online@kalkiweekly.com

spot_img

பஞ்சபூத நவராத்திரி

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க

நவராத்திரி என்று பொதுவாகச் சொன்னாலும், அதை சாரதா நவராத்திரி, வசந்த நவராத்திரி, ஆஷாட நவராத்திரி, மாக நவராத்திரி, வன்னி நவராத்திரி என ஐந்தாக வகைப் படுத்தியுள்ளனர். இவற்றை, ‘பஞ்சபூத நவராத்திரிஎன்றும் சொல்வர்.

சாரதா நவராத்திரி பஞ்சபூதத் தத்துவங்களில் இது பிருத்வியாகிய பூமியைக் குறிக்கும். பூமியும், பூமி புத்திரர்களும் லாபம் பெற பிருத்வி நவராத்திரி பூஜை செய்யப்படுகிறது. ஆல மரத்தடியில் ஸ்ரீ சக்கர நாயகியான ஸ்ரீ ராஜராஜேஸ்வரியை முக்கியப்படுத்தி இந்த நவராத்திரியைக் கொண்டாடுகிறார்கள்.

வசந்த நவராத்திரி இது, பஞ்சபூதத் தத்துவங்களில் நீரைக் குறிக்கும். ‘அப்பு நவராத்திரி’ என்றும் இதை அழைப்பர். பங்குனி சித்திரையில் வரும் இந்த நவராத்திரி காலத்தில்தான் செடிகளும் மரங்களும் பூத்துக் குலுங்கும்.

புன்னை மரத்தடியில் இந்த நவராத்திரியைக் கொண்டாடி வழிபடுவார்கள் சித்தர்கள். இந்த காலத்தில் வாலையையும் மனோன்மணியையும் பூஜித்து ஸித்தி பெற்றார்கள். இது, பங்குனி நவராத்திரி, சிந்தாமணி நவராத்திரி என்றும் அழைக்கப்படும். இந்த வசந்த நவராத்திரியில் துர்கா பரமேஸ்வரியே பிரதானமாக பூஜிக்கப்படுகிறாள்.

ஆஷாட நவராத்திரி இந்த நவராத்திரி ஆடி (ஆஷாட) மாதத்தில் வருவதால், ஆஷாட நவராத்திரி ஆயிற்று. பஞ்ச பூதத் தத்துவத்தில் இது நெருப்பைக் குறிக்கும். இதை, ‘தேயு நவராத்திரி’ எனவும் அழைப்பர். இந்த நவராத்திரியில் வல்லமை அளிக்கும் வாராஹி வழிபடப்படுகிறாள். வாராஹி உபாசகர்களுக்கு இது விசேஷமான காலம்.

வன்னி நவராத்திரி இந்த நவராத்திரி, ‘ஆகாச நவராத்திரிஎன்றும் ‘அரு உருவ நவராத்திரி’ என்றும் அழைக்கப்படுகிறது. ஆள்வதும் அடக்குவதும் இதன் இயல்பு, கார்த்திகை மாத அமாவாசையில் அரூபத் தாயை சித்தர்கள் கானகத்தில் வன்னி மரத்தடியில் பூசனை செய்து வழிபடுவார்கள். வன துர்கையே இந்த நவராத்திரியில் பூஜிக்கப்படுபவள். இவள் ஆண்மையின் மிடுக்கில் விளங்கி, துஷ்டனை வதம் செய்து தள்ளி விடுவாள். யாரும் அசைக்க முடியாமல் அரசோச்சும் இவளிடம், விண்ணும் மண்ணும் அடக்கம். கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருபவள். தஞ்சமடைந்தவர்களைத் தாங்கி, அவர்களின் பயம் போக்கும் அம்பிகை. மந்திரங்கள் இவளை, ‘புருஷி’ என்று போற்றுகின்றன.

மகா நவராத்திரி இது பஞ்ச பூதத் தத்துவத்தில் வாயுவைக் குறிப்பதால், ‘ வாயு நவராத்திரி’ என்றும் அழைக்கப்படுகிறது. மாசி (மக) நவராத்திரியில் பசும் பொன்னான மாதங்கி எனும் சியாமளா தேவி பூஜிக்கப்படுகிறாள். அவள் நிறைவான வெற்றியை அள்ளி வழங்குபவள். பூஜிப்பவர்களுக்கு கல்வியையும் செல்வத்தையும் வழங்குபவள்.
– எஸ்.மணிமுத்து

————-

காவல் நிலையத்தில் கனக துர்கா!

தசரா விழா கோலாகலமாக நடைபெறும் விஜயவாடாவில் முதல் நாள் காவல் நிலையத்தில் இருந்து அம்மனுக்கு முதல் மரியாதை தரப்படுகிறது. தசரா கடைசி நாள் விஜயதசமியன்றுபாரு வேட்டை’ உத்ஸவம் முடித்துக்கொண்டு ஒண்டவுன் போலீஸ் ஸ்டேஷனில் உத்ஸவ மூர்த்தி பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் வேறு எங்கும் நடைபெறாத நிகழ்ச்சி இது.

காரணம் என்னவென்று வியந்தால்பிரிட்டிஷ் காலத்தில் ஒண்டவுன் போலீஸ் ஸ்டேஷனில் பிரிட்டிஷ்காரர் ஒருவர் துணை ஆய்வாளராக இருந்தார். அவர் எப்போதும் கனக துர்காவை பற்றி ஏளனமாகப் பேசுவார். மற்றவர்கள் அம்மனின் மகிமையைக் கூறினாலும், நம்ப மறுத்தார். ஒரு நாள் வேலை முடித்து வீடு திரும்பியவருக்கு அதிர்ச்சி. வீட்டில் மனைவி, நான்கு குழந்தைகள் அனைவரும் அம்மை நோய்வாய்ப்பட்டிருந்தனர். என்ன செய்வது என்று புரியாமல், நண்பர்கள் கூறியபடி வீட்டிலிருந்து வந்து வேப்பிலை, மஞ்சள் எல்லாவற்றையும் சேகரித்துக் கொண்டு வீட்டினுள் சென்றால், அதிசயமாக எல்லோரும் நலமாகி இருந்தனர். அதிர்ந்துபோன அவர், கனக துர்காவின் பரம பக்தராகி விட்டார். அதனால், ஒவ்வொரு விஜயதசமியன்றும் போலீஸ் ஸ்டேஷனில் அம்மனின் உத்ஸவ மூர்த்தியை தங்க வைத்து சகல மரியாதைகளும் செய்ய அனுமதி கோரினார்.

அவரது கோரிக்கையை ஏற்ற தேவஸ்தானம் ஒவ்வொரு விஜயதசமியன்றும் போலீஸ் ஸ்டேஷனில் உத்ஸவ மூர்த்தியை தங்க வைத்து சகல மரியாதைகளும் செய்ய அனுமதி அளித்தது.

இந்த விஷயம் 1930 Gazetteல் பதிவாகி இருக்கிறது. இன்றும் விஜயதசமியன்று விஜயவாடா ஒண்டவுன் போலீஸ் ஸ்டேஷன் நன்கு அலங்கரிக்கப்பட்டு இந்த வைபவம் நடைபெறுகிறது.
ஆர்.உமா, காரப்பாக்கம்

Related Articles

Stay Connected

264,228FansLike
1,876FollowersFollow
1,500SubscribersSubscribe
spot_img

To Advertise Contact :

Related Articles

சுண்டி இழுக்கும் சுவையில் காரக் குழம்பு வகைகள்!

0
வாசகர் ஜமாய்க்கிறாங்க அமுதா அசோக் ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி கேரட் காரக் குழம்பு தேவையானவை : சற்று நீளமான பெரிய கேரட் துண்டுகள், தேங்காய்த் துருவல், புளி, மஞ்சள் தூள், உப்பு - தேவைக்ககேற்ப. செய்முறை : வாணலியில் எண்ணெய்...

சப்ஜா சமாசாரம்!

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க! சப்ஜா விதை ஆங்கிலத்தில், ‘Basil Seeds’ என்று அழைக்கப்படுகின்றது. சப்ஜா விதை எங்கு கிடைக்கும்? இந்த சப்ஜா விதை நாட்டு மருந்து கடைகளில் இலகுவாகக் கிடைக்கக் கூடியது. சப்ஜா விதை எப்படி சாப்பிட வேண்டும்? சப்ஜா விதைகளை...

ஜோக்ஸ்

0
“இந்த வருஷ தீபாவளிக்கு என்ன ஸ்பெஷல் பட்சணம் செய்யப்போறே?” “இஞ்சி அல்வா, மிளகு லட்டு, சுக்கு பாயசம்!” - எஸ்.ராஜம், ஸ்ரீரங்கம் -------------- “இது வக்கீலுக்கு சொந்தமான ஆட்டோன்னு எப்படிச் சொல்றே?” ‘‘கோர்ட்டுக்கு இலவசம்’னு எழுதியிருக்கே.” - எஸ்.கெஜலட்சுமி ராஜேந்திரன், லால்குடி -------------- “வாத்தியார் என்னோட ஆன்சர் பேப்பரை...

ஜொலிக்கும் வைரத் தகவல்கள்!

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க * பூமியிலிருந்து சுமார் 160 கி.மீ ஆழத்தில் வைரங்கள் வெட்டி எடுக்கப்படுகின்றன. * வைரக் கற்கள் நட்சத்திரங்களில் இருந்து உதிர்ந்தவை என்று பண்டைக் காலத்தில் கிரேக்க, ரோமானிய மக்கள் நினைத்தனர். * 2,400 ஆண்டுகளுக்கு...

கும்பாபிஷேக மருந்து!

0
வாசகர் ஜமாய்க்கிறாங்க! - ஜி.இந்திராணி, ஸ்ரீரங்கம் ஏகாம்பர சுக்கு, சுக்கான் தூள், குங்கிலியம், கற்காலி, செம்பஞ்சு, சாதிலிங்கம், தேன் மெழுகு, வெண்ணெய் எனும் எட்டு பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுவது அஷ்டபந்தன மருந்து. கும்பாபிஷேகம் நடைபெறும் அனைத்து...
spot_img

To Advertise Contact :