ஷாருக் கான் மகன் கைது போலீஸ் நடத்திய நாடகம்: மகாராஷ்டிரா அமைச்சர் அதிரடி!

ஷாருக் கான் மகன் கைது போலீஸ் நடத்திய நாடகம்: மகாராஷ்டிரா  அமைச்சர் அதிரடி!

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் மீது போதைப்பொருள் பயன்படுத்தியாக வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த கைது விவகாரமே வெறும் நாட்கம் என்று மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக் அதிரடி கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது:

ஷாருக்கானை மிரட்டி பணம் பறிக்

கவே அவர் மகன் ஆர்யன் கான் மீது பொய்யாக போதை பொருள் வழக்கு போடப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். விரைவில் போதை பொருள் தடுப்பு பிரிவின் பணம் பறிக்கும் செயல் அம்பலமாகும். மகாராஷ்டிர அரசை அவமானப்படுத்தவே இந்த போதைப்பொருள் சோதனை நாடகம். மேலும் தங்களது அடுத்த குறி ஷாருக்கான் என்று கடந்த ஒருமாதகாலமாகவே போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் செய்தியாளர்களிடம் கூறி வந்தனர்.

இவ்வாறு நவாப் மாலிக் கருத்து தெரிவித்துள்ளார்

.மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதை பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் பாலிவுட் நடிகர் ஷாருக்

கான் மகன் ஆர்யன் கான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில். போலீஸ் காவல் நேற்றுடன் (அக்டோபர் 7) முடிவடைந்த நிலையில், ஆர்யன் கானை 14 நாள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆர்யனின் ஜாமின் மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

ஷாருக்கான் மகன் கைதுக்கும், பாஜகவிற்கும் தொடர்புள்ளதாக நவாப் மாலிக் தெரிவித்திருந்த கருத்து ஏற்கனவே சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விளக்கம் அளித்திருந்தாலும் மராட்டிய அமைச்சரே அந்த மாநில போலீசாரின் நடவடிக்கையை விமர்சித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com