online@kalkiweekly.com

சொல்ல விரும்புகிறோம்

ங்கிதமின்றி கணவருக்கு எரிச்சல் மூட்டினாலும், லதாவின் பொறுப்பும், அக்கறையும் கிரேட்டுங்க.

– என்.கோமதி, நெல்லை

டுத்து உறங்கும் பாயில் இவ்வளவு விஷயங்களா? இத்தனை பயன்களா?’ என்று ஆச்சரியப்பட வைத்தது. அதிலும் கர்ப்பிணிப் பெண்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்துகொள்ள வாய்ப்பு தந்த சகோதரிக்கு நன்றிகள்.

தாய்மொழி வந்த நீதி… அந்த நீதியை வழங்கிய நீதியரசர் வணக்கத்திற்கு உரியவர். நீதிமன்றத்தில் நீதியரசர்கள் இந்த வழியில் சென்றால் வாதி பிரதிநிதிகளின் உண்மையான உணர்வுகளைப் புரிந்து, நீதி வழங்க ஏதுவாக இருக்கும்.

– க. மோகனசுந்தரம், திருநெல்வேலி

விருந்துக்கும் விழாக்களுக்கும் மேக்கப்புடன் முகத்தை எப்படி, ’பளிச்’ன்னு ஆக்கிக்கொண்டு செல்கிறோமோ, அந்த அளவுக்கு மேக்கப்பை முறையாகக் கலைத்து, சருமத்தின் இயற்கைத் தன்மையை. ’பளிச்’ன்னு ஆக்குவதும் அவசியம் என்பதை எடுத்துரைத்த விதம் சூப்பர்.

– ஜெயகாந்தி மகாதேவன், பாலவாக்கம்

ணக்கம். ’நேசிக்கக் கற்றுக்கொள்’ என்ற படக்கதை சிந்தனைக்கு விருந்து. மிக அருமையான படங்களைப் போட்டு, பெரிய கருத்து சொல்லி எங்களை சந்தோஷத்தில் ஆழ்த்திய மங்கையர் மலரை நேசிப்பது போல படம் வரைந்து வாழ்த்த ஆசை. படம் வரையத் தெரியாதலால் மடலாக வரைந்து வாழ்த்துகின்றேன்.

– வெ.முத்துராமகிருஷ்ணன், மதுரை

’வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க’ பக்கத்தில் வந்த செய்திகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான ருசியுடன் இருந்ததால், அறுசுவை உணவு சாப்பிட்டது போல மன மகிழ்ச்சியும் மன நிறைவும் கிடைத்தது. சிந்தனைக்கு விருந்தாகவும் அமைந்தது. பிரசுரித்த மங்கையர் மலரை எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை.

– நந்தினி கிருஷ்ணன், மதுரை

ப்போதும் எதுவும் தொலைந்து விடவே இல்லை. கனவுகளைத் துரத்த நமக்கு வேண்டியதெல்லாம் போதிய அறிவும், சிறப்புப் பயிற்சியும், விடாமுயற்சியுமே என்று மிகத்தெளிவாகச் சொல்லி ஊக்கப்படுத்தியது, ’ஒரு வார்த்தை.’ மிகவும் அருமையான பயனுள்ள தலையங்கம்.

– லக்ஷ்மி ஹேமாமலினி, சென்னை.

க்கால இளைஞர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு Career choosing எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை, `ஒரு வார்த்தை`யில் அனுமேடம் மிக அழகாக, தெளிவாக, புரியும்படியாக எடுத்துரைத்துள்ளார். கனவுகளைத் துரத்த போதிய அறிவும், சிறப்பு பயிற்சியும், விடா முயற்சியும் தேவை என்ற கருத்து எக்காலத்திற்கும் பொருந்தும்.

– எஸ்.கெஜலட்சுமி, லால்குடி

’பனை’ கட்டுரை படித்தேன். வாழை மரத்தைக் காட்டிலும் பனை மரம் கூடுதலாகப் பயன் அளிக்கக்கூடியது என்ற கருத்து எல்லோரும் அறிய வேண்டிய ஒன்று. பனைமரம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வரும் இவ்வேளையில் இப்படிப்பட்ட கட்டுரை, மங்கையர் மலரில் வெளியானது, பனையை அழிவில் இருந்து காப்பாற்ற பெரிதும் உதவியாக இருக்கும்.

– ஆர்.வித்யா, பள்ளிக்கரணை

’இங்கிதம்’ என்ற சிறுகதை அருமையாக இருந்தது. ரசிக்கவும் வைத்தது; சிரிக்கவும் வைத்தது. ’தெறூ’ என்ற புதுமையான வார்த்தையைத் தெரிந்து கொண்டோம். உண்மைதான்… சாப்பிடும் பொருட்களை வீணாக்கக் கூடாது எனப் புரிந்தது.

– உஷா முத்துராமன், மதுரை.

பிரச்னைகளைத் தீர்த்துவைக்கும் சக்தி வெளியில் எங்கும் இல்லை. அது நம்மிடமே உள்ளது என்பதை, `ஒரு வார்த்தை` பகுதியில் ஆணித்தரமாக கூறியிருந்தது அருமை.

– வசந்தி மதிவாணன், அரூர்

நூறு வருடகால, ’கணபதி கெளரி’ பற்றிய பல அரிய செய்திகள் விநாயகர் மகிமையை உணர்த்தியது. ’பொன்னியின் செல்வன்’ பற்றிய ஒரு கேள்விக்கு? இயக்குனர் மணிரத்னம் அவர்களுக்கு அனுஷா வைத்த வேண்டுகோள் நியாயமானது! உண்மையானது.

– சி.கார்த்திகேயன், சாத்தூர்.

Related Articles

Stay Connected

264,228FansLike
1,876FollowersFollow
1,500SubscribersSubscribe
spot_img

To Advertise Contact :

Related Articles

சொல்ல விரும்புகிறோம்!

0
'மடியுடன் உறவாடும் மடிப்பிள்ளையும் கையுடன் குலாவும் கைப்பிள்ளையும் அவசியமெனினும் தங்களது ரத்தமான உயிர்ப்பிள்ளைகளையும் தங்களுக்கு உயிர் கொடுத்த பெரிய பிள்ளைகளையும் (பெற்றோர்களையும்) தவிக்க விடாமல் பாதுகாக்க வேண்டியது இடையில் செயல்படும் பிள்ளைகளின் கடமை. (ஆனால், இது மிஸ்ஸிங்) என்பதைப் படிக்கையில்...

சொல்ல விரும்புகிறோம்!

0
புத்தகப் பதிப்பில் தடம் பதிக்கும் இளம் புயல் வேலூர் லட்சுமிப்பிரியாவின் நேர்காணலை இவ்வார மங்கையர் மலரில் படித்து பெருமிதம் அடைந்தேன். எழுத்தாளர்களை ஊக்கப்படுத்துவது, அவர்கள் எழுதிய நூல்களை அச்சிட்டு வெளியிடுவது, புத்தகங்களை மின்...

சொல்ல விரும்புகிறோம்.

0
தலைமை ஆசிரியை லீமாரோஸ்லிண்ட் அவர்களின் பணியைப் பற்றி படிக்கும்போது இப்படியும் ஒரு ஆசிரியை பணியாற்ற முடியுமா என்று அனைவரையும் வியக்க வைக்கிறது. பாராட்ட வார்த்தையில்லை. - எஸ்.கெஜலட்சுமி, லால்குடி 'எந்தையும் தாயும்' சிறுகதை படித்தேன். யதார்த்தமான...

சொல்ல விரும்புகிறோம்

0
இந்த வார மங்கையர் மலரில், `எடைக் கட்டுப்பாடு’ என்ற தலைப்பில் வந்த கட்டுரை அருமை. பயனுள்ள இக்கட்டுரையை அனைவரும் படித்துக் கடைபிடிக்க வேண்டும். - ஆர்.வித்யா சதீஷ்குமார், பள்ளிக்கரணை நவராத்திரி நேரத்தில் ஒன்பது வகையான சுண்டல்களை...

மனதை திசை திருப்பு!

0
எழுத்து : லேzy ஒரு கப் zen - 10 காவிரிக் கரையோரம் ஆரவாரமில்லாத ஒரு குக்கிராமம். ஆள் நடமாட்ட மில்லா ஆயிரம் ஆண்டு சிவாலயம். பழுதடைந்த கோபுரம், செடிகள் முளைத்த மண்டபம். காடாகிக் கிடந்த பூந்தோட்டம், கவனிப்பாரின்றி வளர்ந்து நிற்கும் தென்னந்தோப்பு. ஆழ்ந்த நித்திரையில்...
spot_img

To Advertise Contact :