஏமாற்றத்தையே தந்து விட்டது. பழையது போல் தரமாட்டீங்களா?
– வி.கலைமதி சிவகுரு, கும்பகோணம்

காந்தி ஜெயந்தி பற்றிய உண்மைகள், படிக்க மெய் சிலிர்க்க வைத்தன. அதனால்தான் அவர் மகாத்மா என்பதை உணர்த்தியது.
– சி.கார்த்திகேயன், சாத்தூர்

www.kalkionline.com இணையதள பதிவுகள் :

எடைக் கட்டுப்பாடு!
MALAPALANIRAJ says :
நல்ல தகவல்களை தந்ததற்கு மிக்க நன்றி.

கே எஸ் கிருஷ்ணவேணி says :
அடேங்கப்பா வண்ணத்தில் இருக்குது போல் மாயம். இனி எங்கள் வீட்டில் தட்டு,சுவரின் கலர் எல்லாமே நீலம்தான். நிறைய விஷயங்களை சொல்லியிருக்கிறார் கட்டுரையாளர் .நன்றி!

எஸ்.கெஜலட்சுமி ,லால்குடி. says :
உலக மக்கள் நலமாக இருக்கத்தான் கடலையும், வானையும் இறைவன் நீல நிறத்தில் படைத்துள்ளான் போலும்.

மன்னிக்க வேண்டுகிறேன்!
K.Ramachandran says :
மன்னிப்பு என்பதற்கு ஒரு புதுமையான சிந்திக்கவைக்கும் சிறுகதை. வாழ்த்துக்கள்

ஐந்தறிவு ஷெர்லாக் ஹோம்ஸ்!
Vasudevan says :
நாய்கள் நன்றியுள்ளதும் கூடவே மிகவும் நம்பகத்தக்கவை என்று எடுத்துக் காட்டியுள்ளது இந்த கட்டுரை ..வாசுதேவன் பெங்களூரு.

கருப்பு அரிசி ரொட்டி!
வி.கே.லக்ஷ்மிநாராயணன் says :
கருப்பு ( கவுனி )அரிசியின் பலன்கள் பற்றி தெரிவித்திருப்பது நல்ல பதிவு.உபயோக மான ஹெல்த் டிப்ஸூம் கூட.

Usha sankaran says :
எளிமையான மற்றும் ஆரோக்கியம் தரும் உணவு.

தள்ளு வண்டியில் தட்டு வடை!
கேஸ் கிருஷ்ணவேணி says :
ரவியின் தட்டுவடை யை இப்போதே சுவைக்க வேண்டும் போல் ஆசையாக உள்ளது. மேன்மேலும் வளர பாராட்டுக்கள்.

Iyyanar says :
Salem best Kadai thattu vadai set mass Kalki news best news

Parthipan says :
Salem la super ahh taste aprm quality oda people kkk intha snacks la provide panrnaga super aana shop keep supporting the stall

மனமாற்றம்
என்.கோமதி says :
பெண் என்றுமே பொன் என அமைதியாக காட்டிவிட்டாள் செல்லம்மா..

நவராத்திரி சுண்டல் வகைகள்!
MALAPALANIRAJ says :
சுண்டல்கள் அனைத்தும் ஆளை சுண்டி இழுக்கிறது.

துர்கா தேவி சரணம்
ஆர்.எம்.அக் ஷய ராம் says :
தகவல்கள் அருமை ….. அருமை …… .நவதுர்கை கோயில்கள் பற்றிய செய்திகள் அற்புதம்.தொடரட்டும் ஆன்மீக பணிகள்.

இறுதி வரை…
அ.செல்வி சண்முகம் says :
ERUTHI VARAI YAAR VARUVAAR ENBATHAI UNARTHIYA VITHAM ARUMAI.

அன்புவட்டம்
என்.கோமதி says :
குற்றால அருவியின் பெருமையை கொழித்த (அலப்பறை) விதம் சூப்பருங்கோ..மணிக்கணக்காய் அருவியில் நனைந்து, வெளியே வந்து உடம்பு வெடவெடக்க, பற்கள் தந்தியடிக்க சூடாக,காரமாக மிளகாய் பஜ்ஜியை கடிக்கும் சுகத்தை விட்டுட்டீங்களே மேடம்.

தி.வள்ளி says :
செல்போன் கவிதை அருமை ..யதார்த்தம் …கொஞ்சம் கொஞ்சமாக மனிதனை அது விழுங்குவது கண்கூடு ..

கவிதை
டாக்டர். செல்வராஜ். கரூர். says :
ஒரு எழுத்தாளருக்கு ஒரு கவிதை வாய்ப்புத் தருவதே சிறப்பு. பிறருக்கும் வாய்ப்புத் தரலாமே.

Related Articles

Stay Connected

264,228FansLike
1,875FollowersFollow
1,500SubscribersSubscribe
spot_img

To Advertise Contact :

Related Articles

சொல்ல விரும்புகிறோம்!

0
புத்தகப் பதிப்பில் தடம் பதிக்கும் இளம் புயல் வேலூர் லட்சுமிப்பிரியாவின் நேர்காணலை இவ்வார மங்கையர் மலரில் படித்து பெருமிதம் அடைந்தேன். எழுத்தாளர்களை ஊக்கப்படுத்துவது, அவர்கள் எழுதிய நூல்களை அச்சிட்டு வெளியிடுவது, புத்தகங்களை மின்...

சொல்ல விரும்புகிறோம்.

0
தலைமை ஆசிரியை லீமாரோஸ்லிண்ட் அவர்களின் பணியைப் பற்றி படிக்கும்போது இப்படியும் ஒரு ஆசிரியை பணியாற்ற முடியுமா என்று அனைவரையும் வியக்க வைக்கிறது. பாராட்ட வார்த்தையில்லை. - எஸ்.கெஜலட்சுமி, லால்குடி 'எந்தையும் தாயும்' சிறுகதை படித்தேன். யதார்த்தமான...

சுண்டல் சுவை கூட..

0
வாசகர் ஜமாய்க்கிறாங்க - ஆர்.ஜெயலெட்சுமி * சுண்டலுக்கான கொண்டைக் கடலையை ஊறவைத்த பின்பு, வெயிலில் ஒரு மணி நேரம் வைத்துவிட்டு வேக வைத்தால் சுண்டல் சுருக்கமின்றி பெரிது பெரிதாக இருக்கும். * பட்டாணி சுண்டலை வேகவைத்து இறக்கும்போது...

எந்தையும் தாயும்!

0
கதை : ரேவதி பாலு, ஓவியம் : ரமணன் "சுந்தரி! பேசாம இந்த சைக்கிளை மணிக்குக் கொடுத்துடலாமா? பாவம்! மாமிக்கு உபகாரமா இருக்குமே?" சுந்தரி திகைத்துப்போனாள். அவள் உள்மனதில் தன் பிள்ளை அம்பி பெரியவனானதும் அவனுக்கு...

ஒரு வார்த்தை!

0
- அனுஷா நடராஜன்
spot_img

To Advertise Contact :