பூஜையின்போது, ஒரு சொம்பில் நீர் நிரப்பி அதனுள் மாவிலையை வைப்பதுண்டு. இதில் ஓர் அறிவியல் உண்மையும் மறைந்துள்ளது. மாவிலையின் காம்பில் உள்ள பால், கிருமிநாசினி. இந்தப் பால் காற்றுடன் கலக்கும். விழாவுக்கு வருபவர்களில் ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு நோய் பரவாமல் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இதை மருத்துவர்களும் ஒப்புக் கொண்டுள்ளார்கள். மாவிலை வைத்து பூஜிக்கப்பட்ட நீர், பக்தர்கள் தலைமீது தெளிக்கப்படுவதன் மகிமையும் இதுதான். – மங்களா, மதுரை