0,00 INR

No products in the cart.

நான் அறிமுகமான காதல் தேசம்?

ஸ்டார்ட்.. கேமரா…. ஆனந்த்…! – 9
எஸ்.சந்திரமௌலி

மாயாவி காமிக்ஸ்களிலிருந்து துப்பறியும் சாம்பு, தமிழ்வாணனின் துப்பறியும் கதைகள் என்று படிக்க ஆரம்பித்தேன். அதனைத் தொடர்ந்து பத்திரிகைகளில் வெளியாகும் சிவசங்கரி, வாஸந்தி, இந்துமதி தொடர்கதைகளைப் படித்தேன். அடுத்து நான் வாசித்த எழுத்தாளர் கல்கி. அப்புறம் சுஜாதாவின் எழுத்துக்கள் எனக்கு அறிமுகமாயின. அடுத்து ஜெயகாந்தன், ர.சு. நல்ல பெருமாள், தி.ஜானகிராமன் ஆகியோரது சீரியசான எழுத்துக்களையும் நான் தேடிப்படித்து, என் இலக்கிய ரசனையை மேம்படுத்திக் கொண்டேன்.

இன்று சினிமாவில் முத்திரைப் பதித்து மிகப் பிரபலமாக விளங்கும் சில நட்சத்திரங்கள் அறிமுகமான படங்களில் கேமராமேனாகப் பணியாற்ற எனக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அப்படி எனக்குக் கிடைத்த முதல் வாய்ப்பு கே.டி.குஞ்சுமோன் தயாரிப்பில் கதிர் இயக்கிய ‘காதல் தேசம்’.கதிர், தன் படங்களில் காதலைச் சொல்கிற விதத்தில் ஒருவித நளினமான ஸ்டைல் இருக்கும். அவரிடம், என்னை மிகவும் கவர்ந்த இன்னொரு வித்தியாசமான பழக்கம் ஒன்று உண்டு.

அவர் ஒரு படம் எடுக்கிறார் என்றால், படப்பிடிப்பை ஆரம்பிப்பதற்கு முன்னால், அந்தக் கதை நடக்கிற இடங்களில் தானே சில நாட்கள் இருந்து, பலவிதமான விஷயங்களை கவனித்து, அனுபவித்து, அவற்றைச் சரியான முறையில் படத்தில் பயன்படுத்திக் கொள்வார். மேலும், கதிர் ஓவியக் கல்லூரியில் படித்தவர். நல்ல ரசனை உடையவர். அதனாலேயே அவரது படங்களின் காட்சிகளில் கற்பனையும் கலர் காம்பினேஷனும் அபாரமாக இருக்கும்.

‘காதல் தேசம்’ படத்தின் முக்கால்வாசி காட்சிகள் பெங்களூரில்தான் எடுக்கப்பட்டன. அங்கே பல்வேறு கல்லூரிகளிலும் படித்த நிஜமான மாணவ, மாணவிகளையே படத்திலும் பங்கேற்கச் செய்தார். சுமார் ஒரு வாரத்துக்குமேல் பல பெங்களூர் கல்லூரிகளுக்கும் சென்று மாணவ, மாணவிகள் எப்படி நடந்து கொள்கிறார்கள், எப்படிப் பேசிப் பழகுகிறார்கள், என்ன விதமாக உடை அணிகிறார்கள், என்றெல்லாம் நானும் அவருமாகக் கவனித்தோம்.

அந்தப் படத்தில் நடிக்க, பிரபல இந்தி நடிகை தபுவை ஒப்பந்தம் செய்தார். ‘காதல் தேசம்’ இரு நண்பர்களின் கதை என்பதால் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞனின் கதாபாத்திரத்துக்கு வினீத்தை பேசி முடித்தார். பணக்காரக் குடும்பத்து இளைஞன் ரோலுக்கு யார் என்பது இன்னமும் முடிவாகவில்லை; தேடிக் கொண்டிருந்தோம்.

ஒருநாள் இரவு பெங்களூரில் நாங்கள் தங்கி இருந்த ஓட்டலுக்கு வெளியில் நின்று பேசிக் கொண்டிருந்தபோது ஒரு இளைஞர் வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்து, பைக்கை நிறுத்திவிட்டு, அங்கே இருந்த ஒரு சின்னக் கடையில் ஏதோ வாங்கினார்.

‘ஆனந்த்! அதோ அந்த பையன் நாம படத்து ரோலுக்கு தேறுவாறான்னு பாருங்க!’ என்றார். அந்த இளைஞனைப் பார்த்தவுடன் நானும், ‘தேறுவாறுன்னுதான் தோணுது!’ என்றேன். உடனே ‘அந்தப் பையனிடம் விஷயத்தைச் சொல்லி அழைச்சுட்டு வா!’ என்று தன் அசிஸ்டன்ட்டை அனுப்பினார்.

‘சார்! நீங்க சினிமாவுல நடிக்கறீங்களா?’ என்று அந்த அசிஸ்டன்ட் நேரடியாகவே கேட்டுவிட, அந்த இளைஞர், முன்னே பின்னே தெரியாத யாரோ தன்னை கிண்டல் செய்வதாக நினைத்து, ‘என்ன கிண்டலா? யார் நீ?’ என்று இந்தியில் கேட்க, இவர் சற்று தூரத்தில் இருந்த எங்களைச் சுட்டிக்காட்டி, விஷயத்தைச் சொல்ல அவர் நேரே எங்களிடம் வந்தார்.

எங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு எங்கள் புதுமுகத் தேடல் பற்றிச் சொன்னோம். அவருக்கும் சினிமாவில் நடிக்க ஆர்வம் இருந்தது. மேக்-அப் டெஸ்ட் எடுத்துப் பார்த்தோம். திருப்திகரமாக இருக்கவே, அவரையே நடிக்க வைத்தோம். அவர்தான் அப்பாஸ்.

அப்பாஸைப் போலவே காதல் தேசம் படம் வாயிலாகத்தான் நான்கூட தமிழ் சினிமாவில் அறிமுகமானேன். கதிர், காதல் தேசம் எடுக்க முடிவு செய்தபோது, அவர் வேறு ஒரு கேமராமேனுடன்தான் பேசிக் கொண்டிருந்தார். ஆனால், தயாரிப்பாளர் குஞ்சுமோன் என்னுடைய முதல் படமான ‘தேன்மாவில் கொம்பத்து’ படம் பார்த்து விட்டு, காதல் தேசம் படத்துக்கு நான்தான் ஒளிப்பதிவு செய்ய வேண்டும் என்று கதிரிடம் சொல்லி விட்டார். அதன் பிறகு கதிர் என்னை அழைத்தார் என்பதெல்லாம் எனக்குப் பின்னால்தான் தெரியவந்தது.

தமிழில் ஆழமான இலக்கிய ஈடுபாடு கொண்ட இயக்குநர்களில் ஒருவர் வஸந்த். அவருடைய ‘நேருக்கு நேர்’ படத்துக்கு நான் தான் ஒளிப்பதிவாளர். அந்தப் படத்தில் முதலில் விஜய்யும், அஜித்தும்தான் நடிப்பதாக இருந்தது. அஜித் நடிக்க ஒரு சில நாட்கள் ஷூட்டிங்கூட நடந்தது. ஆனால், இந்தப்படம் கொஞ்சம் தாமதம் ஆனதாலும், அஜித் அதற்கேற்ப கால்ஷீட் கொடுப்பதில் சிக்கல் எழுந்ததாலும், அவர் நேருக்கு நேர் படத்தில் நடிக்க முடியாமல் போனது.

This content is restricted to site members. If you are an existing user, please log in. New users may register below.

Existing Users Log In
   
New User Registration
*Required field

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

வரலாற்று ஆர்வத்தைத் தூண்டிய நாவல்!

- பேராசிரியை கே.பாரதி பொன்னியின் செல்வன் புதினம் எனது இளம் வயது வாசிப்பு அனுபவத்தில் ஒரு மைல் கல். அந்தக் காலத்தில் வானொலியில் சினிமாப் பாட்டு கேட்பது கூட தவறு என்று கருதிய ஒரு...

மூன்று வகை மனிதர்கள்!

0
- ஆர்.சுந்தரராஜன் ஒருசமயம் பகவான் மகாவிஷ்ணு கருடனுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவர் கருடனிடம், “இந்த உலகில் எத்தனை விதமான மனிதர்கள் உள்ளனர் என்று உனக்குத் தெரியுமா?” என்று ஏதும் அறியாதவர் போல் கேட்டார். அதனைக் கேட்ட...

5 பரீட்சை பிட் பேப்பர்கள்; நாமக்கல் ஜெராக்ஸ் கடைகளில் பறிமுதல்!

0
தமிழகத்தில் 10-ம் வகுப்பு மற்றும் +2 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள்  நடைபெற்று வரும் நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் 5 கிலோ அளவுக்கு பரீட்சை பிட் பேப்பர்கள் கன்டறியப் ப்பட்ட சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. தமிழகம்...

kalki

0

54 புதிய சீன செயலிகளுக்கு தடை: மத்திய அரசு தடை விதிக்க முடிவு!

0
சீனாவின் புதிய செயலிகளான ஆப் லாக், ப்யூட்டி கேமரா, உள்ளிட்ட 54 சீன செயலிகளுக்குத் தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்தியாவில் பிரபலமான சீன செயலிகளான டிக்டாக், வீசேட்,...

This content is restricted to site members. If you are an existing user, please log in. New users may register below.

Existing Users Log In
   
New User Registration
*Required field