கோவை மாநகராட்சி; முதல் பெண் மேயராக கல்பனா ஆனந்தகுமார் பொறுப்பேற்பு!

கோவை மாநகராட்சி; முதல் பெண் மேயராக கல்பனா ஆனந்தகுமார் பொறுப்பேற்பு!

கோவை மாநகராட்சியின் புதிய மேயராக திமுக வேட்பாளர் கல்பனா ஆனந்தகுமார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ள நிலையில் 96 வார்டுகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது . இதையடுத்து திமுக சார்பில் கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளராக கல்பனா ஆனந்தகுமார் நேற்று அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் மேயர் வேட்பாளருக்கு கல்பனா மட்டுமே மனுதாக்கல் செய்த நிலையில்,, இன்று அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

மிசா காலத்தில் சிறைக்கு சென்ற கட்சி தொண்டர் பழனிசாமியின் மருமகளான இவர், 19-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் , பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள கல்பனா மணியகாரம்பாளையம் ஸ்டேஷனரி மற்றும் இ -சேவை மையத்தை நடத்தி வந்தவர் . கல்பனா  இதுவரை எந்த பதவியும் வகிக்காத நிலையில், இப்போது கோவையின் முதல் பெண் மேயர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

கோவை மேயராக பொறுப்பேற்ற கல்பனாவுக்கு, தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செங்கோல் வழங்கி சிறப்பித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com