மடாதிபதி தற்கொலை வழக்கு: சீடர் உயிருக்கு அச்சுறுத்தல்!

மடாதிபதி தற்கொலை வழக்கு: சீடர் உயிருக்கு அச்சுறுத்தல்!

உத்தரப்பிரதேச மாநிலம், அலகாபாத்தில் பாகம்பரி என்ற மடத்தின் தலைமை மடாதிபதியான மகந்த் நரேந்திரகிரி சில நாட்களுக்குமுன் தற்கொலை செய்துகொண்டு இறந்தார். இவர் அகில பாரதிய அகாடா பரிஷத் தலைவராகவும் இருந்து வந்தார். இந்நிலையில், தூக்கில் தொங்கிய நிலையில் அவர் சடலத்தை மீட்ட போலீசார், நரேந்திரகிரி எழுதியிருந்த கடிதத்தையும் கைப்பற்றினர்.

அந்த கடிதத்தில் நரேந்திரகிரி எழுதியிருந்ததாவது:

'என் தற்கொலைக்கு சீடர்கள் ஆனந்த் கிரி, அத்யா பிரசாத் திவாரி, சந்தீப் திவாரி ஆகியோர்தான் காரணம். எனது போட்டோவை, ஒரு பெண்ணுடன் இருப்பது போல மார்பிங் செய்து அதை சமூக வலைதளத்தில் வைரலாக்க, ஆனந்த் கிரி திட்டமிட்டிருப் பதாக தகவல் வந்தது. நான் மரியாதையுடன் வாழ்ந்தவன். இப்படிப்பட்ட அவப்பெயருடன் வாழ விரும்பாததால் கடந்த 13-ஆம் தேதியில் இருந்தே தற்கொலை செய்ய முயற்சித்தேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில் நரேந்திர கிரி கூறி உள்ளார். இதையடுத்து ஆனந்த் கிரி உட்பட 3 சீடர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.இதுகுறித்து விசாரிக்க சிபிஐக்கு உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பரிந்துரைத்துள்ளார்.

இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆனந்த் கிரி தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக நீதிமனறத்தில் கூறியதை அடுத்து, நீதிபதி அவருக்கு சிறையில் பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com