spot_img
0,00 INR

No products in the cart.

மடாதிபதி தற்கொலை வழக்கு: சீடர் உயிருக்கு அச்சுறுத்தல்!

உத்தரப்பிரதேச மாநிலம், அலகாபாத்தில் பாகம்பரி என்ற மடத்தின் தலைமை மடாதிபதியான மகந்த் நரேந்திரகிரி சில நாட்களுக்குமுன் தற்கொலை செய்துகொண்டு இறந்தார். இவர் அகில பாரதிய அகாடா பரிஷத் தலைவராகவும் இருந்து வந்தார். இந்நிலையில், தூக்கில் தொங்கிய நிலையில் அவர் சடலத்தை மீட்ட போலீசார், நரேந்திரகிரி எழுதியிருந்த கடிதத்தையும் கைப்பற்றினர்.

அந்த கடிதத்தில் நரேந்திரகிரி எழுதியிருந்ததாவது:

என் தற்கொலைக்கு சீடர்கள் ஆனந்த் கிரி, அத்யா பிரசாத் திவாரி, சந்தீப் திவாரி ஆகியோர்தான் காரணம். எனது போட்டோவை, ஒரு பெண்ணுடன் இருப்பது போல மார்பிங் செய்து அதை சமூக வலைதளத்தில் வைரலாக்க, ஆனந்த் கிரி திட்டமிட்டிருப் பதாக தகவல் வந்தது. நான் மரியாதையுடன் வாழ்ந்தவன். இப்படிப்பட்ட அவப்பெயருடன் வாழ விரும்பாததால் கடந்த 13-ஆம் தேதியில் இருந்தே தற்கொலை செய்ய முயற்சித்தேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில் நரேந்திர கிரி கூறி உள்ளார். இதையடுத்து ஆனந்த் கிரி உட்பட 3 சீடர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.இதுகுறித்து விசாரிக்க சிபிஐக்கு உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பரிந்துரைத்துள்ளார்.

இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆனந்த் கிரி தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக நீதிமனறத்தில் கூறியதை அடுத்து, நீதிபதி அவருக்கு சிறையில் பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

Other Articles

Stay Connected

263,924FansLike
1,885FollowersFollow
3,160SubscribersSubscribe

To Advertise Contact :

Other Articles

டெல்லி குடியரசு தினவிழா அணிவகுப்பு: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

0
தலைநகர் டெல்லியில் நாளை: குடியரசு தின விழாவிற்கான பாதுகாப்பு மற்றும் ஏற்பாடு பணிகள் மும்முரமான முறையில் நடைபெற்று வருகின்றது. இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட தகவல்; டெல்லியில் நாளைய குடியரசுதின அணிவகுப்பில் கலந்துகொள்ள கூடிய ராணுவ...

ஜனவரி 27-ல் டாடா நிறுவனத்திடம் ஏர் இந்தியா ஒப்படைப்பு!

0
ஏர் இந்தியா விமான நிறுவனத்தை ஜனவரி 27-ம் தேதி டாடா குழுமத்திடம் மத்திய அரசு ஒப்படைக்கும் என்றந்தகவல் வெளியாகியுள்ளது. துகுறித்து ஏர் இந்தியா நிறுவனத்தின் நிதி இயக்குநர் வினோத் தன் ஊழியர்களுக்கு பகிர்ந்துள்ள...

குடியரசு தின விழா; தமிழக காவல்துறை அதிகாரிகள் 2 பேருக்கு ஜனாதிபதி பதக்கம்!

0
நம் நாட்டின் 73-வது குடியரசு தினம் நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படும் நிலையில் குடியரசு தினத்தையொட்டி தமிழகம் உட்பட நாடு முழுவதும் 939 காவல்துறையினருக்கு ஜனாதிபதி பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழக காவல்...

கூட்டுறவு வங்கி நகைக் கடன்; கவரிங் நகைக்கு கடன் கொடுத்த 2 பேர் கைது!

0
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கவரிங் நகைகளுக்கு நகை கடன் வழங்கியதாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்திரமேரூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் செயலாளராக பணிபுரிந்து வருபவர் கலைச்செல்வி,...

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி; புதிதாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி அறிவிப்பு!

0
ஐபிஎல் கிரிக்கெட்டில் புதிதாக இணைந்துள்ள லக்னோ அணிக்கு 'லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்' என பெயரிடப்பட்டு, அதிகாரபூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது ஐபிஎல் . கிரிக்கெட் போட்டியின் 15-வது தொடர் இந்தாண்டு மார்ச் மாதம் இறுதியிலிருந்து...