ஆப்கானில் நிற்கும் அமெரிக்க விமானங்கள்: அதில் ஊஞ்சலாடும் தலிபான்கள்!

ஆப்கானில் நிற்கும் அமெரிக்க விமானங்கள்: அதில் ஊஞ்சலாடும் தலிபான்கள்!

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணூவம் விட்டுச் சென்ற விமான இறக்கையில், தலிபான்கள் தூளி கட்டி ஊஞ்சலாடும் வீடியோவை சீன அதிகாரி வெளியிட்டு கிண்டல் தெரிவித்துள்ளார்

ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சியைப் பிடித்ததையடுத்து கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் நிறுத்தியிருந்த தனது படைகளை திரும்ப அழைத்து சென்றது. அமெரிக்க ராணூவத்தினர் அங்கிருந்து கிளம்பும் முன்னர் தாங்கள் பயன்படுத்திய ராணுவ உடைகள், ஹெலிகாப்டர், போர் விமானங்கள், ஜீப்கள் உள்ளிட்டவற்றை அங்கேயே விட்டுவிட்டுச் சென்றனர். குறிப்பாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள போர் விமானங்கள், ஹெலிகாப்டர் போன்றவற்றை ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா விட்டுச் சென்றது குறித்து உலக நாடுகள் கவலையுற்றன.ஆனால் விமானங்கள் உட்பட அந்த தளவாடங்களை பயன்படுத்த முடியாது என்று அமெரிக்கா அறிவித்தது.

இந்நிலையில் சீனாவின் வெளியுறவு அமைச்சக அதிகாரி லிசின் எஜாவோ தனது டுவிட்டர் பதிவில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அமெரிக்க படைகளால் காபூலில் விட்டுவிட்டு வந்த சேதமடைந்த போர் விமானங்களின் இறக்கையில் தூளி கயிறு கட்டி, அந்த கயிற்றில் தாலிபன்கள் ஊஞ்சல் ஆடிக் கொண்டுள்ளனர்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவு: 'இது அமெரிக்க ஆட்சியாளர்களின் கல்லறை; அவர்களின் போர் விமானங்களை தாலிபான்கள் தொட்டில்களாகவும், விளையாட்டு பொம்மைகளாகவும் மாற்றி விட்டனர்' என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com