சாக்குத் துணி அணிந்து அம்மனுக்கு நேர்த்திக் கடன்!

சாக்குத் துணி அணிந்து அம்மனுக்கு நேர்த்திக் கடன்!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அம்மன் கோயிலில் பக்தர்கள் சாக்குத் துணியால் உடை அணிந்துவந்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.

கமுதி அருகே செங்கப்படை கிராமத்தில் உள்ள அடகுவல்லி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். அந்தவகையில்  கடந்த 5-ம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கிய இத்திருவிழாவின் நிறைவு நாளான நேற்று முளைப்பாரி எடுக்கும் விழா நடைபெற்றது. இதனையொட்டி பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தும், பொங்கல் வைத்தும் வழிபாடு நடத்தினர். இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பக்தர்கள் பலர் சேத்தாண்டி வேடம் அணிந்து வந்து வேண்டுதலை நிறைவேற்றினர்.

அதாவது தங்கள்  கோரிக்கைகள் நிறைவேற்றப் பெற்ற பக்தர்கள் நேர்த்திக் கடனாக சாக்குத் துணியை அணிந்து மேளதாளங்களுடன் கிராமத்தை சுற்றிவந்து கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்தினர். இவ்வாறு வழிபாடு செய்வதன் மூலம், அடகுவல்லி அம்மன் தம்மைக் காப்பதாக பக்தர்கள் நம்பிக்கை. பக்தர்களீன் இந்த வினோத நேர்த்திக்கடன் முடித்தபின் அடகுவல்லி அம்மனுக்கு அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடும் நடத்தப்படுகிறது.

ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த வினோதமான வழிபாட்டை காண கமுதி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் செங்கப்படை கிராமத்திற்கு திரண்டு வந்தது குறீப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com