0,00 INR

No products in the cart.

ரஷ்யாவில் அஜித்: மோட்டார் சைக்கிளில் உலகப் பயணம்?

நடிகர் அஜித் நடித்து வரும்  ‘வலிமை’. படத்தின் சண்டைக் காட்சிகளைப் படமாக்க ரஷ்யா சென்றிருக்கிறது படக்குழு. பாலிவுட் தயாரிப்பாளரும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனிகபூர் தயாரிக்க, ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாக்கும் ‘வலிமை’ படத்துக்கான ஷூட்டிங் ரஷ்யாவில் நடந்து வருகிறது.

இந்நிலையில் தன்னுடைய காட்சிகளை நடித்து முடித்துக் கொடுத்த அஜித், ரஷ்யாவில் பைக் பயணம் மேற்கொண்டுள்ளார். ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு உலகளாவிய பைக் பயணம் குறித்து அஜித் பரிசீலித்து வந்ததாகவும் தற்போது முதல் கட்டமாக தன் பயணத்தை  ரஷ்யாவில் தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.  அஜீத் ரஷ்யாவில் மோட்டார் சைக்கிளில் சுமார் 5,000 கி.மீ. தூரம் பயணம் மேற்கொள்ள உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான அஜித்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ‘வலிமை’ படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்றிருந்தபோது அங்கிருந்து சுமார் 10,000 கி.மீ. வடகிழக்கு மாநிலங்கள் வரை சாலைப் பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

வைரமுத்து திறந்து வைத்த புத்தக வளாகம்! 

0
-லதானந்த்  சென்னை கே.கே.நகர், முனுசாமி சாலையில் அமைந்துள்ள டிஸ்கவரி புக் பேலஸின் புதிய வளாகத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், தகைசால் தமிழர், தோழர் ஆர்.நல்லகண்ணு தலைமையில், கவிப்பேரரசு வைரமுத்து ஆகஸ்ட் 12-ம்...

விருமன் விறுவிறுப்பு கம்மி!   

0
-ராகவ் குமார் .    தமிழ் சினிமாவும் இந்திய சினிமாவும் பல்வேறு மாற்றங்களை சந்தித்து கொண்டிருக்க, நமது முத்தையா மட்டும் குடி பெருமை,செண்டிமெண்ட், சொந்தத்திற்குள் திருமணம் என விருமனில் கதை விட்டு இருக்கிறார்.      தாசில்தாராக இருந்து...

நயன் – விக்கி காதல் : நெட் பிளிக்ஸ் டீஸர் வெளியீடு! 

0
லேடி சூப்பர் ஸ்டார்  நயன்தாராவும்  இயக்குநர் விக்னேஷ் சிவனும் 6 ஆண்டுகளாக  காதலித்து வந்த நிலையில், இருவருக்கும் கடந்த ஜூன் 9-ம் தேதி திருமணம் விமரிசையாக நடந்தது.   சென்னை மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில்...

தேவி ஸ்ரீ பிரசாத்  இசையமைப்பில் ‘ஹர் கர் திரங்கா’ ! 

0
-லதானந்த்.  'ஹர் கர் திரங்கா' என்ற மெய்சிலிர்க்க வைக்கும் தேசபக்திப் பாடல், வெளியிடப்பட்ட  சில மணி நேரங்களிலேயே நாடு முழுவதும் வைரலாகப் பரவி வருகிறது.   தேவி ஸ்ரீ பிரசாத், ஆஷா போஸ்லே, சோனு நிகம் மற்றும்...

வேட்டி கட்டி அசத்திய வெளிநாட்டு செஸ் வீரர்! 

0
-காயத்ரி.  மாமல்லபுரத்தில் நடைபெறும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளில் இருந்து வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். உலகம் முழுவதும் இருந்து வந்துள்ள விளையாட்டு வீரர்கள், அவர்களின் நாட்டு கலாச்சாரத்தை பிரபலிக்கும் வகையில் வண்ண...