0,00 INR

No products in the cart.

திராவிடக் களஞ்சியம் என்ற பெயரில் சங்க இலக்கியங்களைப் பதிப்பித்து வெளியிடத் திட்டமா?

 சர்ச்சை

 ஹர்ஷா

சங்க இலக்கியங்களைச் சந்தி பிரித்து, திராவிடக் களஞ்சியம் என்ற பெயரில் தமிழ்நாடு அரசு வெளியிடப்போவதாக அறிவிப்பு வந்தவுடன் அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “தமிழ்நாடு சட்டப் பேரவையில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு களில் தமிழ் நூல்களைத் தொகுத்து, அவற்றை ‘திராவிடக் களஞ்சியம்’ என அடையாளப்படுத்தப் போவதாக அறிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. பெருமைமிக்கத் தொல்தமிழர் வரலாற்று அடையாளங்கள் யாவற்றையும் தன்வயப்படுத்தும் திராவிடத் திரிபுவாதிகள் தற்போது தமிழ் நூல்களின் மீதும் கைவைக்க முனைந்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது” என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

சங்க இலக்கியங்கள் என்றாலும் சரி, அதற்குப் பின்வந்த இலக்கியங்கள் என்றாலும் சரி எந்தவொரு தமிழ் நூல்களுக்கும் ‘திராவிட இலக்கியம்’ என்று பெயர் மாற்றம் செய்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அத்தகைய கொடுஞ்செயலைத் தமிழ் இளந்தலைமுறையினரும், இனமானத் தமிழர் களும் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள்” என்றும்  அவரது அறிக்கை சொல்கிறது. வேறு சில தமிழ் தேசிய அமைப்புகளும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றன.

இது குறித்து தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் பேசியபோது, “இது வேறு அது வேறு. இவர்கள்  சங்க இலக்கியத் தொகுப்பையும் திராவிடக் களஞ்சியத்தையும் ஒன்றாகச் சேர்த்துக் குழப்பிக்கொள்கிறார்கள். சட்டமன்றத்தில் எங்கள் துறை வெளி யிட்ட அறிக்கையில் பத்தாவது பிரிவின்படி சங்க இலக்கியங்களை இந்தக் காலத் தலைமுறையினரும் புரிந்துகொள்ளும் வகையில் எளிதாகச் சந்தி பிரித்து செம்பதிப்புகளாக வெளியிடுவது என்பது ஒரு அறிவிப்பு. திராவிடக் களஞ்சியம் என்பது மற்றொரு அறிவிப்பு.

 இதில் திராவிடம் சார்ந்த ஆய்வுக் கட்டுரைகள், கால்டுவெல் காலத்தி லிருந்து தற்போது அஸ்கோ பர்ப்போலா, ஆர்.பாலகிருஷ்ணன் வரையிலான ஆய்வறிஞர்களின் கட்டுரைகள், கருதுகோள்கள், இடஒதுக்கீடு, இந்தி எதிர்ப்பு, சமூகநீதி போன்றவை குறித்த கட்டுரைகள் இதில் இடம் பெறும்.

மூன்றாவதாக, தொல்காப்பியம் முதல் முத்தொள்ளாயிரம் வரையி லான தமிழ் செவ்வியல் இலக்கிய நூல்கள் ஒரே தொகுப்பாக, ஒரே இடத்தில் கிடைக்க வகை செய்யப்படும். இதற்காக வருடந்தோறும் 10 லட்ச ரூபாய் செலவிடப்படும். எல்லாவற்றையும் ஒன்றாகக் குழப்பிக்கொண்டு பேசுவது அரசியல்” என்றார்.

ஆனால் அமைச்சரின் விளக்கத்துக்குப் பின்னரும்  சர்ச்சை ஓய வில்லை. கடந்தகால தி.க. – தி.மு.க. கட்சிகளின் ‘சாதனைகள்’ மற்றும் தி.மு.க. ஆட்சியின் சாதனைகளாக நீங்கள் கருதுபவற்றை மக்கள் வரிப் பணத்தில் நூல்களாக வௌயிடுவது சரியில்லை. இத்தொகுப்பை தி.மு.க. வெளியிடுவதே சரி” என்றார்  பெ. மணியரசன்.

திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் தமிழ் தேசிய இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் இது தொடர்பாக  அறிக்கைப் போரை சமூக வலைதளங்களில் தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றனர்.

 

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

லைஃப்பாய் சோப்

0
அது ஒரு கனாக்காலம் 9 ஒரு காலத்தில் லைஃப்பாய் சோப் இல்லாத வீடே இல்லை என்னும் நிலை இருந்தது! வட இந்தியாவில் சர்வ சாதாரணமாக கடைகளில் வந்து அடித்தட்டு மக்கள் “லால்வாலி சாபூன்” (லால்...

இன்பத்த தேன் வந்து பாயுதே

0
மகாகவி, தேசியக்கவி,  என்று பரவலாக  அறியப்பட்ட பாரதி கடுமையான இலக்கிய நடைகளை உடைத்து, பாமரனுக்கும் புரியும் வகையில் புதிய கவி நடைகளைப் படைத்தவன். ஆனால், பாரதியார் ஒரு கவிஞராக மட்டுமல்லாமல் எழுத்தாளர், பத்திரிகையாளர்,...

ஆலயமும் வித்தையும்

0
கோயில்களில் போதனை என்று சொன்னேன். இதைக் கொஞ்சம் எக்ஸ்ப்ளெய்ன் பண்ணவேண்டும்! ஏறக்குறைய ஆயிரம் வருஷத்துக்கு முந்தி பல்லவ, பாண்டியர்களுக்கு மேலாகப் பிற்காலச் சோழர்கள் எனப்படுபவர்களின் ஆதிக்கம் பரவிற்று. விஜயாலயன் என்பவன் இப்படி மறுபடி...

சட்டை

0
கடைசிப் பக்கம்  சுஜாதா தேசிகன் முழுக்கை, அரைக்கை என்று எந்தப் பாகுபாடும் இல்லாமல், நான் ஒரு சட்டை பைத்தியம். சினிமா ஹீரோ எப்படிப்பட்டவர் என்று ஆரம்பிக்கும் ஆரவாரமான முதல் காட்சி போல ஒரு சம்பவத்தைச் சொல்லுகிறேன். வேலைக்கு...

 செய்தி வசிப்பாளர்களின் தேர்தல் செய்தி

0
கோபாலகிருஷ்ணன் பல்வேறு தமிழ் செய்தி ஊடகங்களில் செய்தி வாசிப்பாளர்களாகப் பணி புரிந்த / பணிபுரியும்  செய்தியாளர்களின் நலனுக்காக கடந்த ஆறு ஆண்டு களாகத் தொடர்ந்து பாடுபட்டுக் கொண்டுவருகிறது தமிழ் செய்தி வாசிப்பாளர் கள் சங்கம்....