ஆஸ்திரேலியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பதற்றம்!

ஆஸ்திரேலியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பதற்றம்!

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் இன்று அதிகாலை 5.8 ரிக்டர் அளவுக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மெல்பர்ன் நகரத்தில் பல கட்டடங்கள் குலுங்கி சேதமுற்றதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதுகுறித்து ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மாரிசன் கூறியதாவது: ஆஸ்திரேலியாவில் நிலநடுக்கம் ஏற்படுவது மிகவும் அபூர்வம். ஆனால் இன்று இங்கு ஏற்பட்ட நிலந்டுக்கம் மிகவும் வருத்தமான நிகழ்வு. ஆனால் இதுவரை உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.

மெல்பர்ன் நகரில் 5.8 அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தையடுத்து தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் நியூ செளத் வேல்ஸ் பகுதிகளிலும் அடுத்தடுத்து பூகம்பங்கள் உணரப்பட்டன. சமீபத்திய ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இது எனப்படுகிறது. விக்டோரியா மாகாண அவசர சேவை அமைப்பு நிலநடுக்கத்துக்குப் பிறகான அதிர்வுகளை எதிர்கொள்ள மக்களை எச்சரித்திருக்கிறது. பலவீனமாக கட்டடங்களிலிருந்து பாதுகாப்பாக இருப்பது, வாகனங்கள் ஓட்டுவதை தவிர்ப்பது போன்ற விஷயங்களை வலியுறுத்தியுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் சில டிராம் பாதைகள் பாதிக்கப்பட்டுள்ளன. அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றூம் மருத்துவமனைகளில் இருந்த மக்களை வெளீயேற்றி பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக மாகாண நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com