online@kalkiweekly.com

spot_img

பிடித்து வைத்த பிள்ளையார்

சிறுகதை : தனுஜா ஜெயராமன்
ஓவியம் : சேகர்

மகா கணபதி…’ என்று சி.டியில் வரும் ஜேசுதாஸ் பாடலை மெமறந்து ரசித்தபடி, கொழுக்கட்டைக்குப் பிசைந்த மாவை கொஞ்சமாகக் கிள்ளி எடுத்து, அழுத்தி பூரணத்தை நடுவில் வைத்து இட்லி பானையில் வேகவைத்தாள் மீனு என்கிற மீனாட்சி. ஏங்க! சீக்கிரம் போய் பிள்ளையார் வாங்கி வந்துடுங்கோ… நாழி ஆகிடுச்சி” எனக் குரல் கொடுத்தாள்.

சட்டையை போட்டுக்கொண்டு, செருப்பை மாட்டினார் பஞ்சு. வண்டி சாவியை கைகளில் சுழற்றியபடி வெளியே வந்து வண்டியைக் கிளப்பினார்.

வெளியே அவ்வளவாக ஜன நடமாட்டமேயில்லை. வழக்கமான கடைகள்கூட காணவில்லை. வருடந் தவறாமல் தெருமுனையில் தெரு பிள்ளைகள் அனைவரும் சேர்ந்து காசு வசூலித்து மிகப்பெரிய, ‘ப்ளாஸ்டர் ஆப் பாரீஸ்’ பிள்ளையாரை கம்பீரமாக நிறுத்தியிருப்பார்கள். பந்தல் அலங்காரம், ஸ்பீக்கரில் பிள்ளையார் பாடல், தோரணம், பூ அலங்காரம் என களைகட்டிக் கொண்டிருக்கும். தற்போது ஊரடங்கில் ஈ, காக்கா கூட காணவில்லை. ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக சில கடைகள்.அதிலும் கவலை தோய்ந்த முகங்கள், கொள்வாரில்லாமல்.

அடிக்கடி வரும் பிள்ளையார் கோயில் முன்பு வண்டியை நிறுத்தினார். கிரில் கதவு சாத்தியிருந்தது. வழக்கமாக, பிள்ளையார் சதுர்த்தியன்று இங்கு நிற்க இடமிருக்காது. கோயில் ஸ்பீக்கரில், ‘பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்’என்ற பாடல் கூட வழியவில்லை. கோயில்களில் ஆறுகால பூஜைகளும் இல்லை… வழிபாடுகளுமில்லை. காலையில் அயரின் கைங்கர்யத்தில் சந்தனக் காப்புடன் சிம்பிளாகக் காட்சியளித்தார் யானை முகன்.

மனதில் கவலை அப்பிக்கொள்ள, ‘அடுத்த வருஷமாவது இயல்புநிலை திரும்ப வழிகாட்டப்பா’ என வேண்டினார் பஞ்சு, கம்பிகளுக்குள் இருக்கும் விநாயகருக்கு தோப்புகரணமிட்டபடி. அருகிலிருந்த கடைக்காரரிடம், ஏங்க அண்ணாச்சி! பிள்ளையார் சிலை கடை போடுறவங்க இடத்தை மாத்திட்டாங்களா? காணோமே… வேற எங்க பிள்ளையார் கிடைக்கும்?” என கவலையுடன் விசாரித்தார்.

கொசமேட்ல, கீழ வீதியில் மண்பானை செய்யறவங்களை கேட்டுப்பாருங்க… ஒரு வேளை கிடைக்கலாம்…” கொசமேட்டில் பீடி பிடித்தபடி அமர்ந்திருந்த, கைலிகட்டியவரிடம், ஏம்பா, இங்க மண்பானை செய்யறவரின் வீடு எங்க இருக்கு தெரியுமோ?” என்றவரிடம்…

அப்படியே லெப்ட் எடுத்து ரைட் எடுங்க.கடேசி வீடு” என்றான் பீடியை இழுத்தபடி அசுவராசியமா. கடைசி வீட்டிற்குச் சென்று, ஏங்க” என்று வெளியிலிருந்து குரல் கொடுத்தார் பஞ்சு. என்ன சார் வோணும்?” என்றபடி வெளியே வந்தவருக்கு மெலிந்த தேகம். மண்ணைப்பிடித்து காய்ப்பேறிய கை, கால்கள். மண்ணில் வேலை செய்தே மண் கலரில் மாறிய லுங்கி. வீடு ஏழ்மையை அப்படியே பறைசாற்றியது.

இங்க பிள்ளையார் சிலை கிடைக்கும்னாங்க” – இழுத்தார். சார்… இந்த வருஷம் கடை போடலை. மண் வரலைங்க சார். அதனால வியாபாரமும் கிடையாது; வருமானமும் கிடையாது. எங்க பொழப்பே போடுச்சி. போன வருசமெல்லாம் மூணு நாலு மாசம் முன்னாடியே பெரிய பெரிய பிள்ளையார் செலையெல்லாம் ஆர்டர் வந்தது. இந்த வருஷம் எதுவுமில்ல சார். வயித்துல ஈரத்துணி மட்டும்தான் போடல” என்றார் அலுத்தபடி.

இங்க வந்தா பிள்ளையார் சிலை கிடைக்கும்னு நம்பிக்கையா சொன்னாங்களே… வீட்ல கொழந்தைக எல்லாம் காத்திருக்காங்க பூஜைக்காக. ஏதாவது சின்ன சிலையா இருந்தாக்கூட கொடுப்பா.”இருந்த கொஞ்ச மண்ல ஒண்ணு இரண்டு புள்ளையார் தான் புடிச்சோம். காலையிலே ஆளுங்க வந்து வாங்கிட்டு போட்டாங்க. கொஞ்சம் முன்னாடி வந்திருக்கக் கூடாதா?” என்றார் ஆதங்கத்துடன்.

எனக்குத் தெரியாது. இல்லைன்னா காலையிலே வந்திருப்பேனே. ஏதாவது மிச்சம் மீதி இருக்கா பாருங்க…” என்றவாறு, வீட்டை நோட்டமிட்டார் பஞ்சு. அங்கே, அழகான களிமண் விக்ரஹம் கலர் பெயிண்ட் அடித்த படி லட்சணமாக இருந்தைக் கண்டு மகிழ்ந்தார்.

அவர் பார்வை போன இடத்தைப் பார்த்து துணுக்குற்றவராக, சார்… அது என் பொண்ணுக்காக செஞ்சது. வருஷா வருஷம் பெரிய கலரடிச்ச புள்ளையார் செலை வேணும்னு கேக்கும். நான் வியாபாரத்துல எல்லாத்தையும் வித்துப்புட்டு, மீதி இருக்குற ஏதாவது ஒண்ணைத்தான் வீட்டுக்கு எடுத்தாருவேன். வியாபாரமில்லாததால இந்த வருஷமாவது என் பொண்ணு ஆசைய நிறைவேத்தத்தான் இத செஞ்சி வெச்சிருக்கேன். அது மொகத்தைப் பாருங்க… எம்புட்டு சந்தோஷம்… குஷியா கெடக்குறா பாருங்க” என கைகாட்டினார்.

தயங்கியபடி, எவ்வளவு வேணா தரேன்னே…” என்று இழுத்தார் பஞ்சு. அப்படி எவ்ளோ தருவீங்க?” ஐநூறு தரேன்…” என்றவரை அதிசயமாகப் பார்த்தவாறு, சற்று யோசித்தார். இயலாமை அவர் முகத்தில்… மனதிலோ தயக்கம்.

அவர் மனைவி பதற்றத்துடன் தவித்தாள். குழந்தை முகத்திலோ சொல்லொண்ணா பயம். சட்டென, சரி குடுங்க…” என ஐநூறை வாங்கி பாக்கெட்டில் சொருகிக்கொண்டு, விக்ரஹத்தை எடுக்கப் போனபோது, தடுத்த மனைவியை, நாளும் கெழமையும் நலிந்தோர்க்குக் கிடையாதுடி…” என சொல்லியபடி சிலையை எடுத்தார்.

கலர் பெயிண்ட் அடித்த, கீரிடம் வைத்த விநாயகரை ஏக்கத்தோடு பார்த்தது அந்த ஏழு வயது குழந்தை. விநாயகரை எடுத்து வந்து பஞ்சாபகேசனின் கைகளில் வைத்தார். அதை எடுத்துக்கொண்டு நகர்ந்த பஞ்சுவின் முதுகைத் துளைத்தது அந்த ஏழைச் சிறுமியின் பார்வை. மனது உறுத்த, மறுபடியும் சிலையை அங்கேயே வைத்துவிட்டார்

பஞ்சாபகேசன். ஏன் சார்… நான் கொழந்தைக்கு அப்பால வேற செஞ்சித்தரேன்” என்றான். கவலையுடன் பாக்கெட்டை தடவியவாறு. வேணாம்பா குழந்தைக்கு இது என் அன்பளிப்பா இருக்கட்டும்…” பாக்கெட்டில் காசை எடுக்கப் போனவரைத் தடுத்து, தனது வண்டியைக் கிளப்பினார் பஞ்சாபகேசன்.

என்னங்க… வெறுங்கையோட வரீங்க? புள்ளையார் எங்கங்க?” என்ற மீனாட்சியிடம், நடந்ததை வரிமாறாமல் ஒப்புவித்தார். அதனாலென்ன…? நல்ல காரியம் செஞ்சீங்க… சரி விடுங்க. பிள்ளையார் காஸ்ட்லி கடவுள் கிடையாது. அதனால்தான், தெரு முக்குலயும், அரச மரத்தடியிலயும் அவரை வணங்குகிறோம். ‘புடிச்சு வெச்சா பிள்ளையாரு’என்றபடி, மஞ்சளில் பிள்ளையாரை பிடித்து வைத்து, ‘பாலும் தெளிதேனும்…’என்று பாடியவாறு திருப்தியாக நெய்வேத்தியம் செய்தாள் மீனாட்சி.

பஞ்சாபகேசன் எப்போதையும்விட, மிகுந்த மன நிம்மதியுடன் கண்களைமூடி கைகூப்பிக் கும்பிட்டார் ஆனைமுகத்தானை.

Related Articles

Stay Connected

264,228FansLike
1,876FollowersFollow
1,500SubscribersSubscribe
spot_img

To Advertise Contact :

Related Articles

ஜெயஸ்ரீராஜ் நினைவு சிறுகதைப் போட்டி பரிசுக்கதை – 2

அவர் பொருட்டு பெய்யும் மழை! கதை      : ஆதலையூர் சூரியகுமார் ஓவியம் : லலிதா சின்ன வரப்பில் இருந்த நுனா மரத்தின் நிழலில் அமர்ந்து இருந்தார் கதிர்வேல் தாத்தா. 'தன் நாற்றங்காலுக்கு நீர் பாய்ச்ச...

நிழலும் நிஜமும்!

0
கதை : மாதவி ஓவியம் : பிரபுராம் ஏற்கெனவே சினிமாவுக்கு லேட்! ரசிகர் ஷோ! ஆயிரம் ரூபாய் டிக்கெட். சிவா, ரவி, மணி ஓடும் பஸ்ஸில் ஏறினர். “ஏய்யா தம்பிகளா... ஃபுட்போர்டில் நிக்காதீங்க. உள்ளே வாங்க.” கண்டக்டரின்...

நான் சொன்னேன்னு சொல்லாதீங்க!

ஒருபக்க கதை கதை : கீதா சீனிவாசன் ஓவியம் : சுதர்ஸன் சுந்தரேசனுக்கு அன்று காலையிலிருந்தே ஏகப்பட்ட ஃபோன் கால்! தங்கை சுபத்ரா, “அண்ணே... இங்க ராத்திரி களேபரமாய்டுச்சு. நம்ப புனிதா யாரையோ லவ் பண்றாளாம். அவரு...

மாசிப் பிறை

0
ஜெயஸ்ரீராஜ் நினைவு சிறுகதை போட்டி பரிசுக்கதை - 1 ஆக்கம் : பானு ரவி, சிங்கப்பூர் ஓவியம்: ஸ்யாம் 'டான்ஸுப் பாப்பா... டான்ஸுப் பாப்பா கோபங்கொள்ளாதே. உங்கம்மா வரவே நேரஞ்செல்லும்! சண்டை போடாதே’ - தெரு முனையில்...

எந்தையும் தாயும்!

0
கதை : ரேவதி பாலு, ஓவியம் : ரமணன் "சுந்தரி! பேசாம இந்த சைக்கிளை மணிக்குக் கொடுத்துடலாமா? பாவம்! மாமிக்கு உபகாரமா இருக்குமே?" சுந்தரி திகைத்துப்போனாள். அவள் உள்மனதில் தன் பிள்ளை அம்பி பெரியவனானதும் அவனுக்கு...
spot_img

To Advertise Contact :