online@kalkiweekly.com

spot_img

விபத்தைத் தடுக்கும் மங்களநாதர்!

பரிகாரக் கோயில்

எம்.அசோக்ராஜா

மத்திய பிரதேசத்தின் தலைநகரான உஜ்ஜைனில் அமைந்துள்ள மங்கள நாதர் சிவாலயம், செவ்வாய் அவதரித்த தலமாகும். நவக்கிரகங்களில் ஒருவரான செவ்வாய் மங்களகரமான வாழ்வை அருள்பவர். தைரியம், வலிமை, பெருந்தன்மை, கண்டிப்பு, வைராக்கியம், பகைவரை எதிர்க்கும் ஆற்றல் ஆகியவற்றை கொடுப்பவரும் இவரே. செவ்வாய்க்கு, ‘குஜன்’ என்ற பெயரும் உண்டு. ‘கு’ என்றால் பூமி. ‘ஜன்’ என்றால் பிறந்தவன் எனப் பொருள். இவரை பூமாதேவியின் மகன் என்பார்கள். மங்களன், அங்காரகன் என்பது இவரது வேறு பெயர்களாகும். இத்தலம், ‘அங்காரக க்ஷேத்ரம்’ என்றும் அழைக்கப்படுகிறது.

நாட்டின் பல இடங்களில் செவ்வாய் பகவானுக்கு கோயில்கள் இருந்தாலும், செவ்வாய் பிறந்த தலமாக உஜ்ஜைனி மங்களநாதர் கோயில் வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. செவ்வாய் பகவான் செந்நிற மேனி, புன்னகை பூத்த முகம், நான்கு கைகள், கதை, சக்தி ஆயுதம், சூலம் ஏந்தி வரத முத்திரையுடன் விளங்குபவர்.

பல நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்ததாகக் கருதப்படும் இந்த ஆலயத்தில் செவ்வாய் பகவான், மங்களநாதர் என்ற பெயரில் சிவலிங்க திருமேனியாக காட்சியளிக்கிறார். பொதுவாக, சிவன் கோயில்களில் மூலவருக்கு எதிரில் நந்தி சிலை இருக்கும். ஆனால், இங்கு மங்களநாதர் கருவறையின் முன்பு செவ்வாய் பகவானின் வாகனமாகக் கருதப்படும் ஆடு உருவம் வைக்கப்பட்டுள்ளது.

‘ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்தில் 4, 7, 8, 12 இடங்களில் செவ்வாய் இருந்தால், அது தோஷமாகக் கருதப்படுகிறது. இதனால் அந்த ஜாதக ருக்கு திருமணத் தடை, விபத்து, அடிக்கடி காயம் ஏற்படுதல் போன்றவை நிகழும்’ என்கிறது ஜோதிட பலன். இந்த தோஷ நிவர்த்திக்காக மக்கள் செவ்வாய் தலத்திற்குச் சென்று, செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்து பரிகார பூஜைகள் செய்கின்றனர். மங்களநாதர் கோயில் கருவறை, பூமத்தியரேகையின் நேர்க்கோட்டில் அமைந்துள்ளது.

திருமணத்தடை ஏற்படுபவர்கள், செவ்வாய்க் கிழமைகளில் விரதம் இருந்து அங்காரனுக்கு சிவப்பு ஆடை சாத்தி, செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்து, துவரம் பருப்பு பொடி கலந்த அன்னத்தை நிவேதனம் செய்து, பிறகு அதனை தானம் செய்கிறார்கள்.

கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் கைகளால் சுவாமிக்கு அபிஷேகம் செய்யலாம். அர்ச்சனை அபிஷேகப் பொருட்களை வெளியில் விற்கும் கடையில் வாங்கும் பக்தர்கள், பூசாரி மந்திரம் சொல்லச் சொல்ல, தாங்களாகவே சாமிக்கு அபிஷேகம் செய்கிறார்கள்.

செவ்வாய் அவதார வரலாறு :

முன்னொரு காலத்தில் அந்தகாசுரன் என்ற அரக்கன், இத்தலத்தில் சிவபெருமானை நோக்கிக் கடும் தவம் இருந்தான். அவனது தவத்தைக் கண்டு மகிழ்ந்த பரமேசுவரன் அவனுக்குக் காட்சி தந்தார். ஈசனை தரிசித்த அந்தகாசுரன், “இறைவா! உமது தரிசனம் கண்டு எல்லையில்லா ஆனந்தம் அடைந்தேன். எனது ரத்தம் தரையில் விழுந்தால் அதில் இருந்து என்னைப்போல நூற்றுக்கணக்கானவர்கள் பிறக்க வேண்டும். எனது உள்ளம் மகிழும்படியாக இந்த வரத்தை எனக்கு வழங்கி அருள வேண்டும்” என்று வேண்டினான்.

பக்தர்கள் வேண்டியதை வாரி வழங்குவதே இறைவனின் முதல் கடமை என்பதால், அசுரன் கேட்ட வரத்தை அப்படியே வழங்கினார் சிவபெருமான்.

வரம் பெற்ற அரக்கனுக்கு ஆணவம் தலை தூக்கியது. மமதையில் தன் நிலை மறந்து உஜ்ஜைனி நகரில் இருந்த முனிவர்கள், ரிஷிகள், மக்கள் என பேதம் பார்க்காமல், அனைவருக்கும் துன்பம் விளைவித்தான். அவனது செய்கையால் நிலைகுலைந்துபோன முனிவர்கள், சிவபெருமானை நோக்கி வழிபட்டனர். பக்தர்களின் துயர் களைய, அந்தகாசுரனுடன் போரிட முடிவு செய்தார் பரமேஸ்வரன்.

ஒரு நாள் இரவு அவர் சூலாயுதத்துடன் அந்தகாசுரன் முன் தோன்றினார். வந்திருப்பது பரம்பொருள் என்று அறியாத அசுரன், சிவனை எதிர்த்துத் தாக்கினான். இருவருக்கும் இடையே கடுமையான போர் நடந்தது. இந்த யுத்தம் பல ஆண்டுகள் நீடித்தது. போர் முடிவடையும் நேரத்தில் சிவபெருமானின் உடலில் இருந்து வியர்வை துளிகள் நிலத்தில் விழுந்தன. அது நிலத்தை இரண்டு பகுதிகளாகப் பிரித்து, செவ்வாய் கிரகம் பிறந்தது. அரக்கன் அந்தகாசுரனின் உடலில் இருந்து விழுந்த ரத்தத் துளிகளை செவ்வாய் கிரகம் உள்வாங்கி அதை பூமியில் விழாமல் தடுத்தது. இதைத் தொடர்ந்து சிவபெருமான் அந்தகாசுரனை சூலாயுதத் தால் அழித்தார். தேவர்களும், முனிவர்களும் ஆனந்தம் அடைந்தனர்.

இந்த வரலாறு கந்த புராணத்தில் கூறப்பட்டுள்ளது. அரக்கனின் ரத்தத்தை செவ்வாய்க்கிரகம் உள்வாங்கி கொண்டதால் அது சிவப்பாக இருப்பதாக கூறப்படுகிறது.

மங்களநாதர் கோயிலில் மார்ச் மாதம் அங்காரக சதுர்த்தியன்று சிறப்பு பூஜையும், சிறப்பு யாகங்களும் நடைபெறுகின்றன. அப்போது நடை பெறும், ‘பட்’ பூஜா மிகவும் பிரசித்தமானது. சதுர்த்தி, சப்தமி, அஷ்டமி, துவாதசி திதிகளிலும், செவ்வாய்க்கிழமைகளிலும் இந்த ஆலயத்தில் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.

கோயிலில் உள்ள சிவலிங்கத்திற்கும், உத்ஸவ மூர்த்திக்கும் பக்தர்கள் தயிரால் அபிஷேகம் செய்து அன்னாபிஷேகம் செய்கின்றனர். பிறகு அந்த அன்ன பிரசாதத்தை பக்தர்களுக்கு விநியோகம் செய்கின்றனர். தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற அந்த வேண்டுதலை செய்கின்றனர்.

கோயில் நடை காலை 6 மணிக்குத் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுகின்றன. பின்னர் கற்பூர ஆரத்தி காட்டும்போது ஏராளமான கிளிகள் கூட்டமாக வந்து கோயில் வளாகத்தில் காத்திருக்கும். அந்தக் கிளிகளுக்கு, அர்ச்சகர் பிரசாதம் கொடுக்கிறார். தரிசனத்திற்காக வரும் பக்தர்களும், கிளிகளுக்கு தானியங்களை உணவாக வழங்குகிறார்கள். மங்களநாதரே கிளி வடிவில் வந்து பிரசாதம் பெற்றுக்கொண்டு, பக்தர்களின் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதாக நம்பிக்கை.

அமைவிடம் : உஜ்ஜைனி ரயில் நிலையத்தில் இருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ள சிப்ரா நதிக்கரையில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது.

Related Articles

Stay Connected

264,228FansLike
1,876FollowersFollow
1,500SubscribersSubscribe
spot_img

To Advertise Contact :

Related Articles

ஆச்சரியத்தின் உச்சமாக குறுக்குத்துறை முருகன் கோயில்!

0
ஆலயம் கண்டேன் - ஸ்வாமி தமிழகத்தில் எண்ணிலடங்கா கோயில்களில் சொல்லித் தீராத பலப்பல அதிசயங்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. அந்த வகையில் ஆண்டுக்கு ஒரு முறை நீரில் மூழ்கி காணாமல் போகும் அதிசய முருகன் திருக்கோயில்...

பலிபீடத்தைத் தொட்டால் தோஷமா?

0
அறிவோம் தெளிவோம் - கவிதா பாலாஜிகணேஷ் எல்லா ஆலயங்களிலும் கொடி மரத்துக்கு அடுத்தபடியாக பலிபீடம் அமைத்து இருப்பார்கள். கொடி மரத்தை வழிபட்டு முடித்ததும் பலிபீடத்தை வழிபட வேண்டும். பொதுவாக, பலிபீடங்கள் மூன்று அடுக்கு பீடம் மீது தாமரை...

பரமேஸ்டிக்கு அருளிய பரந்தாமன்!

0
அருளாடல் - ஸ்ரீதர் பூரி திருத்தலத்தில் பரமேஸ்டி என்ற தையற்காரர் வசித்து வந்தார். புற அழகில் அவலட்சணமான கூன்முதுகர். ஆனால், அக அழகில் ஸர்வ லஷ்ணத்துடன் எல்லா நற்பண்புகளும் பெற்ற சிறந்த விஷ்ணு பக்தர்! தையற்...

வாழ்வின் அர்த்தம்!

0
படித்ததில் பிடித்தது - ஏ.எஸ்.கோவிந்தராஜன் போர்க்களத்தில் மகன் அபிமன்யு தனது கண் முன்னே இறப்பதைப் பார்த்து கேவிக் கேவி கண்ணீர் விட்டு அழுதான் அர்ஜுனன். அதைப் பார்த்து சாரதியாக இருந்த கண்ணனும் கேவிக் கேவி கண்ணீர்...

அழகு சுந்தரனாக அருளும் வரதராஜ பெருமாள்!

0
ஆலயம் கண்டேன் - ஆர்.வி.பதி காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர்  தாலுகாவில் அமைந்த ஆலப்பாக்கம் என்ற சிறிய கிராமத்தில் அமைந்துள்ள அழகு சுந்தர வரதராஜ பெருமாள் திருக்கோயில் சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட மிகப் பழைமையான திருக்கோயிலாகும்....
spot_img

To Advertise Contact :