நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் மூன்றையும் சம அளவில் கலந்து அடுப்பில் சூடுபடுத்தி மிதமான சூட்டில் தலைக்குத் தேய்த்துக் குளித்தால், கூந்தலுக்கு நல்ல போஷாக்கு. ‘எண்ணெய் குளித்தல் எனக்கு ஒத்து வராது. சளி பிடிக்கும்’ எனப் பயப்படுபவர்களும் தைரியமாகக் குளிக்கலாம். – சம்பூர்ணம், திருவண்ணாமலை