கிரிப்டோ கரன்சிக்கு சீனாவில் தடை: அதன் மதிப்பு உலகளவில் சரிவு!

கிரிப்டோ கரன்சிக்கு சீனாவில் தடை: அதன் மதிப்பு உலகளவில் சரிவு!

உலகம் முழுவதும் கிரிப்டோ கரன்சி மதிப்பு சரிந்து வருவதால் அதன் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உலகெங்கும் கடந்த சில மாதங்களாக கிரிப்டோ கரன்சி எனப்படும் பிட் காயின் போன்ற பரிவர்த்தனைகளுக்கு ஆதரவு இருந்தது. ஆயினும் இந்த கரன்சிகளின் மதிப்பில் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டன. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை சீனாவில் இந்த கிரிப்டோ கரன்சிகளுக்கு சீனாவின் மத்திய வங்கி தடை விதித்தது. அதன்படி சீனாவில் பிட் காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரன்சி மூலம் நடைபெறும் பணப் பரிவர்த்தனை, வர்த்தகம் ஆகியவை சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே சீனாவில் கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனை முழுவதுமாக முடங்கியது.

இந்நிலையில் கிரிப்டோ கரன்சி மதிப்பு உலக சந்தையில் இறங்கத் தொடங்கி உள்ளது.

தற்போது பிட் காயின் மதிப்பு 43 ஆயிரம் டாலருக்குக் கீழே சரிந்துள்ளது. பிட் காயின் மதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் 1% மேல் சரிந்துள்ளது. மற்ற முன்னணி கரன்சிகளின் மதிப்புக்களும் தாறுமாறாகச் சரிந்துள்ளன. குறிப்பாக எதிரியம் 2% மற்றும் கர்டோனோ 2% மேலும் சொலானா 7% வரை சரிந்துள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com