பெரியார் பிறந்தநாள்: உறுதிமொழி ஏற்ற முதல்வர் மு.க ஸ்டாலின்!

பெரியார் பிறந்தநாள்: உறுதிமொழி ஏற்ற முதல்வர் மு.க ஸ்டாலின்!

இன்று பெரியார் பிறந்த நாளையொட்டி தமிழக அரசு சார்பில் முதல் முறையாக சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

தந்தை பெரியார் பிறந்தநாள் சமூக நீதி நாளாக கடைபிடிக்கப்படும் என்று சமீபத்தில் தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, இன்று தந்தை பெரியாரின் 143-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் உருவப் படத்துக்கு மு..ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற சமூக நீதி நாள் உறுதி மொழி நிகழ்ச்சியில் முதல்வர் தலைமையில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் தலைமை செயலாளர் உட்பட அரசு அதிகாரிகள் என அனைவரும் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்றனர்.

அப்போது, சமூக நீதி நாள் உறுதிமொழியை முதல்வர் வாசித்ததாவது:

பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும் என்ற அன்பு நெறியை எனது வாழ்வியல் வழிமுறையாக கடைபிடிப்பேன். யாதும் ஊரே யாவரும் கேளிர் எனும் பண்பு நெறியை எனது வாழ்வின் வழிமுறையாக கடைபிடிப்பேன். சுயமரியாதை, ஆளுமை திறனும், பகுத்தறிவு கூர்மை பார்வையும் கொண்டதாக எனது செயல்பாடுகள் அமையும் என்று கூறி இந்நாளில் உறுதி ஏற்கிறேன்.

இவ்வாறு முதல்வர் உறுதிமொழி ஏற்றார்.

(பெரியார் பிறந்தநாள், சமூக நீதி நாள், முதல்வர் உறுதிமொழி).

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com