வயிற்றுப் புண், மூலத் தொந்தரவுக்கு, சோத்துக் கத்தாழை மிகவும் நல்லது. அதை தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக்கி ஏழெட்டு முறை நன்றாக கழுவுங்கள். (கசப்பு போவதற்கு) அத்துடன் கெட்டித் தயிர் ஒரு கரண்டியளவு விட்டு, மிக்ஸியில் நன்றாக அடித்து, அரை தம்ளர் அளவு தினமும் (3 நாட்கள்) காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். அதன்பின் 3/4 மணி நேரம் கழித்து பால், டீ சாப்பிடலாம். விரைவில் குணமாகும். – விஜயா லெட்சுமணன், சென்னை