ஏர் இந்தியாவை வாங்க டாடா நிறுவனம் விண்ணப்பம்!

ஏர் இந்தியாவை வாங்க டாடா நிறுவனம் விண்ணப்பம்!

ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்கும் போட்டியில் டாடா சன்ஸ் நிறுவனம் மற்றும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத் தலைவர் அஜய் சிங்கும் களமிறங்கியுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

நாட்டின் மிகப் பெரிய சர்வதேச விமான நிறுவனமான ஏர் இந்தியா பெரும் நஷ்டத்தில் இயங்கி வரும் நிலையில் அதை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டதற்கான அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில் ஏர் இந்தியாவை வாங்கும் போட்டியில் டாடா சன்ஸ் நிறுவனமும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் தலைவர் அஜய் சிங்கும் தொகைகளை குறிப்பிட்டு விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அஜய் சிங் தனது நிறுவனம் வாயிலாக அல்லாமல் தனிப்பட்ட முறையில் ஏர் இந்தியாவை வாங்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஏர் இந்தியாவை வாங்க மேலும் சில நிறுவனங்கள் போட்டியில் இருப்பதாக விமானப் போக்குவரத்துத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டாடா நிறுவனம் 1932-ல் ஏர் இந்தியா நிறுவனத்தை தொடங்கியது. பின்னர் 1953-ல் ஏர் இந்தியா தேசியமயமாக்கப்பட்டு மத்திய அரசு வசம் சென்றது. தற்போது 68 ஆண்டுகளுக்கு பிறகு ஏர் இந்தியாவை மீண்டும் சொந்தமாக வாங்க டாடா நிறூவனம் களமிறங்கியுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

(ஏர் இந்தியா, ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் தலைவர் அஜய் சிங், டாடா சன்ஸ் நிறுவனம், நஷ்டத்தில் இயங்கி வரும் ஏர் இந்தியா)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com