0,00 INR

No products in the cart.

வானமும் வசப்படும்

பயணம்
ஹர்ஷா

விண்வெளிப் பயணம் செய்ய கடுமையான தேர்வுகளுக்குப் பின் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்ட பின்னர்தான் வீரர்கள் அனுப்பப்படுவார்கள்.

கடந்த சில ஆண்டுகளாகப் பொது மக்களை விண்வெளிக்குச் சுற்றுலா அழைத்துச் செல்லும் வர்த்தகரீதியான பயணத்தைத் தொடங்க ரிச்சர்ட் பிரான்சனின் விர்ஜின் கேலக்டிக், அமேசான் நிறுவனர் ஜெப் பெசோசின் ப்ளூ ஆர்ஜின் மற்றும் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்கள் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

விர்ஜின் கேலக்டிக், ப்ளூ ஆர்ஜின் ஆகிய இரு நிறுவனங்களும் தங்களது விண்கலத்தை விண்வெளிக்கு ஏவி வெற்றிகரமாகச் சோதனையை முடித்துள்ளன.

இந்த நிலையில் அண்மையில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தனது ‘டிராகன் கேப்சூல்’ விண்கலத்தைக் கடந்த வியாழக்கிழமை விண்வெளிக்கு அனுப்பியது. ‘இன்ஸ்பிரே‌ஷன்-4’ என்று பெயரிடப்பட்ட இந்த விண்வெளி பயணத்தில் கோடீஸ்வரர் ஜாரெட் ஐசக்மேன் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர் பயணித்தனர். இவர்கள் 4 பேரும் தொழில் முறை வீரர்கள் இல்லை சாதாரண பொது மக்கள்தான்.

கேப் கேனவரல்: எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன விண்கலம் மூலம் விண்வெளிக்கு 3 நாள் சுற்றுலா சென்ற 4 பேர் பத்திரமாக பூமிக்குத் திரும்பினர். இதன் மூலம், முதல் முறையாகப் பொதுமக்களை விண்வெளிக்கு அழைத்துச் சென்று திரும்பிய வரலாற்று சாதனையை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் படைத்துள்ளது. இதைத் தொடர்ந்து, விண்வெளி திட்டமிட்டபடி, கடந்த 3 நாள்களாக பூமியைச் சுற்றி வந்த விண்வெளி பயணிகள் தங்களது சாதனைப் பயணத்தை முடித்துக்கொண்டு கடந்த வாரம் பத்திரமாக பூமிக்குத் திரும்பினர்.

கேப்சூல் வடிவிலான டிராகன் விண்கலம் முழுக்க முழுக்கத் தானியங்கி முறையிலானது. இது, 585 கி.மீ. உயரத்தில் இருந்து, அசுர வேகத்தில் பூமியை நோக்கி வந்தது. 4 பாராசூட்கள் மூலமாக விண்கலத் தின் வேகம் படிப்படியாகக் குறைக்கப்பட்டு, புளோரிடா மாகாணத்தின் அட்லாண்டிக் கடலில் விண்கலம் பத்திரமாக இறங்கியது. உடனடியாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன படகுகள் மூலம் கேப்சூல் மீட்கப்பட்டு, அதிலிருந்து விண்வெளிப் பயணிகள் 4 பேரும் பத்திரமாக வெளியே வந்தனர். அவர்கள் முழு உடல்நலத்துடன் இருப்பதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்தது.

இந்தப் பயணத்தில் வழக்கமான விண்வெளி வீரர்களுக்கான உணவு வகைகளும் இடம் பெறவில்லை. மாறாக, குளிர்ந்த பீட்சா, சான்ட்விச், பாஸ்தா, ஆட்டுக்கறி ஆகிய உணவுகளை விண்வெளி பயணிகள் ருசித்துள்ளனர்.

இந்தப் பயணத்தின் மூலம் ரூ.1500 கோடி நிதி திரட்டப்பட்டு அது குழந்தைகள் புற்றுநோய் மருத்துவமனைக்கு நன்கொடையாக தரப்பட்டுள்ளது.

‘விண்வெளிப் பயணம் இனி எல்லாருக்குமானது. விண்வெளி என்பது விண்வெளி வீரர்களுக்கு மட்டுமானதல்ல, அனைவருக்குமானது என்பதை இத்திட்டம் உலகிற்கு எடுத்துக்காட்டி உள்ளது. இது வெறும் தொடக்கம் தான். இதுபோன்ற விண்வெளிப் பயணத் திட்டங்கள் இன்னும் ஏராளம் வரும்’ என்கிறார் பயணத்தை முடித்து திரும்பிய கோடீஸ்வரர் ஐசக்மேன்

விண்வெளிக்குக் குறைந்த கட்டணத்தில் சுற்றுலா. உடனடியாக அட்வான்ஸ் தொகையைச் செலுத்தி பதிவு செய்து கொள்ளுங்கள் என்ற டிராவல் ஏஜென்சிகளின் விளம்பரங்கள் வரும் நாள் அதிகத் தொலைவில் இல்லை.

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

உள்ளாட்சித் தேர்தல்களும் உடையும் கூட்டணிகளும்

0
கவர் ஸ்டோரி ஆதித்யா தேர்தல்கள் அறிவிக்கப்பட்டால் அரசியல் கட்சிகள் இடம் மாறி புதிய கூட்டணிகள் உருவாவது தமிழக அரசியலில் வாடிக்கை. ஆனால் இம்முறை கூட்டணியிலிருந்து வெளியேறிய கட்சிகள் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கின்றன. தமிழகத்தில் விடுபட்ட ஒன்பது...

மென்பேனாவில் எழுதுங்கள்…

0
புதிய படைப்புகளைப் படைக்கலாம். கல்கி, ‘மென்பேனா’ மூலம் உங்கள் படைப்புகளை உடனுக்குடன் கல்கி ஆன்லைன் மின்னிதழில் பதிவு செய்யலாம். www.kalkionline.com இணையதளத்தில் மென்பேனா பகுதியில் உங்கள் படைப்புகளைப் பதிவேற்ற : 1. www.kalkionline.com இணையதளத்தில் Sign in...

இனியொரு விதி செய்வோம்

0
தலையங்கம் ஒவ்வொரு ஆண்டும் புதிதாகப் பெரிய தொழிற்சாலைகள் தமிழ் நாட்டுக்கு வரவேண்டும். அதன்மூலம் தொழில் வளர்ச்சி, வரி வருவாய், புதிய வேலை வாய்ப்புகள் உயரும் என்ற எண்ணத்துடன் தமிழக அரசு பெரும் முயற்சிகளை எடுத்து...

அருள்வாக்கு

0
பாலாபிஷேகம் அல்ல; பாலபிஷேகம் ஜகத்குரு காஞ்சி மகா சுவாமிகள் ஒன்று கவனிக்க வேண்டும். ‘சந்தனாபிஷேகம்’ ‘க்ஷீராபிஷேகம்’ என்கிற மாதிரியே பல பேர் ‘பாலாபிஷேகம்’ என்கிறார்கள். அது தப்பு. ‘பாலபிஷேகம்’ என்று ‘ல’வைக் குறிலாகவே சொல்ல வேண்டும்....

உயர மருட்சி

0
கடைசிப் பக்கம் சுஜாதா தேசிகன் சமீபத்தில் ‘Turning Point: 9/11 and the War on Terror’ (திருப்புமுனை: 9/11 மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான போர்) என்ற ஆவணப் படத்தைப் பார்த்தேன். இருபது வருடங்களுக்கு முன்...