online@kalkiweekly.com

spot_img

திரும்பும் திசையெல்லாம் சிலைகள்!

– ஆதிரை வேணுகோபால்

புதுவையில் இருந்து ஏம்பலம் வழியாக 25 கிலோ மீட்டர் தூரம் சென்றால் வரும் மிகச் சிறிய கிராமம் தென்னம்பாக்கம். இங்குள்ள அழகரே எங்கள் குலதெய்வம். அரசு, நாவல் மரங்களும் அவற்றுக்கு இணையாக முட்செடிகளும் அடர்ந்து கிடக்கும் ஒதுக்குப்புறம். முகப்பில் உக்கிரமாய், அதேசமயம் அன்பாய் அமர்ந்திருக்கும் அழகு முத்தைய்யனார். அவர் அருகே புஷ்கலைபூரணி. சற்று தொலைவில் அழகர் சித்தர் இறங்கி காணாமல் போன கிணறு.

ம்பீரமாக அமர்ந்திருக்கும் அழகரின் வலது கையில் பிரம்மாண்ட வாள். தலையில் கிரீடம். இடது கை கேடயத்தைப் பிடித்திருக்க, காலடியில் அவரால் சம்ஹாரம் செய்யப்பட்ட சூரனின் தலை. அவர் கையில் வைத்திருக்கும் வாளில் ஏராளமான சீட்டுக்கள் கட்டப்பட்டுள்ளன. பக்தர்கள் தங்களின் வேண்டுதல்களை சீட்டில் எழுதி இந்த வாளில் கட்டினால், கைமேல் பலன் கிட்டுமாம். இதேபோல், கன்னிப்பெண்கள் திருமண பாக்கியம் வேண்டி மஞ்சள் கயிறு, மஞ்சள் துணிகளையும் கட்டி வைக்கின்றனர். குழந்தை பாக்கியம் வேண்டி, மரத்தொட்டில்களையும் மரங்களில் கட்டித் தொங்க விடுவர்.

அழகரின் இடப்புறம் அவரது துணைவியர் புஷ்கலை பூரண சிவப்பு பட்டு உடுத்தி, சாந்தமாய் காட்சியளிக்கிறார். அவரது வலது கையில் தாமரை பூ உள்ளது. அழகு முத்தையனார் முன்னால் கம்பீரமாய் யானை மற்றும் குதிரை சிலைகள் அணிவகுத்து நிற்கின்றன.

சுமார் 300 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்தவர் சித்தர் அழகர். அவர் யார், எங்கேயிருந்து வந்தார் என்பது யாருக்கும் தெரியாது. அந்தக் காலத்தில் இது காடாக இருந்த பகுதி. ஆள் நடமாட்டமே இருக்காது. இங்குள்ள பெரிய அரச மரத்தின் கீழே சித்தர் உட்கார்ந்திருக்க, அவர் மேலே பாம்புகள் இழையுமாம். அதைப் பார்த்த அனைவரும் மிரண்டு, அவரை வணங்கி, அவரிடம் சில கோரிக்கைகளை வைத்து இருக்கிறார்கள். அந்தக் கோரிக்கைகள் 21 நாட்களில் நிறைவேறி இருக்கின்றன. அதன் பிறகு மக்கள் சித்தரை வணங்க ஆரம்பித்து விட்டனர். ஒரு நாள் அவர் நேரடியாக கிணற்றுக்குள் இறங்கி விட்டார். பலரும் உடனே உள்ளே இறங்கி அவரைத் தேடிப்பார்க்க, அவரைக் காண முடியவில்லை. அதற்குப் பிறகு அந்தக் கிணற்றின் மேல் கல்லை வைத்து மூடி அவரையே தெய்வமாக வணங்க ஆரம்பித்திருக்கிறார்கள். இப்பொழுதும் அந்தக் கிணற்றின் மேல் தினமும் பால், தயிர், விபூதி, சந்தனம், பஞ்சாமிர்தம், தேன், இளநீர் அபிஷேகமும் ஆராதனையும் நடைபெறுகின்றன.

இப்பவும் குறைன்னு வந்து நின்னு எதைக்கேட்டாலும், அது 21 நாட்களுக்குள் நிறைவேறி விடுகிறது. அவர் மறைந்த இடத்தில் ஒரு அணையா விளக்கு எரிந்துகொண்டே இருக்கிறது. அதையே பார்த்தபடி தியானம் செய்தால், அந்த ஒளியிலேயே அவர் காட்சி தருவார். இது வெறும் நம்பிக்கையல்ல; நிஜமான உண்மை என்கின்றனர் ஊர் மக்கள்.

ந்தக் கோயிலின் சிறப்பே, இங்குள்ள குழந்தை சிலைகள்தான். குழந்தை வரம் வேண்டுவோர் தங்களின் பிரார்த்தனை நிறைவேறியதும் குழந்தை சிலையை வைக்கிறார்கள். பிள்ளை படிப்பில் மந்தமாக இருந்தால், கையில் புத்தகத்தோடு குழந்தை சிலை, டாக்டர் ஆகணும்னா வெள்ளை கோட்டு போட்டு சிலை, வக்கீல் ஆகணும்னா வக்கீல் டிரஸ்ஸோட சிலை, மணக்கோலத்தில் பெண் மாப்பிள்ளை சிலை, எஞ்சினியர் சிலை, போலீஸ் டிரஸ் போட்ட சிலைஇப்படி ஏகப்பட்ட சிலைகளை இங்கு பார்க்கலாம்.

சித்திரை திருவிழா இங்கு வெகு சிறப்பானது. அழகர் சித்தர் கிணற்றுக்குள் இறங்கிய நாளை விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள். இந்தக் கோயிலில் கடந்த பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அழகர் சித்தரின் ஜீவ சமாதியை ஒட்டி சுற்றிலும் அழகாக, வித்தியாசமாக கோபுரம் கட்டியிருக்கிறார்கள். மிகவும் அமைதியாக, தெய்வாம்சம் பொருந்தியதாக அது இருக்கிறது. அங்கு போய் வந்தாலே மனதும் உடம்பும் சந்தோஷமாக இருக்கும் என்றால் அது மிகையில்லை. அழகு சித்தரை நீங்களும் தரிசித்துப் பாருங்கள்! உங்கள் வாழ்விலும் அழகு மிளிரும்!

பி.கு. : (கடந்த வாரம் முகக்கவசம் அணிந்து அழகர் மற்றும் அழகர் சித்தரை தரிசித்து வந்தோம்.)

Related Articles

Stay Connected

264,228FansLike
1,876FollowersFollow
1,500SubscribersSubscribe
spot_img

To Advertise Contact :

Related Articles

வாசகியரின் ஆஹா… ஒஹோ… பங்கேற்புடன்…

0
பல்சுவை பட்சண சிறப்பிதழ்! மங்கையர் மலர் - அக்டோபர் 30, 2021   விதவிதமான பட்சணங்கள் பாரம்பரியம், நவீனம், புதுமை, எளிமை, ஆரோக்கியம்... இந்த வரிசையில் ஏதேனும் ஒன்றை மட்டும் தேர்ந்தெடுத்து, பட்சணக் குறிப்புகளை அனுப்புங்க... (நீங்கள் அனுப்பும் குறிப்புகளைக்...

விடுபடுவோம்!

0
ஒரு கப் Zen - 13 எழுத்து : லேzy இருபத்தியொன்றாம் நூற்றாண்டில் மனிதனுக்கு survival ஒரு பொருட்டே அல்ல. உணவுக்கும் நீருக்கும் பஞ்சம் இருந்த காலமெல்லாம் மலையேறியாகி விட்டது. புயலோ, பெருமழையோ, வெள்ளமோ, எதுவாயினும்...

மங்கையர் மலர் முகநூல் பதிவுகள்!

0
மிதக்கத்தான் ஆசை! இதுவரை மிதக்கவில்லை. அதனால், கப்பல் பயணம் செய்யத்தான் ஆசை. விமானத்தில் நின்றுகொண்டு பயணம் செய்ய முடியாது. வெளியே எதையும் பார்க்க முடியாது. கப்பலின் மேல் தளத்தில் நின்று, நடந்து எல்லாவற்றையும் பார்த்து...

நிழலும் நிஜமும்!

0
கதை : மாதவி ஓவியம் : பிரபுராம் ஏற்கெனவே சினிமாவுக்கு லேட்! ரசிகர் ஷோ! ஆயிரம் ரூபாய் டிக்கெட். சிவா, ரவி, மணி ஓடும் பஸ்ஸில் ஏறினர். “ஏய்யா தம்பிகளா... ஃபுட்போர்டில் நிக்காதீங்க. உள்ளே வாங்க.” கண்டக்டரின்...

ஜோக்ஸ்!

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க படங்கள் : பிரபுராம்  “உங்க வீட்டுக்காரர் சமையல் டிப்ஸ் தந்தார்னு ஏன் கோபப்படறே?” “பின்ன... சீடை கெட்டியானா, ஊற வைச்சு சப்பிடலாம் அல்லது பொடி செய்து சாப்பிடலாம்னு சொல்றாரே!” - ஆர்.பத்மப்ரியா, திருச்சி  “தலைவரே! உங்களுக்கு லோகமான்ய...
spot_img

To Advertise Contact :