23-09-2022

வெள்ளிக்கிழமை
dina palan
dina palan

மேஷம்

இன்று திட்டமிட்டு காரியங்களை செய்வீர்கள். தயக்க குணத்தை விடுவது வெற்றிக்கு உதவும். காரிய அனுகூலம் உண்டாகும். மனதில் தைரியம் அதிகரிக்கும். வீட்டிலும் வெளியிலும் உங்களது செயல்களுக்கு ஆதரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில் வியாபாரம் திருப்தியாக நடக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வாடிக்கையாளர்கள்  மத்தியில் மதிப்பு கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும்.

அஸ்வினி: வழக்குகளை தள்ளிப்போடுவது நல்லது.

பரணி: எடுத்த காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.

க்ருத்திகை: உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இந்த சங்கடங்கள் சரியாகும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

ரிஷபம்

இன்று குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையில் நெருக்கம் உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகள் மூலம் சந்தோஷம் கிடைக்கும். நீங்கள் செய்யும் காரியங்களுக்கு எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.

க்ருத்திகை: புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பதில் கிடைக்கும்.

ரோகினி: புதிய நபர்களின் அறிமுகம் நன்மை உண்டாக்கும்.

மிருகசீரிஷம்: எடுத்த காரியத்தை செய்துமுடிப்பதில் இழுபறியான நிலை காணப்படும்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

மிதுனம்

இன்று புதிய இடங்களில் திறமையை வெளிப்படுத்தும் போது கவனம் தேவை. எதிர்ப்புகள் விலகும். எதிலும் உடனடியாக முடிவு எடுக்க முடியாத நிலை ஏற்படும். மற்றவர்கள் மத்தியில் உங்களது பேச்சுக்கு முக்கியத்துவம் இருக்காது. எனவே அறிவுரைகள் கூறுவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் ஒரு சில சிக்கலான கட்டங்களை சந்திக்க நேரிடும். ஆனால் முடிவில் எதிர்பார்த்தபடி சாதகமான பலன் கிடைக்கும். கூடுதலான லாபம் கிடைக்க அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலும், மன சோர்வும் அடைய நேரிடும்.

மிருகசீரிஷம்: சாதாரணமாக பேசினாலும் மற்றவர்கள் அதில் குறை காண்பார்கள். 

திருவாதிரை: குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களது ஆலோசனை கேட்டு நடப்பது மனதுக்கு திருப்தி தரும்.

புனர்பூசம்: உத்தியோகம் தொடர்பான  இடமாற்றம் உண்டாகலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

கடகம்

இன்று குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் நிம்மதியை பாதிப்பதாக இருக்கும். கணவன், மனைவிக்கிடையே திடீர் இடைவெளி ஏற்படலாம். பிள்ளைகள் மூலம் வீண் செலவு, சிறு பிரச்சனைகள் உண்டாக நேரலாம். கவனமாக இருப்பது நல்லது. எதிலும் உடனடி முடிவு கிடைக்காமல் இழுபறியான நிலை காணப்படும். மற்றவர்களிடம் கவனமாக பேசுவது நல்லது. மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் வீண் அலைச்சல் உண்டாகும். எதையும் செய்யும்போது கவனமாக இருப்பது நல்லது.

புனர்பூசம்: வாகனங்களில் செல்லும் போதும், ஆயுதங்களை கையாளும் போதும் கவனம் அவசியம்.

பூசம்: எண்ணியதை செய்து முடிப்பீர்கள்.

ஆயில்யம்: புதிய காரியங்களை முடிக்க அதிகம் அலையவேண்டி இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9

சிம்மம்

இன்று கடின உழைப்பும் நேர்மையான போக்கும் காணப்படும். செலவு குறையும். எதிலும் அவசர முடிவு எடுப்பதை தவிர்ப்பது நல்லது. எதையும் ஆக்கபூர்வமாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். மன தெளிவு உண்டாகும். திடீர் இடமாற்றம் உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு வெற்றி காண்பார்கள். ஆனால் மனதில் ஏதாவது குறை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்படுவார்கள். நிர்வாகத்தினரின் ஆதரவும் கிடைக்க பெறுவார்கள்.

மகம்: தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும்.

பூரம்: அனைவரையும் அனுசரித்து செல்வது நன்மை தரும்.

உத்திரம்: முக்கிய முடிவு எடுக்கும் போது தடுமாற்றம் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

கன்னி

இன்று குடும்பத்தில் நிம்மதியும் சுகமும் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். தாய், தந்தையின் உடல் நிலையில் கவனம் தேவை. குடும்ப வருமானம் உயரும். பிள்ளைகள் உங்களது வார்த்தைகளை மதித்து நடப்பார்கள். எந்த சூழ்நிலையிலும் நிதானமாக யோசித்து எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பயணம் செல்ல நேரலாம். மாணவர்கள் கல்வி தொடர்பாக எடுக்கும் முடிவுகளில் அவசரம் காட்டாமல் நிதானமாக செயல்படுவது நன்மை தரும்.

உத்திரம்: கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

ஹஸ்தம்: செயல்திறன் அதிகரிக்கும்.

சித்திரை: மற்றவர்கள் கூறுவதை கேட்டு அதன்படி நடக்கும் முன்பு அது சரியா தவறா என்று யோசித்து பார்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 5, 6

துலாம்

இன்று செலவு கூடும். சாதகமான பலன் உண்டாகும்.  உடல் ஆரோக்கியம் உண்டாகும். மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில்  செல்லும் போதும் ஆயுதங்களை கையாளும் போதும் கூடுதல் கவனம் தேவை.  முன் கோபம் ஏற்பட்டு அதனால் வீண்தகராறு ஏற்படலாம். நிதானமாக செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற மிகவும்  கவனமாக  இருப்பது நல்லது. செலவை  குறைப்பதன் மூலம் பண தட்டுப்பாடு குறையலாம். பேச்சில் கடுமையை காட்டாமல் இருப்பது நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி புரியும் இடங்களில் எச்சரிக்கையுடன்  இருப்பது நல்லது. குறிப்பாக எந்திரங்களை இயக்கும் போது கவனம் தேவை.

சித்திரை: உத்தியோகத்தில் இருப்பவர்கள் குறிக்கோள் இன்றி வேலை செய்ய வேண்டி இருக்கும்.

ஸ்வாதி: எதிர்ப்புகள் விலகும்.

விசாகம்: காரிய தடைகள் நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் குதூகலமான சுப பலன்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே பந்தபாசம் அதிகரிக்கும். குழந்தைகளின் மூலம் மனமகிழும் படியான சூழ்நிலை உருவாகும். நண்பர்கள் உறவினர்களுடன் கவனமாக பேசி பழகுவது நல்லது. மனதில் வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். முன்கோபத்தை குறைப்பது நன்மையை தரும். மாணவர்கள் மற்றவர்களுடன் பழகும் போது கவனமாக இருப்பது நல்லது. கல்வி பற்றிய மனக்கவலை ஏற்பட்டு விலகும். குடும்பத்தில் இருக்கும் பிரச்சனை தீரும். காரியவெற்றி உண்டாகும்.

விசாகம்: எதிலும் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது.

அனுஷம்: பணவரவு இருக்கும்.

கேட்டை: உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள்.

.அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

தனுசு

இன்று பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேரலாம். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேரிடும். சாதூர்யமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். திடீர் உடல்நலக் கோளாறு ஏற்படும். தொழில் வியாபாரத்தில் இருந்த முட்டு கட்டைகள் நீங்கும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரலாம். பணவரத்து திருப்தி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். அதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்க பெறுவீர்கள்.   உத்தியோகம் தொடர்பான இடமாற்றம் ஏற்படலாம்.

மூலம்: மனம் விரும்பியது போல செயல்படுவீர்கள்.

பூராடம்: எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

உத்திராடம்: பணவரத்து இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

மகரம்

இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து  செல்வது நல்லது. குழந்தைகளின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். சாதூரியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் தேடி வரலாம். மாணவர்கள் மற்றவர்களை திருப்தியடையச் செய்யும் வகையில் உங்களது செயல்கள் இருக்கும். கல்வியில் ஆர்வம் உண்டாகும்.

உத்திராடம்: காரிய தடங்கல்கள் அகலும்.

திருவோணம்: பிள்ளைகளிடம் பக்குவமாக நடந்து கொள்வது நன்மை தரும்.

அவிட்டம்: உங்களது பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 2, 9

கும்பம்

இன்று காரிய அனுகூலம்  ஏற்படும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை  அதிகரிக்கும். விடா முயற்சியுடன் ஈடுபட்டு  காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். விருப்பங்கள்  கைகூடும். அடுத்தவரை அதிகாரம் செய்யும் போது கவனம் தேவை. வீண் பகை ஏற்படலாம்.  மற்றவர்களுக்காக பொறுப்புகளை ஏற்காமல் இருப்பது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம். தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும் அரசாங்கம் தொடர்பான பணிகளில் சாதகமான போக்கு காணப்படும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

அவிட்டம்: தொழில் வியாபாரம் சீராக இருக்கும்.

சதயம்: துணைத் தொழில் ஆரம்பிக்க எண்ணுபவர்கள் அதற்கான வேலைகளில் இறங்கலாம்.

பூரட்டாதி: குடும்பத்தில் சுபச்செலவு ஏற்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்:  4, 6

மீனம்

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் கூடும். திறமை வெளிப்படும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.  விருந்தினர்கள் வருகை இருக்கும். மரியாதையும் அந்தஸ்தும் கூடும். விடா முயற்சியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பணவரத்து திருப்திதரும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் நீங்கும். எதிலும் முழு முயற்சியுடன் ஈடுபடுவீர்கள்.

பூரட்டாதி: கணவன் மனைவிக்கிடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது.

உத்திரட்டாதி: உறவினர்கள் நண்பர்கள் வருகை இருக்கும்.

ரேவதி: உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக வேலைகள் டென்ஷனை கொடுப்பதாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 3, 7

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com