வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க
படங்கள் : பிரபுராம்
“உங்க வீட்டுக்காரர் சமையல் டிப்ஸ் தந்தார்னு ஏன் கோபப்படறே?”
“பின்ன… சீடை கெட்டியானா, ஊற வைச்சு சப்பிடலாம் அல்லது பொடி செய்து சாப்பிடலாம்னு சொல்றாரே!”
– ஆர்.பத்மப்ரியா, திருச்சி
“தலைவரே! உங்களுக்கு லோகமான்ய திலகர், சுப்பிரமணிய சிவா இவர்களையெல்லாம் தெரியுமா?”
“தெரியும்! ஆனா, எந்தக் கட்சி தலைவர்கள்னுதான் தெரியாது!”
– வி.ரவிந்திரன், ஈரோடு
“லஞ்சம் வாங்கிய தலைவர் எப்படி விடுதலை ஆனாரு?”
“லஞ்சம் கொடுத்துதான்.”
– எஸ்.கே.செளந்தரராஜன், திண்டுக்கல்
“இது மன்னரின் குதிரையின்னு எப்படி சொல்ற?”
“போர் என்றவுடனே பயந்து ஓடுதே…”
– எஸ்.கே.செளந்தரராஜன், திண்டுக்கல்
“மன்னர் சோகமாக இருக்காரே… ஏன்?”
“போருக்குப் போக ஊரடங்கில் தளர்வு தந்துட்டாங்க.”
– எஸ்.கே.செளந்தரராஜன், திண்டுக்கல்