online@kalkiweekly.com

spot_img

வந்துட்டார்யா,வந்துட்டாரு! வடிவேலு ரிடர்ன்ஸ்!

– ராகவ்குமார்

மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் காமெடி நடிகர்களுக்கு , மனதில் சொல்ல முடியாத சோகம் இருக்கும். சார்லீ சாப்ளின் , லாரல் ஹாட்லி முதல் கலைவாணர் வரை இந்த பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது. இந்த லிஸ்டில் தற்சமயம் நமது வகை புயல் வடிவேலுவும் சேர்ந்துள்ளார்.

சினிமாவில் வாய்ப்பு குறைந்தாலும் மீம்ஸ் மூலம் நம்மை சிரிக்க வைக்கும் வடிவேலுவுக்கு என்ன சோகம் இருக்கப் போகிறது என்று நமக்கு நினைக்க தோன்றலாம் .சில நாட்களுக்கு முன்பு ஒரு விழாவில் பேசிய வடிவேலு கடந்த சில வருடங்களாக தான் சொல்ல முடியாத சோகத்தில் இருப்பதாகவும் ஆனால் தான் இதை வெளியில் சொல்ல விரும்பவில்லை எனவும் கூறினார் இந்த இரண்டு ஆண்டுகளாக கோவிட் பிரச்சனையால் மக்கள் படும் துன்பத்தை விட தான் படும் சோகம் பெரிய விஷயமல்ல என்பதால் சோகத்தின் காரணத்தை சொல்லவில்லை என்று கூறி விட்டார் .கடந்த பத்து ஆண்டுகளில் நிறைய படங்களில் நடிக்கவில்லை என்பதை மனதில் வைத்து சொன்னாரா என்று புரியவில்லை.

எது எப்படியோ..ஆட்சி மாற்றம் வந்த பின்பு வடிவேலு திரை வாழ்க்கையிலும் மாற்றம் வந்துவிட்டது .லைக்கா நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கும் இன்னும் பெயரிடப்படாத படத்தில் வடிவேலு நடிக்கிறார் சுராஜ் இப்படத்தை இயக்குகிறார் பிரமாண்டமாக உருவாக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் கோவா இந்தியாவின் பல்வேறு இடங்களில் நடக்க உள்ளது. ரீ என்ட்ரி பிரம்மாண்ட எண்ட்ரியாக அமையவுள்ளது வடிவேலுவுக்கு. இனி அவர் சோகம் மறைந்து தானும் சிரித்து நம்மையும் சிரிக்க வைப்பார் என எதிர்பார்போம்.

 

Related Articles

Stay Connected

264,228FansLike
1,876FollowersFollow
1,500SubscribersSubscribe
spot_img

To Advertise Contact :

Related Articles

ஓரடி வைத்தால் நேரடி வருவார் ஷீரடி பாபா

0
-ரேவதி பாலு ஷீரடி ஸ்ரீ சாயிபாபா மஹாசமாதியாகி இது 104 ஆவது வருடம். அதிலும் விசேஷமாக பாபா சமாதி ஆன திதியன்றே (விஜயதசமி) அவரது சமாதி தினமும் (அக்டோபர் 15) வருகிறது. ஷீரடியிலும் மற்றும்...

அழிவுகளை உண்டாக்கும் ஆளில்லா விமானங்கள்!

0
-ஜி.எஸ்.எஸ். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்தில் அமெரிக்க ராணுவத்தால் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 10 பேர் இறந்தனர். ஆனால் பரிதாபம்.. இந்த பத்து பேரும் தீவிரவாதிகள் அல்ல. பொதுமக்கள்! தவறான தகவல் கிடைத்ததால்...

வயதானாலும் உற்சாகமாக வாழலாம்! – உலக முதியோர் தின சிறப்புக் கட்டுரை!

0
தொகுப்பு: பத்மினி பட்டாபிராமன்     இந்தியாவில் முதியோர் நலத்துக்காக மட்டுமே இயங்கி வரும் முதல் மல்டி ஸ்பெஷாலிடி மருத்துவமனை “ஜெரிகேர்’’ ஆகும். முதியோர் நலத்திற்கான சேவைகளை உலக தரத்தில் வழங்கி வரும் இம்மருத்துவமனையை டாக்டர். லட்சுமிபதி...

தடுமாறுகிறதா காங்கிரஸ் கட்சி?

0
-ஜாசன் ( மூத்த பத்திரிகையாளர்). மத்தியில் காங்கிரஸ் கட்சி தேசிய அந்தஸ்தை இழக்கத் தொடங்கி விட்டதோ என்று எண்ணும் அளவுக்கு சமீபத்திய நிகழ்வுகள் காணப்படுகின்றன. காங்கிரஸில் என்றுமே கோஷ்டி பூசலுக்குப் பஞ்சமில்லை. ஆனால், இப்போது அது...

தமிழக புதிய ஆளுநர்: அரசியல் கட்சிகள் அஞ்சுவது ஏன்?

0
- ரமேஷ் சுந்தரம். தமிழகத்தின் புதிய ஆளூநராக ஆர்.என்.ரவி நியமிக்கப் பட்டுள்ளார். ஏற்கனவே தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித், தற்போது பஞ்சாப் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து நாகாலாந்து மாநில ஆளுநராக உள்ள ஆர்.என்.ரவியை...
spot_img

To Advertise Contact :