வயதானாலும் உற்சாகமாக வாழலாம்! – உலக முதியோர் தின சிறப்புக் கட்டுரை!

வயதானாலும் உற்சாகமாக வாழலாம்! – உலக முதியோர் தின சிறப்புக் கட்டுரை!

தொகுப்பு: பத்மினி பட்டாபிராமன்

இந்தியாவில் முதியோர் நலத்துக்காக மட்டுமே இயங்கி வரும் முதல் மல்டி ஸ்பெஷாலிடி மருத்துவமனை "ஜெரிகேர்'' ஆகும். முதியோர் நலத்திற்கான சேவைகளை உலக தரத்தில் வழங்கி வரும் இம்மருத்துவமனையை டாக்டர். லட்சுமிபதி அவர்களுடன் இணைந்து நிறுவியவர் டாக்டர் ஸ்ரீனிவாஸ். இவர் முதியோர் நலத்துறை மருத்துவத்தில் 25 வருடங்களுக்கு மேல் அனுபவம் கொண்டவர்.

இன்று உலக முதியோர் தினமாக  (அக்டோபர் 1-ம் தேதி) அனுசரிக்கப் படுவதை முன்னிட்டு டாக்டர். ஸ்ரீனிவாஸை கல்கி ஆன்லைனுக்காக பிரத்தியேகமாக சந்தித்துப் பேசினோம்.

*'முதியோர் நலன்' என்ற புள்ளி எந்த வயதில்  ஆரம்பிக்கிறது, டாக்டர்?

60 வயதை எட்டியவர்களை இளம் முதியோர் என்கிறோம். அப்போதிலிருந்தே முதுமை நலம் பேண வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

* முதியோர் நலன், மற்றும் அவர்களுக்கான உடல்-மன ஆரோக்கியம் ஆகியவற்றை ஜெரிகேர் எவ்வாறு அணுகுகிறது?

முதலில், முதியோர் சம்பந்தப் பட்ட முழுமையான, விரிவான மதிப்பீடு . (அதாவது Comprehensive Geriatric Assessment) இங்கு செய்யப்படுகிறது. 60 வயதைத் தொட்ட ஒவ்வொரு நபரின், தனிபட்ட மன நலம், உடல் நலம், இவற்றை கவனத்தில் கொண்டு .பரிசோதிக்கப் படுகிறது.

அவர்களின் செயல்பாடுகள், கடந்த காலத்தில் செய்த பணிகள், குடும்பம் மற்றும் நிதி நிலைமை காரணமாக ஏற்படும் மன அழுத்தம் போன்றவற்றைத் தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல் அவர்களுக்கு ஆரோக்கியமான உடல் நிலை, மன நிலை கிடைக்க வழிவகை செய்கிறோம். அவர்கள் வாழ்க்கையை எளிதாக்குகிறோம். சில செயல்களை செய்யச் சொல்லி அதன் மூலம் (Functional Assessment) அவர்களது நிலையை அறிந்து கொண்டு சிகிச்சை தரப் படுகிறது. முக்கியமாக முதியோர்களுக்கு வரக் கூடிய பிரச்னைகளை முன்னதாகவே அறிந்து அதைத் தடுக்கும் 'ப்ரிவென்டிவ் கேர்'  முறைதான், சிகிச்சையை விட முக்கியமானது என்று கருதுகிறோம்.

மனச் சோர்வு அடைந்தவர்களுக்கு இளமையில் அவர்கள் செய்த சாதனைகளை நினைவு கூர்ந்து பாராட்டிப்  பேசி மன அழுத்தத்தைக் குறைக்கிறோம். இதற்கான ஆலோசனைகள் தருவதற்கென்று "க்ளினிகல் சைக்காலஜி" படித்தவர்கள் இங்கே இருக்கிறார்கள். மேலும் ஃபிசியோதெரபி மூலம் அவரவருக்கு ஏற்ற பாதுகாப்பான எளிய  உடற்பயிற்சிகளும் சொல்லித் தரப்படுகிறது. முதுமையினால் தீவிர பாதிப்படைந்தவர்களுக்கு (Vulnerable Senior Citizens) சிகிச்சை தருவதில் அதிக கவனம் செலுத்துகிறோம்.  திறமை வாய்ந்த மருத்துவர்கள், நர்ஸ்கள், ஃபிசியோதெரபிஸ்ட்கள் மூலம் முதியோர் உடல் மற்றும் மன நலம் ஜெரிகேரில் பராமரிக்கப் படுகிறது.

* முதுமைக்கே உரித்தான நோய்களைத் தடுக்க முடியுமா? அதற்கான சிகிச்சைகள் தரப் படுகின்றனவா?

முதுமையில் வரக் கூடிய அல்சைமர், டிமென்ஷியா, பார்வை மங்குதல், செவித்திறன் குறைதல்,  நோய் எதிர்ப்பு சக்திக் குறைவு போன்ற பல நோய்களைத் முற்றிலுமாகத் தடுக்க முடியாது. ஆனால் அவற்றால் ஏற்படும் பாதிப்புகளை சிகிச்சைகள் மூலம் ஓரளவு நிச்சயமாகக் குறைக்க முடியும். கட்டுப்பாட்டில் வைக்க முடியும்.

* முதியோர் இல்லங்களில் சேர்வதைப் பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

வசதிகள் கொண்ட முதியோர் இல்லங்களில் சேர்வோருக்கு, ஓரளவு நல்ல சூழ்நிலையும், மாசு இல்லாத சுற்றுச்சூழல் நன்மையும் கிடைக்கிறது.

* Geri Care Assisted Living for Senior Citizens என்பது என்ன?

இங்கே ஒருவர் அல்லது இருவர் வசிப்பதற்கேற்ற வசதியான மூத்த குடிமக்கள் குடியிருப்புக்கள்  ஜெரிகேரில் உள்ளன.  இவை முழுவதும் ஃபர்னிஷ் செய்யப்பட்டு ஏசி வசதியுடன் கூடியவை. மேலும் இந்த குடியிருப்புகளில் தினமும் 3 வேளை சுகாதாரமான சைவ உணவு, சிற்றுண்டிகள், சத்துணவு ஆகியவை வழங்கப்படுகிறது. இவை சத்துணவு நிபுணர் மற்றும் மருத்துவரின் ஆலோசனைப் படி தயாரித்து வழங்கப் படுகின்றன.  தினம் மருத்துவர்களின் கண்காணிப்பும் உண்டு. மேலும் திடீரென மருத்துவமனைக்கு செல்ல நேரிட்டால் அதற்கான உடனடி சேவை, எப்போதும் கிடைக்கும் நர்ஸிங் சர்வீஸ் இவையெல்லாம் ஜெரிகேர் மூத்த குடிமக்கள் குடியிருப்புக்களின் சிறப்பு.மொத்தத்தில் முதுமையை சுமையாக நினைக்காமல் இனிமையாக்க வேண்டும் என்பதே ஜெரிகேரின் நோக்கம்

  • என்று சொல்லி முடித்தார் டாக்டர். ஸ்ரீனிவாஸ்.

*ஜெரிகேரின் பல்தரப்பட்ட செயல்பாடுகள் என்ன டாக்டர்?

இதற்கான பதிலை ஆடியோ வடிவில் விரிவாக எடுத்துச் சொல்லியிருக்கிறார் டாக்டர்  ஸ்ரீனிவாஸ். அந்த ஆடியோ இதோ..கேட்டுப் பயனடையுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com