-இந்திராணி தங்கவேல், மாடம்பாக்கம்.மிகவும் பிடித்தமானது, நெருக்கமான தோழி பரிசாகக் கொடுத்தது, என பல பெண்களின் ட்ரெஸ்ஸிங் டேபிளில் சில அழகு சாதனப்பொருட்கள் ஆண்டாண்டு காலமாக பாதுகாப்பாக இருக்கும். மருந்துகளுக்கு மட்டுமல்ல; அழகு சாதனப் பொருட்களுக்கும் எக்ஸ்பயரி தேதி உண்டு. அதிலும், பல வேதிப்பொருட்களைக் கலந்து செய்யப்படும் மேக்கப் ஐட்டங்கள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்..மேக்கப் செய்யப் பயன்படுத்தும் பிரஷ்களை அடிக்கடி கழுவ வேண்டும். மேக்கப் பிரஷ்களை முறையாக சுத்தம் செய்ய வேண்டும். தவறும்போது, அதில் பல்வேறு வேதிப்பொருட்களும் பாக்டீரியாக்களும் சேர்ந்துவிடும். மீண்டும் அதைப் பயன்படுத்தும் போது, சரும அழற்சி ஏற்பட வாய்ப்புண்டு. ஆதலால், வாரத்துக்கு ஒரு முறையாவது மேக்கப் பொருட் களை சுத்தம் செய்வது அவ சியம்..கண்களைச் சுற்றிய பகுதிகளில் இருக்கும் சருமம் மிகவும் மென்மையானது. சிலர் கண்களில் செய்த மேக்கப்பை, பஞ்சை நனைத்து முரட்டுத்தனமாக சுத்தம் செய்வார்கள், வேலை முடிந்தால் போதும் என்று. இப்படி அடிக்கடி அழுத்தித் துடைத்தால் சருமத்தில் சீக்கிரமே சுருக்கம் ஏற்பட்டுவிடும்..மேலும், கண்களில் கடுமையான முறையில் நடந்துகொண்டால், இமைகளின் அடர்த்தியும் குறைந்து விடும். ஆதலால், மேக்கப்பை கலைக்க முற்படும்போது, சற்றுநேரம் எடுத்து சுத்தம் செய்து கொள்வது நல்லது.