லிப்ட்: ஹைடெக் திகில் பேய்ப்படம்!

லிப்ட்: ஹைடெக் திகில் பேய்ப்படம்!

-ஆர்.ராகவ்குமார்.

லிப்ட்' படத்தை சாப்ட்வேர் துறையில் பணியாற்றுபவர்களின் யதார்த்தமான நிலையை ஒரு பேய் கதை பின்னணணியில் சொல்லி உள்ளார் டைரக்டர் வினீத் வரபிரசாத்.

குரு (கவின் ) பிரபலமான மென் பொருள் நிறுவனத்தில் ப்ராஜெக்ட் மேனேஜராக பணிக்கு சேருகிறார். அதே கம்பெனியில் அமிர்தாவும் ஹெச்ஆராக வேலைக்கு சேர்க்கிறார்.மேனேஜர் பாலாஜி ஒரு வேலையை முடித்து தரும்படி கவினிடம் கேடக், அவரும் ஒப்பு கொள்கிறார். வேலையை முடித்து விட்டு கிளம்ப வெகு நேரமாகிறது. கிளம்பும் சமயத்தில் லிப்டில் சென்றால் லிப்ட் ஒரே தளத்திற்கு திரும்பி திரும்பி வருகிறது.படிக்கட்டில் இறங்கி நடந்தால் மீண்டும் அதே இடத்திற்கு வருகிறார்.

தீடீரென வாட்ச்மேன் அங்கு வந்து கத்தியை எடுத்து கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொள்கிறார். அலுவலகத்தில் பேய் இருப்பது தெரிந்து கொண்டு அழுது புலம்புகிறார். கதவு தட்டப்படும் ஓசை கேட்டு திறந்து பார்க்கிறார். அமிர்தா நிற்கிறார்.இந்த இருவரையும் பேய் படாய் படுத்துகிறது. படத்தில் மிக குறைந்த அளவிலான நடிகர்கள் நடித்து இருக்குகிறார்கள்.இருப்பினும் பெரும்பான்மையான காட்சிகளில் கவினும்,அமிர்தாவும் நடித்து இருக்கிறார்கள். ஒரு தலை காதலை வெளிபடுத்தும் போதும், பேயை நினைத்து பதுங்குவதும், கவினுக்காக கிளைமாக்ஸில் உர்குவதும் அமிர்தா ஆஹா! .கவின் சினிமா பயணத்தில் லிப்ட் திரைப்படம் ஒரு லிப்ட் ஆக இருக்கும் என நம்பலாம்/ ஹலோ எப் எம் பாலாஜி சாப்ட் வில்லனாக வந்து போகிறார்.

ஒரே இரவில் நடக்கும் இந்த கதையை சீட் முனைக்கு வந்து படம் பார்க்க வைத்ததில் கேமரா மேன் யுவாவிற்கு முக்கிய பங்கு உள்ளது.லிப்ட் மேலும் கீழும் வரும்போது கேமரா கண்களால் நம்மை பயமுறுத்துகிறார். பிரிட்டோ மைக்கேலின் பின்னணி இசை, பேய் நம் பக்கத்தில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. சாப்ட்வேர் தொழிலார்களை பற்றி ''லட்ச கணக்கில் சம்பளம், ஸ்டைலான வாழ்கை முறை, பார்ட்டி என நம் பிம்பம் தவறானது. அதன் பின்னணீயில் பணி நிரந்தரமின்மை என்ற இருள் இருப்பதை'' இப்படம் உணர்த்துகிறது.

லிப்ட் திகில் கலந்த சோகம்.ராகவ்  குமார் 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com