online@kalkiweekly.com

spot_img

ஜன்னல் ஜோடி

சிறுகதை
பாலா சங்கர்
ஓவியம் : தமிழ்

வீட்டில் இருந்து வேலை செய்ய வேண்டுமென்றால் அதற்கான ஏற்பாடுகளும் பரிவாரங்களும் வேண்டுமே? அலுவலகத்தைப் போல் ஒரு ஜன்னல் அருகில் தன் மேசையைப் போட்டு, அதனருகில் கம்பியூட்டருக்கு வேண்டிய இத்யாதிகளைத் தயார் செய்து வீட்டு அலுவலகத்தைத் திறந்து இயங்கி வந்தான் அருண். இரண்டு மணி நேரமாவது தொடர்ந்து நாற்காலி யில் அமர்ந்தபின்தான் சிறிய ஓய்வு என்றெல்லாம் மனைவி சுமித்ராவிடம் ஒப்பந்தம் போட்டிருந்தான். ஜன்னலை நோக்கி அவ்வப்போது சிந்தனைக்கு வளம் சேர்ப்பான் அருண்.

ஒரு நாள் நான்கைந்து புறாக்கள் ஜன்னலுக்கு வெளியே இருந்த பலகையில் வந்து அமர்ந்தன. அவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தபோது வேலைக் கவனம் சற்று தடைப்பட்டது. இரண்டு மூன்று நாட்கள் இது நடந்தபின் ஒருநாள் ஒரே ஒரு புறா பறக்க முடியாமல் தத்தளித்ததைக் கவனித்தான். புறா பற்றிய சமாசாரங்கள் முன்பின் தெரியாதலால் புறாவை எடுத்துப் பார்த்ததில் சிறகின் கீழ் காயம் ஏற்பட்டுள்ளதைக் கவனித்தான் அருண். அதற்கு மருந்தும் தடவினான். எப்படியோ சமாளித்துக்கொண்டு தன் கூட்டத்தோடு சென்ற சற்றுப் பருமனான அந்தப் புறா மறுநாள் வந்தது. இன்று அதற்குப் செர்ரிப்பழம், முந்திரி, வெள்ளரி, பூசணி விதை அடங்கிய உணவுகளைக் கொடுத்து மறுபடியும் மருந்தைத் தடவினான் அருண்.

இந்த வழக்கம் சில நாட்கள் நடந்தேறியது. காயமும் குணமடைந்த தாகத் தெரிந்தது. ஒரு குறிப்பிட்ட வேளையில் புறா வரவில்லையென் றால் எல்லா ஜன்னல்களிலும் நோட்டம் விடுவான் அருண். அது வரும் வரை மனச்சஞ்சலம்தான். சில சமயங்களில் அவரவர் மொழியில் ஏதோ பரிமாறிக் கொள்வது போல் இருக்கும். அருணின் ஃபேஸ்புக் வரைதளப் புகைப்படம் அந்தப் புறாவாக மாறியது. வேலைக்கு வேட்டு வரக்கூடாதே என்பதற்காக மாலை நேரத்தை அதிகரித்து சமாளித்தான். இன்றைய லௌகீகப்படி மாலை இரவுகளில் அலுவலகத் தொலைபேசி அழைப்புத் தொல்லையைப் பற்றிக் கவலைப்படவில்லை. இரண்டு மாதங்கள் கழிந்த தைக் கூட அருண் கவனிக்கவில்லை.

அலுவலகத்திலிருந்து ஒரு மின்னஞ்சல் மின்னலிடி போல் வந்தது. ‘இனி வீட்டில் வேலை செய்ய வேண்டியதில்லை. அலுவலகம் சென்று வேலை செய்வதுதான் பலரின் விருப்பம் என ‘சர்வே’ மூலம் கண்டதால், எல்லோரும் திரும்பி வர வேண்டும்’ என்ற உத்தரவை எதிர்பார்க்கவில்லை அருண். புறாவை நினைத்துக் கவலையுற்றான். ஒரு மணி நேரம் உத்தரவு வாங்கலாமா என்று நினைத்தால் போய்வர அதற்குமேல் நேரமாகும் என்பதை உணர்ந்தான். மனைவி சுமியும் பல நாட்கள் வெளியில் சென்று வேலை பார்ப்பதால் என்ன செய்வதென்று தெரியவில்லை. இருப்பினும் சனி, ஞாயிறு தினங்களில் புறாவைச் சந்தித்தான். ஆனால் ஒரு வாரம் அது வரவில்லை. சுமி ஜன்னலை மூடிவிட்டுச் சென்றதால் அந்தப் பழக்கம் விட்டுப்போனது. ஜன்னலுக்கு வெளியே புறாவின் மலக்கழிவு கிடப்பது அவளை அவ்வப்போது பாதித்தது, ஜன்னல் மூடியதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

ஒரு சிலர் கேட்டுக்கொண்டதன் பேரில் மேலாளர் சம்மதத்துடன் வாரத்தில் சில நாட்கள் வீட்டில் வேலை செய்யலாம் என்ற புதிய அறிவுரையை முதலில் அமல்படுத்தினான் அருண். ஆனால் புறாவை எப்படிக் கூப்பிடுவது? புறாவுக்கு முகவரி தெரியுமென்று சொல்வார்கள். அதனால்தான் பண்டைக் காலத்தில் புறா மூலம் தபால்கள் அனுப்பப் பட்டன. ஆனால் அருணுக்குப் புறாவின் இருப்பிடம் தெரியாதே? ஜன்னலை முழுதும் திறந்து உணவு வைத்துப் பார்த்தது வெற்றியாக அமைந்தது. புறா அருண் உறவு மீண்டும் மலர்ந்தது. ஆனாலும் வாரத்தில் இரண்டு நாட்கள் அலுவலகம் செல்லவேண்டுமே? இதை எப்படி புறாவுக்கு எடுத்துச் சொல்வது? ஜன்னலுக்கு வெளியே தினமும் உணவை வைத்துச் செல்ல ஆரம்பித்தான் அருண். அந்த உத்தி செயல்பட்டாலும் சில நாட்கள் புறா வரவில்லை.

புறாவின் உறவு பறி போய் விடுமோ என்று பயந்த அருணுக்கு ஒரே ஒரு வழிதான் தோன்றியது. வேலையை ராஜினாமா செய்தான். இரு வாரங்கள் கழித்து நண்பன் ஒருவன் ஒரு ப்ராஜக்ட் தர அதில் சில நாட்கள் கழிந்தன. வேலையும் பணவரவும் குறைந்தாலும் புறாவின் நட்பில் முறிவு ஏற்படாமல் வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது. சில நாட்கள் புறா நண்பர் களைக் கூட்டி வந்து அருணுக்கு அறிமுகம் செய்வது போல் காணப் பட்டது. புறாக்களைப் பற்றி இப்பொழுது ஒரு ‘ப்ளாக்’ என்ற வரைதளப் பத்திரிகை எழுதி வந்தான் அருண். ‘நான் ஒரு புதிய உறவில் இருக் கிறேன்’ என்றும் குறிப்பிட்டிருந்தான்.

ஒழுங்காக எல்லோரையும் போல் வேலைக்குச் சென்று சம்பாதிப்ப தில் கவனம் செலுத்தாதது சுமிக்குப் பிரச்னையாக இருந்தது. இது சம்பந்த மாகக் கேள்வி கேட்டு சர்ச்சையில்தான் முடிந்தது. ‘புறா வரும் சமயம் ஒன்று அல்லது இரண்டு மணி நேரம்தானே. மற்ற நேரங்களில் வேலை செய்யலாமே’ என்று சொல்லிப் பார்த்தாள். ஆரம்பித்தாலும் தொடர்ச்சியாக நடைபெறவில்லை அந்த அமைப்பு. புறாவை பாசத்தின் பங்குதாரராக சிறிதும் எண்ணாமல் வெறும் பொழுதுபோக்கின் எல்லை கடந்த செய லாகவே கருதினாள் சுமி. அவள் விவேகம் நிறைந்தவள். ஐந்து அல்லது ஆறு வருடங்கள் புறாவின் ஆயுட்காலம் என்று சுமி அறிந்தாலும் ஒரு நெடுநாளையத் தீர்வு காண வேண்டுமே?

தீர்வு கிடைத்தது. அதுவும் சுமியின் முயற்சியால். சுமியின் அலுவலகத்திலேயே அருணுக்கும் வேலை ஏற்பாடு செய்தாள் – முற்றிலும் வீட்டிலிருந்து செயல்பட. ‘சைபர் செக்யூரிட்டியில் உங்களுடைய அனுபவம் எங்களுக்கு மிகவும் அவசியம். இப்படி ஒரு நபரை பல மாதங்களாகத் தேடி வருகிறோம். நல்லவேளை சுமி தற்செயலாக என்னிடம் சொன்னாள்’ என்று ஒரு மேலதிகாரி சொன்ன அமுதமொழி அருணின் புறா புராணத்தை நீடிக்க உதவியது.

Related Articles

Stay Connected

264,228FansLike
1,876FollowersFollow
1,500SubscribersSubscribe
spot_img

To Advertise Contact :

Related Articles

மயங்கினேன் உன்னைக்கண்டு

சிறுகதை வேதா கோபாலன்                                              ...

காணாமல் போன அந்த 47 பேர்கள்!

சிறுகதை துடுப்பதி ரகுநாதன்                                             ...

உனக்கும் கீழே உள்ளவர் கோடி

0
தனுஜா படம்: தமிழ் நாம் பலமுறை சென்று வரும் ரயில் பயணங்களின் பின்னணியில் இவ்வளவு பொறியியல் இருப்பதை சிறிதும் சிந்தித்திருக்க மாட்டோம். ஒரு கிலோ மீட்டர் தண்டவாளத்தில் சுமார் 154 ரயில் ‘பார்’களும் சுமார் 1540...

யூ டூ?

0
பாமா கோபாலன் கடற்கரையில் காத்திருந்தாள் ஷாலினி. பத்து நகங்களையும் கடித்தாகிவிட்டது.இனி யாராவது நகம் கடன் தந்தால்தான் உண்டு.சுரேஷும் கடற்கரையில் காத்திருந்தான். “லவர்ஸ்” என்றால் ‘அலை மோதும் பீச்சில்தான் காத்திருந்து சந்திக்கணும்’னு ஏதாவது ரூல் போட்டிருக்கா...

வானில் ஒலித்த பாரதியின் பாடல்கள்

0
பாரதி நினைவு நாள் நூற்றாண்டு சாந்தி ஜெகத்ரட்சகன் செப்டெம்பர் 18, காலை 5 மணி. பரபரப்பாக இயங்கத் தொடங்கிய சென்னை விமான நிலையத்தின் புறப்பாடு மையம் திடும் மென்று குழந்தைகளின் குரலில் பாரதியார் பாடல்கள் ஒலித்தன....
spot_img

To Advertise Contact :