0,00 INR

No products in the cart.

மழைக்காலத்தை எதிர்கொள்ள மணிமணியான டிப்ஸ்!

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க

ண்ணீரில் நீண்ட நேரம் வேலை செய்வதால் கால்கள் மிக ஈரமாக இருக்கும். அதனால் வெடிப்பு வரலாம். வேப்பிலை, மஞ்சள் சிறிது சுண்ணாம்பு சேர்த்து அரைத்து, விளக்கெண்ணை விட்டு குழைத்து வெடிப்பின் மீது பூசினால் நல்ல பலன் கிடைக்கும்.

* மழைக் காலத்தில் எந்த உணவை உட்கொண்டாலும் சற்று மிதமான சூட்டில் சாப்பிடுவது நல்லது. மீண்டும் மீண்டும் சூடு செய்து சாப்பிடுவதைத் தவிர்க்கவும். சமைத்த உடன் சாப்பிடுவது நல்லது.

* தேங்காய் எண்ணெயை ஒரு கரண்டியில் விட்டு சூடாக்கி பூங்கற்பூரத்தை அதில் போட்டு கைபொறுக்கும் சூட்டில், குழந்தையின் நெஞ்சில் தடவினால் கபம் போகும். மூச்சு விடுவது சீராகும்.

* அடிக்கடி சூப் அருந்துவது நல்லது. சூப்பில் மிளகு அதிகம் சேர்த்துக்கொண்டால் சளி தொல்லையிலிருந்து விடுபடலாம்,

* பாலில் பனங்கற்கண்டு, மஞ்சள் தூள் குங்குமப்பூ கலந்து குடிக்கலாம். இது நோய் தொற்றைத் தடுக்கும்.

* மரச் சாமான்கள் மீது சிறிதளவு மண்ணெண்யை ஸ்பெரே செய்து பின்னர் காய்ந்த துணியில் துடைக்கவும். இதனால் பூஞ்சை படிவது தடுக்கப்படும்.

* வாஷிங் மிஷின் வைத்திருப்போர் ஈரமான துணிகளை டிரையரில் போட்டு எடுத்து காற்றோட்டமான இடங்கள் அல்லது மின்விசிறி காற்றில் காய போடலாம்.

* பூண்டும் மிளகும் ஆண்டிபயாடிக் என்பதால் உணவில் சேர்க்கலாம். சுக்கு, இஞ்சி, துளசி, மிளகு தட்டிப் போட்டு டீ குடிக்கலாம். மிளகு ரசம் சாப்பிடலாம்.

* இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தலைக்கு குளித்தால் போதுமானது. மழையில் நனைந்துவிட்டால் வெந்நீரில் கூந்தலைக் காட்டி ஆவி பிடிக்கலாம். நன்றாக ஹேர் ட்ரையரைப் பயன்படுத்தி உலர்த்திவிட்டு தூங்கச் செல்லவும். தலையில் ஈரம் இருந்தால் உடல் பிரச்னைகள் ஏற்படும்.

* வழக்கமான நாட்களில் பயன்படுத்தும் பராமரிப்புப் பொருட்களை இக்காலத்தில் தவிர்த்து விடுங்கள். ஈரக் காற்றில் உலர்ந்து, கலைந்துமுடி சிக்களாக இருக்கும். எனவே அதிக வேதிப் பொருட்களைக் கலக்காத கூந்தலை மென்மையாக வைத்திருக்கக் கூடிய ஷாம்பூ பயன்படுத்துங்கள்.

* மழை காலத்தில் வெந்நீரில் குளித்தால் சருமம் நிறம் மாறாமல் இருக்கும். அதில் ஒரு கைப்பிடி வேப்பிலையைப் போட்டு வைத்திருந்து பின்னர் குளிக்கலாம். குளிப்பதற்கு முன் உடல் முழுவதும் தேங்காய் எண்ணெய் தேய்துக் கொண்டால் நல்லது.

* பாலும் மஞ்சளும் கலந்து உடலில் பூசிக்கொண்டு சில நிமிடங்கள் ஊற வைத்து பிறகு குளித்தால் மழைக் கால சருமத் தொற்றுகளைத் தவிர்க்கலாம்.

* முழங்காலிலிருந்து கணுக்கால் வரை பிற லோஷன் தடவி மசாஜ் செய்துகொண்டால் மழை நாட்களில் இந்த இடங்களில் பூஞ்சை தாக்குதல் இருக்காது. பாதங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஆன்டி செப்டிக் க்ரீம் தடவி நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். கூடியவரை வெளியே செல்லும்போது சாக்ஸ் அணிந்து செல்வது நல்லது.

* மழைக் காலத்தில் அதிகம் வியர்க்காது என்றாலும் உடல் நாற்றம் ஏற்படும். எனவே டியோடரன்ட் பயன்படுத்துவது நல்லது.

* மழைக் காலத்தில் குறைவாக மேக்கப் போட்டால்தான் அழகாக இருக்கும். குறிப்பாக் மேக்கப் போட்டிருப்பதே தெரியக்கூடாது. கூடியவரை வாட்டர்ப்ருப் மேக்கப் அயிட்டங்கள் உதவும். தண்ணீரில் எண்ணெய் மேல் ஒட்டாது என்பதாலும் இந்த மேக்கப்பை பயன்படுத்துங்கள்.

* மழையில் நனைந்ததும் முகத்தில் படிந்துள்ள தண்ணீரை ஒற்றி எடுக்க வேண்டும் . அழுத்தி துடைக்கக் கூடாது.
எம். வசந்தா, சிட்லபாக்கம்

———————-

* வீட்டில் எப்பொழுதுமே மெழுகுவர்த்தி இரண்டு பெட்டி, இரண்டு, மூன்று டார்ச் லைட்டுகள், விளக்கு ஏற்றும் எண்ணெய், தயாராக விளக்குகள் வைத்துக் கொள்ள வேண்டும். புயல் வந்துவிட்டால் மின்சாரம் தடைபடும்போது இதெல்லாம் மிக மிக உதவும்.

* மளிகை சாமான்கள் அதிலும் அரிசியும் பருப்பும் மிளகாய் வத்தலும் கோதுமை மாவும், எண்ணெயும் கூடுதலாக வாங்கி வைத்துக் கொண்டால் சமையலை சமாளித்து விடலாம். அப்பளம், வடகம் நிறைய வைத்துக் கொண்டால் தொட்டுக் கொள்ள உதவியாக இருக்கும்.

* மருந்து மாத்திரைகள், நாப்கின்கள், டெட்டால் போன்றவைகள் கைவசம் இருக்க வேண்டும்.

* மழைக் காலத்திற்கு முன்பாகவே குடைகள், ரெயின் கோட்டுகள் போன்றவைகளைத் தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

* ஹார்லிக்ஸ், பால் பவுடர் போன்றவைகள் வைத்துக் கொண்டால் பால் வராவிட்டாலும் சமாளித்து விடலாம்.

* கறுப்பு நிற உடைகள் குளிரை நன்றாகத் தாங்கும்.

* மழைக் காலத்தில் பகோடா பஜ்ஜி போன்ற பண்டங்களைத் தவிர்க்க வேண்டும். பொரித்த, வறுத்த உணவுகள் வயிற்று உபாதையை ஏற்படுத்தும்.

தினமும் தாகம் எடுக்காவிட்டாலும் நன்றாகக் கொதித்து வடிகட்டிய தண்ணீரை 2 லிட்டர் கட்டாயம் குடிக்க வேண்டும். வெந்நீரில் இஞ்சி தட்டிப் போட்டுக் குடிக்கலாம்.

* மழைக் காலம் தயிர், மோர் சாப்பிடக் கூடாது என்று மற்றவர்கள் சொல்வதைக் கேட்கக் கூடாது. இவைகளில்தான் குடலை நோயை எதிர்க்கும் கிருமிகள் மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடும்.

* காலையில் கோதுமை கஞ்சி அல்லது ஆவியில் வேக வைத்த உணவைச் சாப்பிட எளிதில் செரிமானமாகும்.

* சமையலில் மிளகை அதிகம் சேர்த்தால் மழை கால குளிரால் உண்டாகும் சளி வராது.

* வெளியே செல்லும்போது காதுகளை ஸ்கார்ப்பால் மூடியபடி சென்றால் குளிர் காது வழியாக உள்ளே சென்று ஏற்படுத்தும் தலை கனம் வராது.

* இனிப்பு, காரம் இரண்டையுமே குறைவாகவே சேர்க்க வேண்டும்.

* கொதிக்கும் வெந்நீரில் கொஞ்சம் நீலகிரித் தைலம் கலந்து தினம் ஒருமுறை ஆவி பிடிக்கலாம். சளி பிடிக்காது.

* வாரம் ஒருமுறை ஆடாதொடா இலையில் கஷாயம் வைத்து சாப்பிட சைனஸ் இழுப்பு தொந்தரவுகள் உங்கள் பக்கமே வராது.

* இரவில் படுக்கும் முன்பு ஒரு தம்ளர் சூடான பாலில் கொஞ்சம் மிளகு, பனங்கற்கண்டு, மஞ்சள் தூள் கலந்து குடித்தால் மார்பில் சளி கட்டாது.

* கீரைகள் வேண்டாமே. கீரைகளில் மழை காலத்தில் புழு, பூச்சிகள் அரிப்பு ஏற்பட்டு விடும். அவைகளைப் பயன்படுத்தினால் வயிறு கெடும்.

* குளிப்பதற்கு முன் உடலில் தேங்காய் எண்ணெய் தடவிக் கொண்டால் சருமம் வறண்டு போகாது.

* பூசணி, வெண்டை, வெள்ளரி, தக்காளி போன்றவற்றை பகலில் மட்டுமே சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* குளிர் நேரத்தில் சீக்கிரம் சாப்பிடுவதும் சீக்கிரம் தூங்குவதும் நல்லது.

* வாரம் இருமுறையாவது இஞ்சி ரசம், இஞ்சித் துவையல் என ஏதாவது ஒரு வகையில் உணவில் இஞ்சியைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

* கால்களில் க்ரீம் தடவி அதற்கு மேல் சாக்ஸ் அணிந்து கொண்டால் பாதம் வெடிக்காமலும் சில்லிட்டு போகாமலும் இருக்கும்.

* மாதுளம் பழம், திராட்சை, பச்சை வாழைப்பழம், அன்னாசி போன்ற பழங்கள் சாப்பிட வேண்டாம்.

* தொண்டை எரிச்சல், வறட்சி, தலைக் கனம் நீங்க காலையில் இஞ்சி டீ அல்லது சுக்கு காபி குடிக்கலாம்.

* டீத் தூள், புதினா, துளசி இலைகள், உடைத்த மிளகு, இஞ்சி, ரோஜா இதழ் சேர்த்து தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி தனியாகவோ இல்லை பால் சேர்த்துக் குடித்தால் சளி, தொண்டை கரகரப்பு ஓடியே போய்விடும்.

* தரையில் மழைக்கால சேறினால் அழுக்கு படிந்து விடும். செய்தித் தாளை கொண்டு துடைத்தால் பளிச்சென ஆகிவிடும்.

* துளசியை கொத்தி ஆறிய நீரில் போட்டு குடித்தால் மழைகால நோய் அண்டாது.

* மழை காலத்தில் செருப்பு, ஷுக்கள் மழை நீரில் நனைந்து ஒருவித வாடை வரும். அதன்மேலே கற்பூரத்தை தேய்த்தால் வாடை போய்விடும்.

* சாக்ஸ், ஷு முதலியவற்றால் பூச்சிகள் ஏதாவது ஒளிந்துள்ளதா என தட்டிப் பார்த்துவிட்டு குழந்தைகளுக்கும் சரி, பெரியவர்களுக்கும் சரி அணிய வேண்டும்.
ஆர். ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

மூக்குத்தியின் கதை!

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!  நாயக்கரின் ஆண்டாள் பக்தி மதுரையை ஆண்ட திருமலை நாயக்கரை அனைவரும் அறிவோம். அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் மீது கொண்டிருந்த அளவிட முடியாத பக்தி பற்றி அறிவோமா? ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் உச்சிவேளை (பிற்பகல்) பூஜை...

ஆதாயம் தேடும் மனிதர்கள்!

5
சிறுகதை - கே. அம்புஜவல்லி, புத்தூர் ஓவியம்: சேகர் சி. ஏ.  படித்து தில்லியில் மத்திய அரசாங்கத்தில் தலைமைப் பதவி வரை வகித்த நடேசன், நாற்பது ஆண்டு கால பணிக்குப் பிறகு ஒய்வு பெறுகிறார். அவர் மனைவி...

மங்கையர் மலர்  F.B. வாசகர்களின் சுதந்திர தின தகவல்கள்!

0
  காந்திஜியின் தபால் தலைகள் அரிதாகப் போற்றப்படுகிறது. பத்து ரூபாய்  மதிப்பிலான தபால் தலைகள் பதினெட்டு  மட்டுமே  தற்போது  உள்ளதாக கூறப்படுகிறது. மகாத்மாவை கௌரவிக்கும் வகையில் இந்தியாவில் 48-க்கும் மேற்பட்ட  தபால் தலைகளும், 200...

அணை கட்டும் பிராணி!

இயற்கை அதிசயம் வியந்தவர்: பத்மினி பட்டாபிராமன் ரோடன்ட் என்னும் (Rodent) பெருச்சாளி இனத்தைச் சேர்ந்த விலங்கு பீவர் (Beaver). பாலூட்டி வகையைச் சேர்ந்தது. குளம், ஏரி, ஆறுகள் போன்ற சுத்தமான நீர்நிலைகளின் அருகே வசிக்கக்கூடியவை. அமெரிக்கன்...

ஆழ்வார்கள்!

0
பகுதி -11 - ரேவதி பாலு ஆண்டாள்! பன்னிரு ஆழ்வார்களில் ஒரே ஒரு பெண் ஆழ்வார் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்தான்.  ஆண்டாள் என்றாலே அவர் அருளிச் செய்த திருப்பாவையும் அது பாடப்பட்ட புனிதமான மார்கழி மாதமும்தான் நம்...