– கோவிந்தராஜன், கோடம்பாக்கம்.வாசகர் ஜமாய்க்கிறாங்ககருப்பு அரிசியை இந்தியர்கள், 'கவுனி அரிசி' என்கிற பெயரால் அழைக்கின்றனர். 'கவுனி' என்ற சொல்லுக்கு, 'கோட்டை வாசல்' என்று பொருளாகும். மேலும், கருப்பு அரிசி இதய நோய், ரத்தக்கொதிப்பு, மாரடைப்பு, சிறுநீரகப் பாதிப்பு, புற்றுநோய், சர்க்கரை நோய் போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்கிறது. கருப்பு அரிசியைக் கொண்டு, ஆரோக்கியமான ரொட்டி செய்வது எப்படி என்று பார்ப்போம்.தேவையான பொருட்கள் :கருப்பு அரிசி மாவு – 2 கப்பச்சை மிளகாய் – 3 (பொடியாக நறுக்கியது)இஞ்சி விழுது – 2 டீஸ்பூன்கறிவேப்பிலை – சிறிதளவு (நறுக்கியது)எண்ணெய், உப்பு, தண்ணீர் – தேவையான அளவுசெய்முறை :முதலில் கருப்பு அரிசியை ஐந்து மணி நேரம் ஊற வைத்து, பின் நிழலில் காய வைத்து அரைத்துக்கொள்ள வேண்டும். பிறகு அடுப்பில் தேவையான அளவு தண்ணீரை சூடாக்கி, தேவையான அளவு உப்பு, எண்ணெய், பச்சை மிளகாய், இஞ்சி விழுது, கறிவேப்பிலை மற்றும் கருப்பு அரிசி மாவை சேர்த்துக் கிளறவும்.பின்னர் தோசைக்கல்லை அடுப்பில் வைத்துச் சூடாக்கி, சிறிது எண்ணெய் விட்டு மாவை சிறு உருண்டையாக எடுத்து, வட்டமாகத் தட்டி, தோசைக்கல்லில் போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு, இருபுறமும் வேக வைத்து எடுத்தால் ஆரோக்கியம் நிறைந்த கருப்பு அரிசி ரொட்டி தயார்!