விநாயகர் சதுர்த்தி பண்டிகை: பூக்கள் திடீர் விலை உயர்வு!

விநாயகர் சதுர்த்தி பண்டிகை: பூக்கள் திடீர் விலை உயர்வு!

விநாயகர் சதுர்த்தி பண்டிகை மற்றும் முகூர்த்த தினத்தை முன்னிட்டு பூக்கள் மற்றும் பூஜை பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

விநாயக சதுர்த்தி பண்டிகை நாளை (செப்டம்பர் 10) கொண்டாடப்படுவதை முன்னிட்டு கோயம்பேடு சந்தையில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் பூக்கள், பழங்கள் மற்றும் பூஜைப் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். நாளை பண்டிகை மட்டுமின்றி முகூர்த்த நாளூம் என்பதால் பூக்கள் விலை அணிசமாக உயர்ந்துள்ளது.

அதன்படி அருகம் புல் ஒரு கட்டு 50 ரூபாய்க்கும், தென்னைத் தோரணம் கீற்று 20 ரூபாய்க் கும், மாவிலை ஒரு கட்டு 10 ரூபாய்க்கும், தாமரைப்பூ ஒன்று 20 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பூக்களின் விலையை பொறுத்தவரை, மல்லி ரூ. 1200, ரோஜா வகைகள் 200 முதல் 300 ரூபாய், முல்லைப் பூ, கிலோ ரூ 500-க்கும் விற் பனையாகிறது.

கொரோனா கட்டுப்பாடுகளை மீறி சந்தைகளில் மக்கள் கூட்டம் பெருமளவு கூடுவதால் வழிகாட்டு நடைமுறைகளைக் கடைபிடிக்கும்படி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com