online@kalkiweekly.com

spot_img

ராஜீவ் காந்தி பெயரில் அறிவியல் நகரம்: மகாராஷ்டிர அரசு அறிவிப்பு!

மாகாராஷ்டிர மாநிலம் புனேவில் கட்டப்பட்டு வரும் உலகத் தரம் வாய்ந்த அறிவியல் நகரத்துக்கு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பெயர் சூட்டப்படும் என்று மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து மகாராஷ்டிர அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

புனே அருகே பிம்ப்ரி சிஞ்ச்வாட் பகுதியில், உலகத் தரம் வாய்ந்த அறிவியல் கண்டுபிடிப்பு நகரம் கட்டப்படவுள்ளது. இந்த அறிவியல் நகரத்திற்கு முன்னாள் பிரதமர் ராஜிவ் பெயர் வைக்கப்படும். இந்த நகரமானது ரூ. 191 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட உள்ளது.

-இவ்வாறு அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ‘ராஜீவ் கேல் ரத்னா’ விருதின் பெயர் ’தியான்சந்த் கேல் ரத்னா’ என்று மாற்றப்பட்ட நிலையில், அசாமில் உள்ள ராஜிவ் காந்தி தேசிய பூங்காவின் பெயரை ’ஒராங்கா தேசிய பூங்கா’ என மாற்ற அசாம் சட்டப்பேரவையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. `பெயரை மாற்ற வேண்டும்` என பல அமைப்புகள் கோரிக்கை விடுத்ததையடுத்து, இம்முடிவு எடுக்கப்பட்டதாக அசாம் அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மகாராஷ்டிராவில் உருவாக்கப்பட்டு வரும் அறிவியல் நகருக்கு நாட்டின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் பெயர் வைக்கவுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

264,228FansLike
1,876FollowersFollow
1,500SubscribersSubscribe
spot_img

To Advertise Contact :

Related Articles

தமிழக ஆளுநருடன் நாளை எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ் சந்திப்பு!

0
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நாளை காலை (அக்டோபர் 20) தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. தமிழகத்தின் புதிய ஆளுநராக கே.என்.ரவி பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக அவரை...

4 மாவட்டங்களில் கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம்!

0
தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது: தமிழக கடற்கரையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று...

கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம்: நெம்மேலியில் முதல்வர் ஸ்டாலின் நேரில் பார்வை!

0
சென்னை அருகே நெம்மேலியில் கட்டப்பட்டு வரும் கடல்நீரை குடிநீராக்கும் புதிய சுத்திகரிப்பு நிலையத்தின் கட்டுமானப் பணிகளை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழ்நாட்டில் மீஞ்சூரில் நாளொன்றுக்கு 100 மில்லியன்...

இந்தி அவசியமில்லை: மன்னிப்பு கேட்ட சோமேட்டோ நிறுவனம்!

0
இந்தியாவின் ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான சோமேட்டோ. தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது. சென்னையை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் சோமேட்டோ நிறுவனத்தில் உணவு ஆர்டர் செய்து, அந்த உணவு சரியான நேரத்துக்கு வந்து சேரவில்லை...

100 பொருட்கள் ஏலம்: நெல்சன் மண்டேலா பயன்படுத்தியவை!

0
தென் ஆப்பிரிக்கா அதிபரான நெல்சன் மண்டேலா, நிறவெறிக்கு எதிராகப் போராடியவர். அதிபராக தேர்வாகுமுன்னர் அவர் கிட்டத்தட்ட 27 ஆண்டுகளை அவர் சிறையில் கழித்தார். அதன்பின்னர் நிண்ட போராட்டங்களுக்குப் பின்னர் விடுதலையாகி, 1994-ம் ஆண்டு...
spot_img

To Advertise Contact :